ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 16, 2017

மகரிஷிகளின்பால் நம் நினைவினைக் கூர்மையாகச் செலுத்தும்போது “மகரிஷிகளின் அவதாரமாக” நாம் ஆகின்றோம்

பத்திரிக்கை வாயிலாக எங்கோ நடக்கும் செய்தியினை நீங்கள் படிக்கின்றீர்கள் பார்க்கின்றீர்கள்.

அந்த உணர்வைச் சுவாசிக்கும்போது அங்கே நடந்த நிகழ்ச்சிகளைச் சூரியனின் காந்தசக்தி கவர்ந்தாலும் நினைவு கூறும்போது அந்த அலைகள் நமக்குள் குவித்துப் பதட்ட நிலையாகிப் பிரம்மமாகிச் சிருஷ்டித்து விடுகின்றது.

இதைப் போலத்தான்
1.பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சியின் நிலைகள்
2.பல மகாஞானிகள் ஒன்றன் பின் ஒன்றாக மீண்டவர்கள்
3.அவர்களின் உணர்வு கொண்டு அவர்களைப் பின்பற்றி இன்றும் சப்தரிஷி மண்டலங்களாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் அந்த மகரிஷிகள்
4.அவர்கள் மனிதனாக வாழ்ந்த காலங்களில் வெளியிட்டதையும்  சூரியனின் காந்தசக்தி கவர்ந்து இன்றும் பூமியில் படர்ந்து கொண்டிருக்கின்றது.

அவர்கள் எடுத்துக் கொண்ட இந்த உணர்வினை தெளிவுறத் தெரிந்து  எடுத்துக்கொள்ளும் நிலைக்குத்தான் உபதேசிக்கின்றோம்.

1.உங்கள் நினைவினைக் கூர்மையாக்கி
2.இந்த உணர்வினை உங்களுக்குள் ஜீவனாக்கி
3.அந்த ஜீவனுக்குள் உடலுக்குள் சிவமாக்கி
4.சிவத்துக்குள் சக்தியாக இயங்கச் செய்து
5.நினைவு கொண்டு நீங்கள் எடுக்கும்போது உங்கள் நினைவுகள் கூர்மையாக அங்கே சென்று
6.அந்த உணர்வின் தன்மையை உங்களுக்குள் வளர்த்து
7.உங்கள் நினைவலைகள் அங்கே சென்று
8.உங்களுடைய கூர்மை அவதாரமாக அவர்கள் பெற்ற ஒளியின் சரீரம் நீங்களும் பெற வேண்டும் என்ற ஆசையில் தான்
9.குருநாதர் காட்டிய அருள்வழியில் உங்களுக்குள் ஊழ்வினையாகப் பதிவு செய்கின்றோம்.

இன்று நாம் தங்க நகை செய்ய செம்பும் வெள்ளியும் கலந்தாலும் தெரிந்தே தான் கலந்து செய்கின்றோம். பிறகு அடுத்த நகை செய்யும்போது, செம்பையும் பித்தளையையும் திரவகவத்தில் இட்டுச் சுத்தப்படுத்தி அடுத்த நகை செய்யச் செயல்படுகின்றோம்.

அடிக்கடி நகை செய்யும்போது சுத்தப்படுத்தாமல் செம்பு பித்தளையைச் சேர்த்துக் கொண்டிருந்தால் தங்கம் இருக்காது. அது காணாமல் போய்விடும்.

நஞ்சினை நீக்கிடும் எண்ணத்தின் வலுக்கொண்டு மற்றதை இணைத்துச் சிருஷ்டிக்கும் (பிரம்மா) அறிவு கொண்டது நம் ஆறாவது அறிவு.
1.ஒன்றுக்குள் அறிந்திடவும்
2.ஒன்றை நீக்கி விடவும்
3.ஒன்றை இணைத்திடவும் பயன்படுகின்றது.

மற்றவர்கள் படும் துயரத்தைக் கேட்டறிந்தாலும் தங்கத்தில் திரவகத்தை இட்டு செம்பையும் பித்தளையையும் ஆவியாக்குவதுபோல இருள் சூழும் நிலையை நீக்கி மெய்ஞானியின் உணர்வை நம்முடன் இணைக்கும் திறன் பெற்றது மனிதனின் ஆறாவது அறிவு.

அந்த மகரிஷிகளின் உணர்வை, நாம் நுகர்ந்து அதை நம் உடலுக்குள் சேர்த்துச் சேர்த்து அந்த தீமையான உணர்வுகளைத் துடைத்தால்
1.நம்மைக் காட்டிலும் தீமைகளை வென்ற மகரிஷிகளின் பால்
2.கூர்மையான நிலைகளில் நினைவினை அங்கே செலுத்தப்படும் பொழுது,
3.அந்த மகரிஷியின் அவதாரமாகவே நாம் ஆகின்றோம்,