
குரு காட்டிய அருள் வழிப்படி “அந்தக் கரண்டின் தொடர்வரிசையில்” நாம் செல்ல வேண்டும்
மனித உடல் பெற்ற பின் உணவாக உட்கொள்ளும் உணவிற்குள் மறைந்து வரும் நஞ்சினை மலமாக
மாற்றிவிட்டு உணர்வின் தன்மை உயர்ந்த உணர்வின் சக்தியாக மாற்றக்கூடிய ஆற்றல் ஒவ்வொரு
உடலிலும் சிறுகச் சிறுக வளர்ச்சி பெற்று மனிதன் தீயதை நீக்கி ஒளியின் சரீரமாகப் பெறும்
தகுதி பெறுகின்றான்.
இதனைக் கடவுளின்
பத்து அவதாரங்கள் வராக அவதாரத்தில் தத்துவத்தைக்
கொடுத்துள்ளார்கள். ஏனென்றால் பன்றித் தலையை போட்டுத்
தெய்வமாகக் காட்டப்பட்டு கும்பிடச் சொல்கிறார்கள் என்றால் “அதில்
உள்ள உட்பொருளை” நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
1.இயற்கையின் பரிணாம வளர்ச்சியில் எப்படி வளர்ச்சி பெற்று வந்தோம்...?
2.ஒவ்வொரு சரீரத்திலும் எப்படி எல்லாம் ஆற்றல்களைப் பெற்று வந்தோம்…? என்று மெய் உணர்வுகளைத் தான் காட்டி இருந்தார்கள்.
ஆனால் அந்த மெய் வழிகளை நாம் காலத்தால் அறிய முடியாது போய் விட்டது. ஆனால் அதை எல்லாம்
1.இப்பொழுது நான் அதைப் பேசுகிறேன் என்றால் அதற்குண்டான
தகுதி பெற்றவன் அல்ல.
2.மெய்ஞானியான மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவரின் உணர்வால் மெய் உணர்வலைகளை யாம் காண முடிந்தது.
இருந்தாலும் அதையெல்லாம் அறிந்து கொள்ள அவர் எனக்குப் பல இம்சைகளைக்
கொடுத்தார். அந்த
இம்சைகளை எல்லாம் மாற்றுவதற்கு மெய்ஞானியின் அருள் ஒளியினை எப்படிப் பெற வேண்டும்…? என்று உபதேசித்து உணர்த்தினார்.
1.துன்பங்களைக் கொடுத்து அந்தத் துன்பங்களை மாற்ற மெய் ஒளியினைப் பெறும்
தகுதியை ஏற்படுத்தினார்.
2.ஆனால் உங்களுக்கோ… துன்பம் ஏற்படும் போது அந்தத் துன்பத்தை நீக்க மெய் ஒளி பெறும் மார்க்கத்தைக் காட்டுகின்றோம்.
ஆகவே இதை அலட்சியப்படுத்தி விடாதீர்கள்.
எனக்கு துன்பங்களைச் செயற்கையில் உண்டாக்கித் தான் அந்தத் தீய நிலைகளை
நீக்குவதற்கு ஆற்றல்மிக்க சக்திகளைப் பெறும் தகுதியை குருநாதர் ஏற்படுத்தினார்.. எனக்குள் அது வளர்ந்தது.
அது போன்று உங்களுக்குள்ளும் அந்தச் சக்தி வளர வேண்டும் என்பதே எம்முடைய ஆசை.
குருநாதர் காட்டிய அந்த அருள் வழி கொண்டு துன்பங்களை நீக்கி அந்த உயர்ந்த
ஆற்றல்களை நான் பெற்றது போன்று உங்களை அறியாது வரக் கூடிய துன்பங்களை நீக்க “உங்கள் எண்ணங்களை வளர்த்துக் கொண்டால்” துன்பத்தை நீக்கிவிட்டு இன்பத்தின் நிலைகளை வளர்க்க முடியும்.
என்றும் பேரின்ப நிலையாக பெருவீடான நிலைகள் பெற முடியும் என்பதை உங்களுக்குள்
இப்பொழுது தெளிவாகக் கொடுக்கின்றோம். ஆனால் லேசாகச் சொல்கின்றோம் என்று இதை விட்டு விடாதீர்கள்.
விவசாய ஆபீஸில் எவ்வளவு நாளோ பக்குவப்படுத்தி நமக்குக் கொடுத்த வித்தினை
அவர்கள் சொன்ன முறைப்படி அதை விதைத்து நீரை ஊற்றினால் இவ்வளவு பலன் தரும் என்று சொல்வது
போல்
1.குருநாதரிடம் 12 வருட காலம்
அவர் எனக்குள் பதிவு செய்த
2.அதன்
மூலம் வளர்த்துக் கொண்ட அருள் வித்தைத் தான் உங்களுக்குள்
அருள் வாக்காகப் பதிவு செய்கின்றோம்.
யாம் பதிவு செய்த வாக்குகளுக்குள் உங்களுடைய நினைவலைகளைச் செலுத்திக் கூட்டி காற்றிலிருந்து
அந்த ஆற்றல் மிக்க மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்துப் பெருக்கி அதை வளர்த்துக்
கொள்ளும் முறைதான் யாம் கொடுக்கக் கூடிய தியானப் பயிற்சி. ஞானிகள் சென்ற வழியும் அது தான்…!
ஆனால் சாமியிடம் சென்றால் தலைவலி போகும் மேல் வலி போகும் வயிற்று வலி போகும்
என்றால் அது வளர்ச்சிக்கு வர முடியாது.
1.சாமி சொன்ன வழிகளில் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்துத் தனக்குள்
வளர்த்துக் கொண்டால்
2.வலிகள் நீங்கும் என்ற உணர்வை நீங்கள் எடுத்துக் கொள்ளும் பொழுது அது தன்னாலே
போகும்.
3.அந்த வழியில் செல்லும் பொழுது இருள் நிற்காது. அந்த
இருளை நீக்கிடும் ஒளியின் தன்மை பெற வேண்டும்.
ஆனால் பாத்திரங்களிலே ஓட்டை உடைசலை அப்போதைக்கப்போது ஒட்டி அடைப்பது போன்று… இந்தச் சாமி செய்யும் அந்தச்
சாமியார் ஏதாவது செய்வார் என்று சென்றால் அது எல்லாமே கழன்றுவிடும்.
அந்த மாதிரி இல்லாதபடி மெய் ஒளியின் தன்மை உங்களுக்குள் வளர வேண்டும். அந்த ஆற்றல்மிக்க சக்திகளை நீங்கள்
பெற வேண்டும். உங்களுக்குள் அந்த சக்தி ஓங்கி வளர வேண்டும்
என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நம்மைப் போன்ற பூமியிலே வாழ்ந்த மனிதர்கள் தான் ரிஷித் தன்மையை அடைந்து சப்தரிஷி
மண்டலங்களாக வாழ்கின்றார்கள். அவருடைய உணர்வுகளைத் தான்
பதிவு செய்கின்றோம்.
ஒவ்வொரு நேரத்திற்கும் ஒவ்வொரு உணர்வின் ஆற்றலை உங்களுக்குள் பதிவு
செய்கின்றோம். அனைத்தும்
தெரிந்து விட்டேன் என்ற நிலை வந்தால் தான் என்ற நிலை வளர்ந்து விடும். அது போன்று இல்லாதபடி உங்கள் அனைவருக்கும் பதிவு செய்கின்றேன்.
ஒன்றிலிருந்து ஒன்றை எடுத்து ஒன்றுக்குள் இணைத்து அதனின் துணையுடன்
வளர்க்கப்படும் பொழுது தான் “விண்ணின் ஆற்றலை நீங்கள் வளர்த்துக் கொள்ளும் நிலை வருமே தவிர”
1.சாமி இவ்வளவு பெரிய ஆற்றல் பெற்று இருந்தாலும்
2.அது எல்லாம் எனக்குள் ஜீரணிக்கும் அந்த “குரு பலம்” கொண்டது தான்.
அதே போன்றுதான் நீங்கள் எந்த கரண்டுடன் தொடர்பு கொள்கின்றீர்களோ அதன் நிலைகள்
தான் வளர்ச்சி இருக்கும்.
ட்ரான்ஸ்பாரம் மாறி இருக்கும் போது வேறு லைனில் இணைத்தோம் என்றால் அதற்குத் தகுந்தாற் போல் நம்மையும் திசை மாற்றிவிடும்.
ஆகையினால் மெய் ஒளியின் தன்மை கொண்டு அந்தக் கரண்ட் எத்தகைய லைட்டை நாம்
போடுகின்றோமோ அதற்கு தகுந்த மாதிரி கரண்டை உற்பத்தி செய்ய முடியும். நமக்குள் எந்த வலுவோ அதை நாம் பெற
முடியும்.
1.குரு காட்டிய அருள் வழிப்படி “அந்தக் கரண்டின்
தொடர்வரிசையில் நாம் செல்லும் பொழுது தான்”
2.அதை நாம் பெறக்கூடிய தகுதி பெறுகின்றோம்.