இன்று இருளான பல பொருள்களைச் சேர்த்து ஒரு விளக்கை எரித்து
மற்ற பொருள்களைக் காண்கின்றோம். மற்ற பொருள்களைச் சேர்த்து ஒன்றை உருவாக்கச் செய்கின்றோம்.
1.அந்த உணர்வின் நிலைகள் ஆக்குவது போன்று
2.சிருஷ்டிக்கும் தன்மை பெற்ற நாம் ஒவ்வொருவரும்
3.நமக்குள் நம் எண்ணத்தை ஒளியாக்கிடல் வேண்டும்
அவ்வாறு செய்யும் தன்மைதான் அந்த மெய் ஞானிகள் சப்தரிஷி
மண்டலங்களிலிருந்து வெளிப்படுத்தும் அந்த “நாரதரான…” உணர்வின் அலைகளை நாம் சுவாசித்துப்
பழக வேண்டும் என்று சொல்வது.
நம்மையறியாமல் இருளில் மூழ்கடித்துக் கொண்டிருக்கும் இந்த
நிலையிலிருந்து நம்மை மீட்டுத்தர இந்த “நாரதர்” என்ற இந்த அணு நமக்கு வழிகாட்டும்.
இன்று ஒருவன் நமக்குத் துன்பம் செய்தான் என்றால், இப்படிச்
செய்தான் என்று நாம் ஆத்திரப்படுகின்றோம். “இரு நான் பார்க்கிறேன்” என்றும், “உன்னை அழித்துவிடுவேன்” என்று பயமுறுத்தி இருந்தால், அவனை நினைக்கும் பொழுதெல்லாம்
“திடுக்… திடுக்…” என்று நமக்குள் பயத்தை ஊட்டிக் கொண்டிருக்கும்.
அந்த பய உணர்வின் தன்மையை நாம் சுவாசித்து அப்பொழுது நாம்
செயலிழக்கச் செய்யும் நிலையும் மேலும் பல நிலைகள் வருகின்றது.
ஏனென்றால் “அவன் பதித்த நிலைகள்” நமக்குள் வேலை செய்கின்றது.
உங்களுக்குள் எத்தகைய பயம் வந்தாலும் மெய்ஞானியரின் அருள்
சக்தியைப் பதிவு செய்து, யாம் சொன்ன முறைப்படி மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறவேண்டுமென்று
ஏங்கி தியானியுங்கள்.
“ரிஷியின் மகன் நாரதன்” அவன் ஒரு முனிவன். ஏனென்றால் சப்தரிஷி
மண்டலங்களிலிருந்து வரக் கூடிய ஒளிதான் ரிஷியின் மகன். அந்த ஒளியிலிருந்து வந்ததுதான்
அந்த அணு நாரதன். அந்த உணர்வின் செயலாக்கம்தான் நாரதன்.
அந்த உணர்வின் தன்மை வந்தவுடன் அதன் ஆணைப்படி அது நல்லதை
வழிகாட்டி இருளை மாய்க்கும் தன்மை – “முனி” என்ற நிலையை அன்று தெளிவாகக் காட்டி உணர்த்தியிருக்கிறார்கள்.
ஆகையினாலே அந்த உணர்வின் ஆற்றலை நமக்குள் பெற்று இருளினை
நீக்கி அருள் வழி வாழ்வோம்.
மெய் ஞானியர்களின் அருள் சக்தியை நம்முள் பெருக்கிக் கொள்ள
வேண்டும். அந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் நிலைதான் இந்த உபதேசம். ஆகையினாலே இன்றும்
சரி “இனி… என்றும் சரி” யாம் ஒவ்வொரு நிமிடமும் ஜெபமிருந்து கொண்டே இருக்கின்றோம்.
1.யாம் ஜெபமிருந்து உங்களுக்கு அந்தச் சக்தி பெறவேண்டுமென்று
2.நீங்கள் கோவிலில் ஆராதனை செய்வது போன்றே,
3.உங்கள் அனைவருடைய உயிரான ஈசனுக்கும் ஆராதனை செய்து கொண்டிருக்கின்றோம்.
உங்கள் உயிரான ஈசனிடம் அந்த மகரிஷிகளின் அலைகள் பாய்ந்து
கொண்டே இருக்கின்றது.
அந்த ஆராதனையின் பலன்தான் எமக்கும் உங்களுக்கும், நற்பயனைக்
கிடைக்கச் செய்கின்றது. ஆகையினாலே மனிதர்களாகப் பிறந்த நமக்குள் விண்ணுலக ஆற்றலின்
அனைத்து சக்தியும் நமக்குள் உண்டு. அனைத்தையும் பார்த்து உணரக்கூடிய சக்தி ஒவ்வொரு
மனிதனிடத்திலும் உண்டு.
மண்ணுக்குள் தங்கம் மறைந்திருக்கும் பொழுது எப்படி வெளிப்படாமல்
இருக்கின்றதோ ஒரு குப்பைக்குள் மாணிக்கம் மறைந்திருக்கும் பொழுது, அந்த மாணிக்கத்தின்
செயல்கள் நாம் காணமுடியவில்லை.
குப்பைகள் விலகியபின் தான் மாணிக்கத்தின் தன்மையை நாம்
அறிந்து கொள்கின்றோம்.
ஒரு மனிதனுக்குத் தன் உணர்வின் தன்மை இல்லையென்றால் அது
வெளிச்சமான ஒரு மாணிக்கக் கல்லாக இருந்தால்,
1.நமக்குள் எண்ணம் சூனியமாக இருக்கும் பொழுது
2.அது பிரகாசிக்கச் செய்யாது.
குழந்தைகளிடத்தில் மாணிக்கக் கல்லைக் கொடுத்தோம் என்றால்
கொட்டிப் பார்க்கும். ஏனென்றால் அது அறியாத நிலைகள். ஆனால், மனிதர்களாக வாழ்ந்த நாம்
வைரத்தின் தன்மையை அறிந்துணர முடியும்.
வைரத்தை அறிந்துணரக்கூடிய ஆற்றலைப் போன்றுதான் மனிதன் நாம்
பிறந்த நிலைகள் கொண்டு மனிதனுக்குள் இருக்கக் கூடிய இயற்கையின் ஆற்றல் எவ்வாறு? என்று
தனக்குள் தான் அறிந்துணரச் செய்வதுதான் நாம் செய்யும் இந்த தியானத்தின் அற நெறி வழிகள்.