ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 26, 2026

உடலை மதிக்க வேண்டும்… ஆனால் அதன் மீது பற்று வைக்கக் கூடாது

உடலை மதிக்க வேண்டும்… ஆனால் அதன் மீது பற்று வைக்கக் கூடாது


நான் ஏதோ சொல்கின்றேன் என்றும் நான் கல்வி அறிவு இல்லாதவன் என்றும் எண்ண வேண்டாம். விண்ணுலக ஆற்றல் அனைத்தும் மனிதனின் உடலுக்குள் உண்டு என்று குருநாதர் காட்டினார்.
 
அதன் வழி வழி கொண்டு
1.அந்த (உணர்வின்)  புலனறிவின் ஆற்றலை விண்ணிலே வீசி உணர்வின் ஆற்றலை நீ நுகர்ந்து அறி
2.அந்த உணர்வின் தன்மையை உனக்குள் வளர்த்துக்கொள்,
3.இதுவே தீமையற்ற நிலைகளாக ஆக்கு
4.அது தீமைகள் இருக்கும் மனிதனுக்குத் “தீமைகளை நீக்க உதவட்டும்…!” என்று குருநாதர் எமக்குக் கட்டளையிட்டார்.
 
அவர் இட்ட கட்டளைப்படிதான் இதைச் செய்கிறேன்.  உங்களிடத்தில் புகழ் தேவைக்கோ பொருள் தேவைக்கோ அல்ல. எனக்குப் பொருள் ஒன்றும் தேவையில்லைபுகழும் தேவையில்லை.  
 
நீங்கள் மகிழ்ந்திருக்க வேண்டும், உங்களையறியாது சேர்ந்த இருள் நீங்க வேண்டும், உங்களின் மகிழ்ச்சியான உணர்வு மற்றவர்களை மகிழ்ச்சி பெறச் செய்யும் சக்தியாக மலர வேண்டும்.
 
தைக் கண்டு எனக்குள் மகிழ்ச்சி தோன்ற வேண்டும். இது எமது குரு இட்ட கட்டளை.
 
இந்த உடல் சதமற்றது. நிலையாக இருப்பது உயிர்.
1.“சாமி…” என்று என்னைப் பல பேர் கூப்பிட்டாலும் உயிர் சென்று விட்டால் என்னவென்று அழைப்பார்கள்?
2.சவத்தை எப்பொழுது அடக்கம் செய்வார்கள்…? என்று தான்  கேட்பார்கள். 
3.எனக்குள் இருக்கும் உயிரைத்தான் மதிக்கின்றார்கள்.
4.எல்லோருடைய நிலையும்உயிரைத்தான் மதிக்கின்றார்கள்.
 
இப்பொழுது உங்கள் உடலில் இருக்கும் உயிரை மதித்து நடந்து பாருங்கள். அந்த ஞானியின் உணர்வைச் சேர்த்துப் பாருங்கள். இந்த உடலின் தன்மை தூசியாகும்.
 
இந்த உடலுக்குள் நின்று தான் மெய் ஞானியின் உணர்வை வளர்க்க முடியும். இதில் வளர்த்துத் தான் உயிருடன் ஒன்றச் செய்ய முடியும்.
1.உடலை மதிக்க வேண்டும்
2.ஆனால் உடல் மீது பற்று வைக்கக் கூடாது.
 
உடலுக்கு முக்கியத்துவம் கொடுத்து என்னைக் கேவலமாகப் பேசிவிட்டானேஇரு உன்னைப் பார்க்கின்றேன்…!” என்று சொன்னால் போதும். உடலுக்கு முக்கியத்துவம் வந்து விடுகின்றது.
 
அவனின் உணர்வை உங்களுக்குள் வளர்த்துக் கொள்கின்றீர்கள், அவர்கள் சொன்ன வழியில் சென்று இந்தச் சரீரத்தைக் காக்கும் திறன் இழந்து விடுகின்றீர்கள்.
 
இதிலிருந்து விடுபட அந்த மெய் ஞானிகளின் அருளைப் பெறத் தியானித்து அந்தத் தீய வினைகளை நீக்கி மெய் ஒளி பெறும் தகுதி நீங்கள் பெற வேண்டும் என்பதற்கே இதை உபதேசிக்கின்றேன். 
 
நீங்கள் அனைவரும் மெய்யொளி பெறும் தகுதி பெற வேண்டும் என்று ஆசைப்படுகின்றேன் தியானிக்கின்றேன்வேண்டுகின்றேன், பிரார்த்திக்கின்றேன்.
1.உங்களை அறியாது சேர்ந்த இருள் நிலையைப் போக்கிடுவீர்.
2.அருள் ஞானியின் அருள் ஒளியைப் பெற்றிடுவீர்,
3.ஒன்று சேர்ந்து வாழ்ந்திடும் வாழ்க்கையினைப் பெற்றிடுவீர்,
4.மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்திடுவீர்
5.உயிருடன் ஒன்றிய உணர்வின் ஒளியாகிடுவீர்
6.என்றும் அழியா ஒளிச்சரீரம் பெற்றிடுவீர்.