ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 30, 2017

நம் உணர்வுகள் என்றுமே பிறரை “நல் வழியில் இயக்கும் ஆற்றலாக (ELECTRONIC)” இருத்தல் வேண்டும்

நாம் என்றுமே இருளை நீக்கி உயிருடன் ஒன்றி என்றும் நிலையாக வாழ வேண்டும். இந்த மனித உடலில் குறுகிய காலமே வாழ்கின்றோம். “நேரமாகி விட்டது என்று காவியங்கள் கூறுகின்றன.
 
1.நாம் வளர வளர இந்த உடலின் ஆயுளும் குறைந்து கொண்டே வருகின்றது.
2.இந்த உடலின் தரமும் குறைகின்றது.
3.ஆகவே நாம் அதற்குள் உயிருடன் ஒன்றி ஒளியின் உடல் பெற வேண்டும்.
4.அதற்கு நாம் நமது மனதை ஒன்றாக குவித்துப் பழகுதல் வேண்டும்.

நமது வாழ்க்கையில் பகைமை என்ற உணர்வு வந்தாலும் அது நம்மை இயக்காது பிறர் உடலில் உள்ள பகைமை ஊட்டும் உணர்வுகள்நம் பார்வையால் அகன்று செல்லும் சக்தி நாம் பெறுதல் வேண்டும்.

அனைவரையும் நல் வழியில் இயக்கும்எலெக்ட்ரானிக்காக நமக்குள் வலிமை பெற்றுப் பிறருடைய தீமையை நீக்கி அவர் உடலுக்குள் சென்று அந்த உணர்வினை மாற்றும் சக்தி பெறுதல் வேண்டும். 
1.நம் உணர்வுகள் என்றுமே 
2.பிறரை இயக்கும் “எலக்ட்ரானிக்காகஉருவாக வேண்டும்.

வேதனை வெறுப்பு என்ற உணர்வுகளை நாம் கண்டு கொண்டபின் இயற்கையின் நிலைகளில் அந்த வேதனையான உணர்வுகள் நம்மை அறியாமலேயே மற்றவர்களுடைய தீமையான உணர்வுகளைக் கவரும் நிலைகளாக நமக்குள் சலிப்பு சஞ்சலம் சோர்வு போன்ற நிலைகள் ஏற்படுகின்றது.

நீங்கள் ஒருவரைப் பார்த்துவிட்டுச் செல்லுங்கள் எவன் முகத்தில் விழித்து விட்டுச் சென்றேனோ தெரியவில்லை, என் காரியமெல்லாம் கெட்டுப் போய்விட்டது என்று சொல்வார்கள்.

ஏனென்றால் அவருடைய உணர்வுகளை நாம் கவர்ந்து கொண்டபின் நம் நல்ல உணர்வுகள் கெட்டுவிடும், செயலற்றதாகி விடும். 

ஒரு பொருளின் முகப்பில் எதைப் பூசுகின்றோமோ அந்த மணம்தான் வரும். உட்பொருளில் வேறு விதமாக இருக்கும்.

இதைப் போன்று நம் ஆன்மாவின் முன் பகுதியில் அது வந்து விட்டால் முன் பகுதியில் உள்ள உணர்வே நமக்கு எதிரியாக வந்து சேரும்.

1.நல்ல உணர்வுகள் முன் பகுதியில் இருந்தால்
2.அது நம்மை வாழ வைக்கும்.
இவ்வாறு செய்தோம் என்றால் நமக்குள் தெரிந்து தெளிந்து எதிரி என்ற நிலையை மாற்றி நண்பனாக மாற்றும் திறன் பெறுகின்றது.

அதனை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

உங்களுக்குள் நீங்கள் உண்மையின் இயக்கங்களை உணர வேண்டும் என்பதற்காகத்தான் துருவ நட்சத்திரத்துடன் தொடர்பு கொண்டு இதை உபதேசிப்பது. 

ஆகையினால் நமது மனதினை ஒன்றாகக் குவித்துப் பழகுதல் வேண்டும்.

ஒரு பாலின் நறுமணங்கள் ஒன்றாக இருந்தால் ஒரே மணமாக இருக்கும். பாலில் ஒரு பக்கம் காரம் உப்பு போன்ற நிலைகள் இருந்தால் அது  காரத்தின் சுவையாக மாறும். பாலின் தரத்தின் சத்தைக் காண முடியாமல் போய்விடும்.

நாம் எத்தனையோ கோடி உடல்களில் இன்னலைச் சந்தித்தோம். ஒன்றுக்கு இரையானோம். நாமும் மற்றொன்றைத் துன்புறுத்தி உணவாக உட்கொண்டோம். இப்படிப் பல நரக வேதனைப்பட்டுத் தீமையான நிலைகளில் இருந்து மீளும் வண்ணம் மனித உடல் பெற்றது நமது உயிர்.

இந்த மனித உடலை உருவாக்கியது நமது உயிர் என்றாலும் ஒவ்வொரு உடலிலும் காத்திடும் உணர்வினைச் சேர்த்துச் சேர்த்து அதன் உணர்வுக்கொப்ப அந்தந்த உடல்களில் அதைக் காத்திடும் ஞானமும் அதன் வழி வளர்ச்சியும் பெற்று இன்று மனிதனான
1.இந்த உடலுக்குப் பின்
2.உயிர் நம்மை உருவாக்கியது என்று
3.எல்லாவற்றையும் அறிந்திடும் ஆறாவது அறிவின் துணை கொண்டு,
4.”என்றும் ஒளியின் சுடராக வாழ வேண்டும்.

இந்த மனித உடலில் ஆறாவது அறிவில் விஷத்தைக் கலக்காது அதைத் தடுக்கும் ஞானம்தான் துருவ நட்சத்திரத்தின் உணர்வினை நம் உடலுக்குள் உள்ள அணுக்களுக்குச் சேர்ப்பிக்கும் நிலை.

அதைப் பெறும் நிலையாகத்தான் இப்பொழுது உபதேசித்துக் கொண்டுள்ளோம்.

ஆகையால் நீங்கள் உங்கள் உயிரைக் கடவுளாக மதித்து ஆறாவது அறிவை அதனுடன் இணைக்கும் பருவம் பெற வேண்டும். ஆறாவது அறிவின் துணை கொண்டுதான் இன்று துருவ நட்சத்திரம் ஒளியின் சுடராக இருக்கின்றது.

1.நாம் இந்த உடலை  விட்டு எந்த நிலையில் சென்றாலும்
2.ஒரு கூட்டமைப்பாக வாழ்ந்து கொண்டிருக்கும் சப்தரிஷி மண்டலத்துடன்
3.உயிருடன் ஒன்றி உணர்வினை ஒளியாக மாற்றிச் செல்லும் அந்தக் கூட்டமைப்பில் நாம் இணைந்திடல் வேண்டும்.

ஆகவே அங்கே இணைந்து விட்டால் அகண்ட அண்டமே இருண்ட சூழ்நிலைகள் கொண்டு பல பிரபஞ்சங்கள் அழிவைத் தேடிச் சென்றாலும் அந்தந்தப் பிரபஞ்சங்களில் தோன்றிய உயிரணுக்கள் அது ஒளியின் சுடராகத்தான் வாழும்.

எத்தனையோ கோடி ஆண்டுகள் என்றும் ஏகாந்த நிலை என்ற அந்த நிலை பெறுவது இந்த மனித உடலில் தான்”. ஆனால் நம்முடைய இந்தச் சந்தர்ப்பம் மிகப் பெரிய சக்தி வாய்ந்த குருவின் அருளைப் பெற்றதினால் நம் அனைவருக்கும் அந்தப் பாக்கியம் கிடைத்துள்ளது. 

நாம் அனைவரும் அவர் காட்டும் வழியில் செல்வோம். குருவின் துணையால் அஞ்ஞானத்தை அகற்றி மெய்ஞானத் தொடரில் இந்த வாழ்க்கையைத் தொடர்வோம்.