ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 17, 2017

பிரகலாதன் சொல்லும் ஹரி ஓம் நமோ நாராயணாய நமக...!

நாம் துயரப்படுவோரைக் கண்டு அந்த வேதனையை உணர்ந்தாலும் அந்த உணர்வின் தன்மை நாம் பிறர் பட்ட துயரத்தை எண்ணிப் பார்க்கும் பொழுது நம் ஆன்மாவாகி நமக்குள் உள்ள ஆறாவது அறிவை இயங்கவிடாது அது செயல்படுத்தும்.

இதை மாற்றுவதற்கு, அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெறவேண்டும், எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் ஜீவான்மாக்கள் ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்ற உணர்வினை உடலுக்குள் செலுத்த வேண்டும்.

1.அப்பொழுது அந்த அருள் ஞானியின் உணர்வுகள் அங்கே செயல்பட்டு,
2.எப்படி சூறைக் காற்று வரும் பொழுது விஷத்தின் தன்மையை அங்கு ஈர்க்கின்றதோ
3.இதைப் போல விஷத்தை அடக்கிய அந்த அருள் ஞானியின் உணர்வின் தன்மையை,
4.நமக்குள் வேதனையை அடக்க உள்ளே செலுத்தப்படும் பொழுது,
5.”உடலிலிருந்து வெளிப்படும் மணம்… மாற்றம் பெறுகின்றது”.

நமக்கு முன் நாம் வேதனைபட்ட உணர்வை எடுத்துக் கொண்டிருக்கின்றோம் அல்லவா அந்த வேதனையான உணர்வே இரண்யன்.

வாசல்படி என்பது மூக்கு இங்கே அமர்ந்துள்ளான் நாராயணன். நாராயணன் என்பது சூரியன். இங்கே நமக்குள் நரநாராயணனாக, வாசல்படி மீது அமர்ந்து மடிமீது வைத்து இரண்யனைப் (நஞ்சினை – தீமைகளை) பிளந்து ஒளியின் சுடராக தனக்குள் செயலாக்குகின்றான்.

ஆறாவது அறிவின் துணை கொண்டு மகரிஷிகளின் உணர்வுகளை எவ்வாறு எடுக்க வேண்டும்? என்று பிரகலாதன் கதையைக் காட்டி நமக்குத் தெளிவான நிலைகளில் கூறியுள்ளார்கள் ஞானிகள்.

பிரகலாதன் என்றால்
1.நமது ஒவ்வொரு எண்ணங்களும் நமக்குள் பிறக்காமல் பிறப்பது.
2.நாம் எதை எண்ணுகின்றோமோ அதையெல்லாம்
3.பெறாமல் பெறும் அந்த உணர்வின் சக்தியாக
4.நமக்குள் இயக்கியது - பிரகலாதன் என்பதின் பொருள் இதுதான்.

நாம் எண்ணிய உணர்வு நமக்குள் வரும் பொழுது அந்தக் கதையைக் காட்டி இந்த உண்மையின் ஒளிச்சுடராக அவன் எண்ணிய நிலைகள் கொண்டு அதுவே காட்டுகின்றான்.

பிரகலாதன் என்ன சொல்லுகின்றான்?

ஹரி ஓ…ம் நமோ… நாராயணா…

1.இந்தச் சூரியனின் இயக்கமாக
2.அந்த உணர்வின் சக்தி நமக்காக,
3.நமக்குள் இருந்து ஒளியாக அறிந்திடும் செயலாக
4.நமக்குள் நின்று அந்த நாராயணன் இயக்குகின்றான்.
5.”ஹரி ஓ…ம்எனக்குள் நின்று ஜீவனாக அந்த நாராயணன் இயக்குகின்றான்.
6.“நமோ நமது சரீரத்தை இயக்கிக் கொண்டிருக்கின்றான் என்று பொருள்பட
7.அன்று வியாசகர் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.

அந்த அருள் ஞானியின் உணர்வு இங்கே இருக்கின்றது. அருள் ஞானியின் உணர்வை எப்படிக் கவர வேண்டும்? என்று நமது குருநாதர் சொன்னார். அவர் காட்டிய வழியில் அது உங்களுக்குக் கிடைக்க வேண்டும்.

அந்த அறிந்திடும் சக்தி உங்களுக்குள் ஊழ்வினையாகப் பதிவாகி அந்த உணர்வின் தன்மை கொண்டு ஏங்குவீர்கள் என்றால் உங்களுக்குள் அனைத்து இருளையும் நீக்கி ஒளியின் சிகரமாக வாழ முடியும் என்று இதை உபதேசித்தது.

மெய்ஞானிகளின் அருள் ஒளி பெறவேண்டும் என்று ஏங்கி தியானிக்கும் அனைவரும் எல்லா மகரிஷிகளின் அருள் சக்தி பெற எமது அருளாசிகள்.