
“யாம் மறைத்துச் சொன்ன உண்மைகளை…” நீங்கள் அறிய முற்பட வேண்டும்
திருமூலருக்குப்
பிற்பாடு சப்தரிஷி மண்டலத்தில் அதிகமாக யாரும் இணைந்ததில்லை.
1.வெகு
காலம் இடைவெளி ஆகிவிட்டது.
2.இப்போது யாம் குருவைச் சந்தித்த
பிற்பாடு தான் தொடர்வரிசையாக “ஒவ்வொருவராக நாம் விண்ணுக்குச் செலுத்துகின்றோம்…”
இனம்
இனத்தைச் சேர்க்கும். எதை எடுத்தாலும் அந்தக் கூட்டமைப்பிலே சேர்த்து வளர்த்துத் தான் வளர்ச்சியைப் பெற
முடியும். ஒன்று தனித்து எந்த மண்டலமும் வளராது.
ஒரு பிரபஞ்சம் இருக்கும் போது பிற மண்டலங்களிலிருந்து வருவதை எடுத்து அனைத்திற்கும் இரையாகக் கொடுக்கின்றது. இதே போன்றுதான் மனிதன் தன் உணர்வின் தன்மை எடுத்து வளர்க்கப்படும் போது அடர்த்தி… மற்றதை இழுத்துத் தனக்குள் உணவாகப் பெருக்கும் நிலை வருகின்றது.
1.தனித்து
ஒன்று எங்கும் எதுவும் வேலை செய்யாது.
2.இந்த
உண்மையை நாம் தெரிந்து கொண்டால் விலகி நிற்க மாட்டோம்.
3.நீயா… நானா…? என்று போர் செய்து கொண்டிருந்தால் என்ன
ஆகும்…?
இயற்கையின்
உண்மை நிலை இதுதான்.
1.ஏனென்றால்
இதில் ஆயிரம் மறைத்திருக்கின்றேன்
2.இந்த
உணர்வுகளை ஒவ்வொன்றாக நீங்கள் இணைத்து… உங்களுக்குள் கொண்டு வர முயற்சி எடுத்தால்
3.குருநாதர் கண்ட அனைத்தையுமே நீங்கள் பார்க்க
முடியும்.
சொல்வதை… “வெறுமனே கேட்டுக் கொண்டு மட்டும் இருந்தால்…” பலன்
இல்லை.
1.அதைப் பெறக்கூடிய தகுதியைத்தான் உங்களிடம் உருவாக்குகின்றேன்.
2.தொடர்ந்து
நீங்கள் செயல்பட்டு வந்தால் அது கிடைக்கும்… அது வளர்ச்சி அடையும்.
செடியில்
உரத்தைச் சேர்க்கிறோம் என்றால் ஆவியாகச் சேருகின்றது. செடியில் இணைத்துக்
கொண்டபின் அந்த ஆவி அதனுடன் இணைந்து உறையப்படும் பொழுது தன் இனமான சக்தியை எடுத்து நல்ல முறையில் வளர்க்க வழி
செய்கின்றது.
செடியில் இந்த
உரத்தின் சக்தி இணைந்தால் தான் வீரிய சக்தி வரும். இல்லை
என்றால் பெற முடியாது. இது போன்று தான்
1.சில
உண்மைகளைத் தெரியப்படுத்துவதற்கு என்னென்ன செய்ய வேண்டும்…? என்பதற்காக
2.அந்த
உரமான உணர்வுகளை இணைத்து உங்களுக்குள் பெறச் செய்கின்றோம்.
ஒவ்வொரு
அணுக்களிலும் அதை இணையச் செய்யப் பழக்க
வேண்டும். வெறும் வாயிலேயே சொல்லிக் கொண்டு போவது அல்ல…!
1.விண்ணுலக
ஆற்றலை நீங்கள் பெற வேண்டும் என்றால் குரு அருளைப் பெற்றிருக்க வேண்டும்.
2.அதை
உங்களிடம் கொடுத்துப் பழக வேண்டும்… அந்தப் பாதை தெரியாதது நாம் போக
முடியாது.
3.குரு
வகுத்துக் கொடுத்த அந்தப் பாதையைத்தான்
உங்களிடம் இணைத்துக் கொண்டு வருகின்றோம்.