“மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்” எமக்குக் காட்டிய அருள் வழிகளை
உங்களுக்குத் தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருகின்றோம். அந்த அருள் ஞானிகள் பெற்ற உணர்வுகளை
உங்களுக்குள் பதிவாக்குகின்றோம்.
இதை உங்கள் வாழ்க்கையில் எண்ணும்பொழுதெல்லாம்
1.நிச்சயம் இந்த அருள் சக்தியை நீங்கள் பெறுகிறீர்கள்.
2.நிச்சயம் உங்கள் குடும்பத்தில் அனைவரும் ஒற்றுமையாக இருப்பீர்கள்
3.நிச்சயம் உங்கள் குடும்பத்தில் நோய்கள் இருப்பதை மாற்றி
அமைப்பீர்கள்.
4.நிச்சயம் உங்கள் குடும்பத்தில் உங்கள் கணவனிடம் சில குறைபாடுகள்
இருந்தாலும் அவர்களை உயர்ந்தவர்களாக மாற்றியமைப்பீர்கள்.
5.அப்படி மாற்றக்கூடிய சக்தி இருக்கின்றது.
6.குடும்பத்தில் குறிப்பாகப் பெண்கள் உங்கள் “குழந்தை இப்படி
இருக்கிறதே…” என்று எண்ணுவதற்குப் பதில் நம் குழந்தைகள் நிச்சயம் நல்லவர்களாக ஆகிவிடுவார்கள்.
7.இப்படி எண்ணி உங்கள் உணர்வை நிச்சயப்படுத்தி உறுதிப்படுத்தி
அவர்கள் உயர்ந்தவர்களாக வர வேண்டும் என்று
எண்ணி வாருங்கள்.
8.யாம் சொல்லும் “தியானம்…” என்பது இதுதான்.
இந்தத் தியானத்தில் அரும் பெரும் சக்தி கொடுப்பதை நீங்கள்
பக்குவப்படுத்தி வளர்க்க முடியும். உங்கள் குடும்பமும் நன்றாக இருக்கும். தெருவும் நன்றாக இருக்கும். ஊரும் நன்றாக இருக்கும்.
அதே மாதிரி கிராமப்புறத்தில் வாழ்பவர்கள் அனைவரும் ஒற்றுமையாக
இருந்தால் விவசாயமும் நன்றாக இருக்கும்.
ஊரில் ஒற்றுமையற்ற நிலையில் பகைமை இருந்தால் பகைமையான உணர்வுடன்
நாம் பயிரிடப்படும் பொழுது அந்தப் பயிரிலும் கெடுதல் வரும். பல பூச்சிகள் விழுகும்.
பல விஷத்தின் தன்மைகளாக நம்மிடமிருந்து பரவும்.
இதை இந்த மாதிரி நீங்கள் எண்ணினால் அந்த விஷ மருந்துக்கே
வேலையில்லை. ஆகவே நஞ்சினை ஒடுக்கிய அந்த அருள் ஞானிகளின் உணர்வை மருந்தாகத் தெளிக்கலாம்.
அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து உங்கள் பார்வையில்
விவசாயத்தில் இப்படித்தான் இருக்க வேண்டும்
1.“நன்றாக இருக்க வேண்டும்” என்ற உணர்வைப் பாய்ச்சுங்கள்.
2.அதிலே நல்ல அணுக்கள் விளைய வேண்டும்.
3.அருள் தாவர இனங்களாக வளர வேண்டும்.
4.அதை உணவாக உட்கொள்வோர் அனைவரும் நல்ல மகிழ்ச்சி பெறவேண்டும்
என்று எண்ணுங்கள்.
உங்கள் விவசாயம் நன்றாக இருக்கும்.
ஏனென்றால் இன்று காற்று மண்டலமே மிகவும் நச்சுத் தன்மையாக
இருக்கின்றது. அதை மாற்ற வேண்டும் என்றால் – “எல்லோரையும்…” அந்த அருள் ஞானத்தைப் பெறவைக்க
வேண்டும் என்று சொன்னார் குருநாதர். அதைப் பார்த்து நீ பேரானந்தப்பட வேண்டும் என்றார்.
அதே மாதிரி நீங்களும் எல்லோரும் சந்தோஷமாக இருக்க வேண்டும்
என்ற அந்தப் பேரானந்தத்தை உருவாக்குங்கள்.
ஆக இந்தப் பூமியில் பிறந்த நாம் அந்தத் தாயிற்கு நாம் சேவை
செய்கின்றோம். அதை அசுத்தப்படுத்தாது நாம் பாதுகாத்தல் வேண்டும்.
“பூமித் தாய்” - என்று அதிலிருந்து உருவானது தாம் நாம்.
அந்தத் தாயை மதிக்க வேண்டும்.
1.அந்தத் தாய் வீற்றிருக்கும் இந்த இடம் சுத்தமாக இருந்தால்
2.இதில் வாழும் மக்கள் நாமும் நன்றாக இருப்போம்.