
சூரியனின் செயலாக்கம்
பிரபஞ்சம் என்பது நமது சூரியக் குடும்பம். நூலாம்படைப் பூச்சி போன்று தான் நட்சத்திரங்கள் அமிலச் சக்தி கொண்டது. அதனின் சுழற்சியில் வெளி வருவது நூலாம்படை போன்று விரிவடையும்.
1.பிரபஞ்சம் சுழன்று வரும் பொழுது நட்சத்திரங்கள்
அகண்ட அண்டத்தில் இருந்து வரக்கூடிய துகள்களைச் சேமித்து வைக்கின்றது…
2.தன்னுடைய பால்வெளி மண்டலங்களாக மாறுகின்றது.
கார்த்திகை நட்சத்திரம் முன்னாடி இருக்கின்றது… மீதி நட்சத்திரங்கள் அனைத்தும் அதற்கடுத்து வரிசையில் இருக்கும். எத்தனையோ தூரத்திலே
ஒவ்வொன்றும் கீழே இருக்கும்.
சூரியனின் சுழற்சி வேகத்தில் வரும் பொழுது அது மிகவும் பின் தங்கி
வரும். இரண்டாவது அதைக் காட்டிலும் பின் தங்கி வரும். மூன்றாவது அதைக் காட்டிலும் பின் தங்கி வரும்.
சூரியனை ஒட்டி இருக்கப்படும் பொழுது கோள்களும் இதே போன்றுதான்
ஒவ்வொன்றும் தன் தன் வித்தியாச நிலைகள் சுழன்று
கொண்டிருக்கும்.
பிற மண்டலத்திலிருந்து வரக்கூடிய துகள்கள்
நட்சத்திரங்களின் பால்வெளி
மண்டலங்களில் ஒட்டிக் கொள்கின்றது. சுழற்சி ஆகும் பொழுது அது
எல்லாம் தூசியாகின்றது.
1.அதற்கடுத்து இன்னொரு
நட்சத்திரம் அதை இழுக்கும்.
2.இடைமறித்து வரும் பொழுது இதற்கும் அதற்கும் இரண்டு கலவைகள்.
3.இப்படி இந்த 27 நட்சத்திரக் கலவைகள் தூசிகளாக வருவதைத் தான் இடைமறித்து
4.முதலில் வருவதை கேது விஷத்தன்மையை எடுத்துக்
கொள்கின்றது.
5.ராகு கருகிய புகைகளை எடுக்கின்றது…
கலவையாகி மாற்றங்களை அனுப்புகிறது.
இப்படி ஒவ்வொரு கோளும் இழுத்துத் தன் கலவையாக மாற்றி
அமைத்து உள்ளே அனுப்புகின்றது. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு
அணுக்களிலும் விஷத்தன்மை உணர்வுகள் கலவை ஆகி… எந்த அணுக்களிலும் எதையும் உருவாக்கக்கூடிய தன்மை பெறுகின்றது.
இந்தக் கலவைகள் வரப்படும் பொழுது மற்ற
கோள்களுடன் கலக்கப்படும் பொழுது ஒவ்வொன்றும் மாற்றங்கள் ஏற்படும்.
1.அப்படி மாற்றங்கள் ஏற்பட்டுச்
சூரியனுக்கு வரும் பொழுது
2.விஷத்தை எல்லாம் பிரித்துத் தூக்கி
எறிந்து விடுகின்றது… ஒளியாகப்
பாதரசமாக மாற்றுகின்றது.
நட்சத்திரங்கள் அனைத்தும் முதலில் அமிலமாக இருந்தது தான். இந்த உணர்வு மாற்றங்கள்
ஆகி மாற்றம் ஆகிப் பாதரசமாக மாற்றும் நிலை வருகின்றது…
1.ஆக “முழுமையான விந்து… இந்த உலகை உருவாக்குவதற்கு அதுவே மூலமாகிறது…”
2.அதில் எடை கூடிய நிலை வரப்படும் பொழுது தள்ளுகின்றது… பால்வெளி மண்டலத்தில் இது எடை கூடியது….
பாதரசமாகிறது.
சூரியனிலிருந்து வெளிப்படும் ஒவ்வொரு அணுவின் தன்மை
ஒவ்வொன்றுக்குத் தகுந்த மாதிரி இருக்கும்.
உமிழ்த்தி வெளியே வரப்படும் பொழுது… பிற
மண்டலங்களிலிருந்து இழுக்கக்கூடியதை எதிர் நிலையில்
மோதப்படும் பொழுது சூரியனுக்கு வெளிப்புறத்திலே ஏற்படும்
வெப்பம் தான் “நாம் காணக்கூடிய வெயில்…”
1.ஆனால் சூரியன் குளிர்ச்சியான பூமி.
2.சூரியனுக்குப் பல ஆயிரம் மைல்களுக்கு அந்தப் பக்கம் தான் இந்த மோதல்கள்
நடக்கின்றது.
3.வெப்பமாகிக் கெட்டது அனைத்தையும் தூக்கி எறிந்து விடுகின்றது.
பெட்ரோமாக்ஸ் விளக்கில் பார்த்தோமென்றால் உள்ளே ஒரு துணி
தான் இருக்கும். பெட்ரோல் அதிலே ரோலிங் ஆக ஆக நெருப்பாகி வெளிச்சமாகத் தெரிகின்றது. பெட்ரோல்
அதிலே வரவில்லை என்றால் உடனே அது கருகிவிடும்.
இதே போல் தான் சுழற்சியின் தன்மையில் அடித்து வீசப்படும்
பொழுது மற்றதுகளை எடுத்து விஷத்தைப்
பிரிக்கிறது. அந்த மோதல் ஏற்படும் போது ஒரு ஈர்ப்பின் தன்மை
வருகின்றது… “அது தான் காந்தம்…!”
இழுத்துக் கொண்டபின் விஷத்தின் தன்மை அதிலே கலந்து விடுகின்றது. கலந்து வெளியே வரப்படும்
பொழுது “எலக்ட்ரிக்…” அது இயக்கச் சக்தியாக இயக்க அணுவாக மாறுகின்றது.
இது மெய் ஞானப்
பாடம். குருநாதர் இதை எடுத்துக் காட்டி
1.மற்ற பொருளுடன் சேர்க்கப்படும் பொழுது எப்படி
திடப்பொருளாகின்றது…?
2.இன்னொரு பொருளைச் சேர்த்த பின் இது ஆவியாக
எப்படிப் போகின்றது…?
3.ஆவி வெளியே போன பின் பொருள்கள் எப்படி இணைகின்றது…? என்று காட்டுகின்றார்.