ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 21, 2017

“விதியை வெல்லும் சக்தியைத்தான்” உங்களுக்குக் கிடைக்கச் செய்து கொண்டிருக்கின்றோம் – மதி கொண்டு உங்கள் தீமைகளை வெல்லுங்கள்

நம் வாழ்க்கையில் எப்பொழுதெல்லாம் துன்பங்கள் நம்மைச் சாடுகின்றதோ நம் எண்ணங்களை எப்பொழுது சிதறச் செய்கின்றதோ
1.அந்தச் சந்தர்ப்பங்களில்
2.ஒவ்வொருவரும் “ஓ…ம்… ஈஸ்வரா…” என்று உயிருடன் தொடர்பு கொண்டு
3.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டுமென்று ஏங்கித் தியானிக்க வேண்டும்.

அப்படி அதை ஏங்கும் போது இந்தக் காற்றிலே இருக்கக்கூடிய மெய்ஞானியின் அருள்சக்திகள் உங்கள் சுவாசத்திற்குள் வருகின்றது. சுவாசம் உயிருடன் மோதும்போது அந்த உணர்வின் சத்துக்கள் உணர்வலைகளாக உடலில் பாய்கின்றது.

அப்படிப் பாயும் பொழுது அந்த மகரிஷிகளின் அருள் உணர்வின் சத்துக்கள் உமிழ் நீராக உங்கள் ஆகாரத்துடன் ஆகாரமாக அது கலந்து
1.இந்த உணர்வின் அலைகள்
2.உங்கள் உடலுக்குள் ஒவ்வொரு அணுக்களிலும் “ஊடுருவுகின்றது”.

இவ்வாறு நமக்குள் அந்த மெய்ஞானிகளின் அருள் சக்தியைக் கலக்கச் செய்தால் தான் நாம் “விதியை மதியால் வெல்ல முடியும்”. ஏனென்றால் இத்தகைய நிலைகளில் விதியை மதியால் வெல்ல முடியும் என்பதை நீங்கள் அறிந்துணர்ந்து கொள்ளுங்கள் .

இன்று வாழ்க்கையில் பெருமையும் போற்றுதலும் எல்லாம் கிடைக்கும், சொல்லிலே மிக ஆனந்தமாகவும் இருக்கும். மகிழ்ச்சியும் பெறும்.

ஆனால் இன்று போற்றுதலுக்குரிய நிலைகளில் நாம் இருந்தோம் என்றால் அந்தப் போற்றல் நம்மைப் படு பாதாளத்தில் தள்ளிவிடும்.

போற்றுதலை நாம் போற்றிக் கொண்டிருப்போம். நம்மையறியாமலேயே, அது நம்மை இழி நிலைகளுக்கு இட்டுச் செல்லும். பேருண்மையை அறியாத நிலைகளில் நாம் விட்டு விடுவோம்.

1.ஒருவரைப் போற்றினால் போற்றுதலுக்குத் தக்கவாறு பொருள் கிடைக்கும்.
2.இந்த உடலுடன் நாம் மகிழலாம்.
3.ஆனால் நம் உள்ளத்தாலே நமக்குள் எடுக்கும் மெய்யுணர்வின் தன்மையை நாம் இழந்து விடுவோம்.
4.இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் விடுபட வேண்டும்.

இயற்கையின் பேருண்மைகளை நமக்கு உணர்த்திய அந்த மெய்ஞானிகள் சப்தரிஷி மண்டலங்களாக முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் என்று சொல்லும் அவருடைய சத்தான ஆற்றல்கள் நமக்கு முன் மிதந்து கொண்டிருக்கிறது .

அந்த ஆற்றலை நாம் பெறுவதற்கு நம் உணர்வின் சக்தியை விண்ணை நோக்கி ஏகி துருவ நட்சத்திரத்தினுடைய பேரருளை நாம் பெற்று அந்த விண்ணின் ஆற்றலை நாம் பெறுவதற்குண்டான முயற்சிதான் நாம் உபதேசிக்கும் இந்தத் தியானத்தின் நிலைகள்.

ஆகையினாலே ஒவ்வொருவரும் நேரத்தையும் காலத்தையும் விரயமாக்காதபடி ,ஆற்றல்மிக்க அரும் பெரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நீங்கள் சுவாசியுங்கள்.

சுவாசித்து உங்களை அறியாமல் துன்பப்படுத்திக் கொண்டிருக்கின்ற தீய உணர்வினுடைய நிலைகளை செயலிழக்கச் செய்து உங்கள் உடலுக்குள் ஆற்றல் மிக்க மெய்யுணர்வின் சக்தியைக் கூட்டிக் கொள்ளுங்கள்.

1.அந்த நல்ல உணர்வின் தன்மைகள் உங்களை மகிழச் செய்யட்டும்.
2..அப்படி மகிழச் செய்யும் உணர்வுகள் நமக்குள் பெரொளியாக மாறி
3.இந்த உடலை விட்டு நாம் சென்றாலும்,
4.ஒளிச்சரீரமாகப் பெறும் தகுதியை நாம் ஏற்படுத்திக் கொள்வோமாக.