ஒவ்வொரு உயிரும் “ஒவ்வொரு
நட்சத்திரத்தின்…” தன்மையைப் பெற்றது.
ஒவ்வொரு உயிரும் தனது துடிப்பின்
இயக்கத்திற்குள் வந்து மோதும் உணர்வினை ஜீவ அணுக்களாக மாற்றும் தன்மை பெற்றது. ஒவ்வொரு
நட்சத்திரத்திற்கும், சில எதிர்நிலை உணர்வுகள் இருக்கும்.
வைரக்கற்களில் வித விதமான
கலர்கள் உண்டு. ஒவ்வொரு இன வைரக்கல்லிலும் ஒவ்வொரு நட்சத்திரத்தின் வலுவின் தன்மை அதிகமாக
இருக்கும்.
இவ்விதமாக இருபத்தியேழு
விதமான வைரக்கற்கள் உண்டு.
இது போன்றே ஒவ்வொரு நட்சத்திரத்தின்
வலுவின் தன்மைக்கேற்ப இங்கே உணர்வின் இயக்கங்கள் இருக்கின்றன.
1.விண்ணிலே இருக்கக்கூடிய
நட்சத்திரங்களின் உணர்வலைகள்
2.ஒன்றுக்கொன்று ஒத்துக்
கொள்ளாது அவைகளின் மாறுபட்ட நிலைகளினால்
3.ஒன்றோடு ஒன்று எதிர்
நிலையாகும் பொழுதுதான்
4.விண்ணுலக ஆற்றலே இயக்கச்
சக்தியாக மாறுகின்றது.
அதைப் போன்று ஒரு உணர்வின்
சக்தி நம் உடலில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையாக இருந்தாலும்
1.அதற்கு “எதிர்மறையான
நிலைகள்…” வரும் பொழுதுதான்
2.உந்தி “இயங்கும்” நிலை
வருகின்றது.
இன்று மின்சாரத்தை எடுத்துக்
கொண்டாலும் அதனுள் நெகடிவ் பாசிடிவ் என்று +/- ஒன்றுக்கொன்று எதிர்மறையான நிலைகளில்
இருக்கும் காரணத்தினால்தான் பிற பொருள்களை
இயக்க முடிகின்றது.
இருபத்தியேழு நட்சத்திரங்களின்
சக்தியையும் நவக் கோள்களின் சக்தியையும் உள்ளடக்கி உயிருடன் ஒன்றிய உணர்வினை ஒளியாக
மாற்றி விண் சென்றவர்கள் - துருவ நட்சத்திரம் சப்தரிஷி மண்டலங்கள் என்பதை நாம் அறிய வேண்டும்.
துருவ நட்சத்திரத்திலிருந்து
வரும் ஒளி அலைகளை நம் தியானத்தின் மூலம் எண்ணத்தில் வலுக்கொண்டு ஏங்கி எடுத்து நம்
உயிருடன் இணைக்க வேண்டும்.
அந்த மகரிஷிகளின் அருள்
சக்தியினால் 27 நட்சத்திர வலுவின் தன்மைகளை நமக்குள் சமப்படுத்தி நமக்குள் வரும் நஞ்சான
நிலைகளை நீக்கி மெய்ப்பொருளை கண்டுணரும் தன்மையாக “விண்ணின் ஆற்றலை…” நமக்குள் எடுத்து
நம்மை வளர்க்க முடியும்.
“விசிஷ்டாத்வைதம்” என்று
எதனையும் தனக்குள் கவர்ந்து - “அருந்ததியாக”
1.இணைந்தே வாழும் நிலைகளும்
2.இணைந்தே அறிந்திடும்
நிலைகளும்
3.இணைந்தே இயங்கிடும் நிலைகளும்
4.இந்த உடலிலே இணைத்திடும்
நிலைகள் கொண்டு
5.நாம் என்றைக்கு நமக்குள்
இயக்கிடும் நிலைகளைப் பெறுகின்றோமோ
6.அன்று இதனை இணைத்திடும்
நிலைகள் ஆகி
7.மகரிஷிகளின் அருள் உணர்வைப்
பெற்று “முழுமை” அடைய முடியும்.
நமது குருநாதர் விண்ணுலக
ஆற்றலின் தன்மையை அவர் வாழ்க்கையில் கண்டறிந்தார். அதனின் நெறி முறைகளை அவருக்குள்ளேயே
விளைய வைத்தார்.
அவ்வாறு அவருக்குள் விளைய
வைத்த நிலைகளை எமக்கு உபதேசித்தார்.
அவ்வாறு உபதேசித்து அருளி
விண்ணுலக ஆற்றலை எவ்வாறு பருக வேண்டும்? மற்ற எல்லோரையும் எப்படிப் பருகச் செய்ய வேண்டும்?
என்று உணர்த்திய அவரின் அருள் வழி கொண்டுதான் உங்களுக்குள்ளும் இணைக்கின்றோம்.
அதனை நீங்கள் பெறவேண்டும்
என்று எண்ணத்தால் எண்ணும் பொழுது, மகரிஷிகளின் உணர்வுகளை நீங்கள் கவர்ந்து இந்த உணர்வை
வலுக் கொண்டதாக மாற்றிக் கொள்ள முடியும்.
இம்மனித வாழ்க்கையைக் கடந்து
செல்வோம் என்றால் நாம் அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் என்றும் நிலைத்திடும் நிலையாக
இருந்திட முடியும்.
நாம் அனைவரும் அத்தகைய
நிலைகளை “நிச்சயம் பெறுவோம்”.