ஒரு
நண்பர் தன் வாழ்க்கையில் ஏற்பட்ட வேதனை கொண்டு சொல்லும் பொழுது அவர் வாழ்க்கைக்கு
வழி காட்டினோம். வழி காட்டிய நிலைகளில் அவர் கஷ்டங்களை நாமும் அறிந்து கொண்டோம்.
ஆனால்
அறிந்து கொண்டாலும் அவர் வாழ்க்கைக்கு வழி வகுக்கின்றது. இந்த வழியில் செயலின்
தொடரை நாம் செய்கின்றோம். அடுத்து நாம் நம் தொழிலுக்குச் செல்லும் பொழுது இந்த வேதனைப்பட்ட
மனம் கூடவே நிற்கும்.
நல்ல
மனதில் படும் இந்த வேதனையைச் சுத்தப்படுத்தப்படுத்த வேண்டும் அல்லவா…!
நண்பருக்கு
நல்ல வழிகாட்டிவிட்டோம். ஆனால் நாம் கேட்டறிந்த வேதனையை அடுத்த நிமிடமே
சுத்தப்படுத்திவிட்டு இனி உன் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று சொன்னால் நாம்
சொல்வதை அவரும் ஏற்றுக் கொண்டால் அங்கே சிறப்பாகின்றது. அவருக்கு லாபமும்
வருகின்றது.
ஆனால்
“ஐயோ…! இப்படிக் கஷ்டப்படுகின்றாயே… என்று எண்ணி..,
1.“இந்தா
இந்தப் பணத்தை வைத்துக் கொள்” என்று சங்கடப்பட்டுக் கொடுத்தால் சங்கடமே வரும்.
2.வேதனையான
உணர்வுகள் தான் வரும். அவரும் வேதனையுடன் தான் வாங்குவார்.
3.இந்த
ஒலியின் மாற்றங்கள் இந்த வேலையைச் செய்யும்.
4.இரண்டு
பேரும் கெட்டோம். உன்னாலே நான் கெட்டேன் என்னாலே நீ கெட்டாய் என்று தோப்புக்கரணம்
போட வேண்டியது தான்.
இதுவெல்லாம்
இயற்கையின் செயலின் நிலைகள். “உணர்வின் இயக்கங்கள்” தான் இவைகள்.
சாதாரண
வாழ்க்கையில் மனிதனின் உணர்வுகள் எப்படி இயக்குகின்றதோ இதைப் போன்று தான் இன்று
விஞ்ஞானமும் பல ELECTRONIC கருவிகளையும் LASAER போன்ற நிலைகளையும் உருவாக்கி
இயக்குகின்றது.
ஒரு
கம்ப்யூட்டரின் துணை கொண்டு விண்ணிலே இராக்கெட்டைச் செலுத்துகின்றார்கள். இந்தத்
தரை மார்க்கத்தில் இருப்பது நுண்ணிய அலைகள் தான்.
இதையும்
அதையும் இணைக்கப்பட்டு இயந்திரத்தின் நிலைகள் கொண்டு பல டன் எடை கொண்ட அந்த
இராக்கெட்டை விண்ணிலே பறக்க விடுகின்றார்கள்.
1.மனிதனின்
எண்ண ஒலியாலே அது உருவாக்கப்பட்டு
2.அது
திசையை அறியும் அந்த உணர்வைத் தனக்குள் பதிவு செய்த பின்
3.சிலிகனாக
(SILICON) மாற்றுகின்றான் விஞ்ஞானி.
4.உணர்வின்
நிலைகள் கொண்டு அலைகளைப் பதிவு செய்கின்றான்.
இப்பொழுது
நாம் எப்படி நாடாக்களில் பதிவு செய்த இசையோ படமோ திருப்பி அதை இயக்கும் பொழுது அந்த
இசையின் தன்மை கொண்டு மனிதனை மகிழச் செய்கின்றது… ஆடச் செய்கின்றது… இயக்கச்
செய்கின்றது.. இதெல்லாம் மனிதன் உணர்வுகள்.
இதைப்
போன்று தான் இந்தக் கம்ப்யூட்டருக்குள் இருக்கும் நிலைகள் சிலிகன் - உணர்வின்
அலைகளை ஒலி பரப்பும் நிலைகளும் நுண்ணிய அலைகளை இழுக்கும் காந்த செல்களை இயக்கச்
செய்து அதற்குள் இயக்கப்பட்டுச் சிலிகனாக மாற்றுகின்றான்.
நாம்
எண்ணும் உணர்வின் தன்மை நமக்குள் உடலுக்குள் புகுகின்றது. அதாவது காந்தம் உணர்வு வெப்பம்
மூன்றும் சேர்த்து நாம் எண்ணும் நிலைகள் அனைத்தும் சிலிகனாக (அணு செல்களாக) நம் உடலுக்குள்
மாறுகின்றது.
அதையே
தான் புற நிலைகள் கொண்டு அகத்தின் நிலைகளாகச் சிலிகனாக மாற்றுகின்றார்கள். அந்த
உணர்வின் இயக்கம் வரும் பொழுது எதுவாக மாறுகின்றது?
1.இயந்திரத்தில்
எட்ட முடியாத தூரமாக இருந்தாலும் லேசர் புலனின் இயக்கத்தை
2.கதிரியக்கச்
சக்திகளாக இருந்தாலும்
3.ரேடார்
(RADAR) என்ற ஒலி அலைகளைத் தனக்குள் இயக்கச் செய்து
4.இங்கிருந்து
(தரையிலிருக்கும் ரேடார்) விண்ணிலிருப்பதைத் தனக்குள் அந்த நுண்ணிய அலைகளைக்
கவர்ந்து இழுக்கும் நிலையும் வருகின்றது.
ஆனால்
அதே சமயம் விண்ணில் அனுப்பும் இயந்திரத்திலேயும் ரேடார் என்று நுண்ணிய அலைகள் வைக்கும்
பொழுது அந்த ரேடார் தன்னுடைய உணர்வின் ஒலி அலைகளைப் பிரித்தெடுத்து
1.இங்கே
மனிதனால் ஒலியாக எழுப்பட்டதை
2.உணர்வின்
ஒலிகள் உந்தி
3.அங்கே
இயந்திரத்தை இயக்கித் திசை திருப்புகின்றது.
“இவ்வளவு
ஆற்றல் பெற்றவன் தான் மனிதன்”. அந்தச் சிந்தனைக்குரிய நிலைகள் வரும் பொழுதுதான் “மிக
நுண்ணிய நிலைகளையும்” அறிகின்றான்.
இவ்வளவு
ஆற்றல் பெற்றிருந்தாலும் தன் வாழ்க்கையில் வரும் தீமைகளை வென்று உணர்வை ஒளியாக
மாற்றும் திறன் இல்லை என்றால் மறுபடியும் இன்னொரு உடலுக்குள் தான் செல்ல வேண்டும்.
எந்தச்
சாமியும் காப்பாற்றாது, எந்தச் சாமியாரும் காப்பாற்ற முடியாது. நாம் எடுக்கும்
உணர்வுகளை நமக்குள் “உள் நின்று” இயக்கும் உயிரான ஈசன் அது சமைத்து அணுக்களாக
விளையச் செய்துவிடும்.
விளைந்த
உணர்வுகளைத் தன்னுடன் இணைந்த உயிராத்மாவாக்கி அடுத்த நிலையை உயிர்
உருவாக்கிவிடும். இதிலிருந்து யாரும் தப்ப முடியாது. இதை நாம் தெளிவாகத் தெரிந்து
கொள்ள வேண்டும்.
ஆகவே
இந்த உடலுக்குப் பின் “நாம் எங்கே செல்ல வேண்டும்…! என்பதைச் சற்றுச் சிந்தித்துப்
பாருங்கள்.