
எதை நமக்குள் காயத்ரி ஆக்க வேண்டும்…?
1.கண்ணுக்கு
முன் பரவிக் கிடப்பது பரமாத்மா…!
2.அதிலிருந்து
நாம் எண்ணி எடுப்பது ஆத்மா
3.அந்த உணர்வுகள் எனக்குள் விளைவது ஜீவாத்மா
4.விளைந்த உணர்வுகள் எதனெதன் உணர்வுகள் எனக்குள் இணைத்து எதைக் காக்க வேண்டும் என்று எண்ணினேனோ
5.இந்த உணர்வின் ஆற்றலுடைய நிலைகள் என் உயிருடன் சேர்த்து நினைவுடன்
இயக்கக்கூடிய ஆற்றலாக
6.ஒரே இயக்கமாக வருவது காயத்ரி நான்காவது – உயிராத்மா.
நாம் எண்ணிய உணர்வுகள் அனைத்தும் தனக்குள் அது சிருஷ்டிக்கப்படுகின்றது.
இறைவா என்று சொல்லும் பொழுது எதை இறையாக்க வேண்டும்…? எதை நாம் காயத்ரி ஆக்க வேண்டும்…?
காயத்ரி என்றால் உயர்ந்த எண்ணங்களை எண்ணி எடுக்க வேண்டும். பரமாத்மா ஆத்மா ஜீவாத்மா உயிராத்மா
காயத்ரி. நாம் விளைவித்த உணர்வின் தன்மையை இயக்கிக் காட்டுவது தான் காயத்ரி.
சூட்சமத்தில்
நடக்கக்கூடிய நிலைகள் சூரியனைப் பற்றியது.
1.உயிருடன் இணைந்து இயக்கும் நிலையில் சூரியனுடைய நிலைகள் உயிரின் தன்மையாக
மாற்றி
2.மற்றதனுடன் கலந்து இயக்கும் நிலைகள் காயத்ரி… ஆக உருப்பெறும்
சக்தியாக மாறுகின்றது
3.மனிதனுடைய எண்ண உணர்வுக்குள் ஒன்றுக்குள் பட்ட உடனே
காயத்ரி.
ஆனால் அழிக்கும் உணர்வாக காயத்ரி
ஆக மாற்றப்படும் பொழுது அந்த உணர்வின் தன்மை அதர்வண வேதத்தில் தத்துவத்தை அப்படி
மாற்றி விட்டார்கள்
அழிக்கும் உணர்வைத் காயத்ரியாக்கி மந்திர ஒலியாகத் தனக்குள் சிருஷ்டித்து அந்த உணர்வின் அலையாகத் தனக்குள்
இயக்கி மந்திரம் என்ற நிலையில் கொண்டு சென்று விட்டார்கள்.
காயத்ரி மந்திரம் பெரும்பகுதி எதற்கு உதவுகின்றது…? அதர்வண வேதத்திற்குப் பயன்படுகிறது. அதர்வண வேதத்தில் சிருஷ்டிக்கும் தன்மை உணர்வின் எண்ண அலைகளைப் பரப்பச்
செய்து அதனின் நிலைகள் கொண்டு கவர்வது தான்… உண்மையை அவர்கள் உணராதவர்கள் அல்ல.
ஆனால் மனித வாழ்க்கை பிரதானம் என்கிற பொழுது நமக்குள்
படைக்கும் தன்மை இங்கே எதிலே படைத்து பக்தியில் நாம் எங்கே
செல்கிறோம்…? என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
1.பக்தி என்பது நல்லது தான்
2.அதிலே
நல்லதைக் காக்கும் திறன் இல்லை என்கிற பொழுது மெய்
வழியை இழந்து விட்டு
3.இருள் சூழும் நிலையில் சிக்கி அதிலே தான் செல்ல
வேண்டி வரும்.
இதிலிருந்து விடுபடுவதற்கு உங்களை நீங்கள் நம்ப வேண்டும். உயிரைக்
கடவுளாக மதிக்க வேண்டும். நமக்குள் எண்ணியதை அவன் ஈசன் படைத்து விடுவான்… பிரமமாக இருந்து நமக்குள்
சிருஷ்டிப்பவன் அவன் தான்.
ஆகவே நாம் எந்த
உணர்வினைச் சுவாசிக்க வேண்டும்…?
பிரம்மத்தின் சக்தியாக எதைத் தனக்குள் வளர்க்க வேண்டும்…? என்ற நிலையை நிலைப்படுத்தி காற்றிலே படர்ந்திருக்கும் மகரிஷிகள் உணர்வுகளை எடுக்கும்
திறனுக்கு நாம் வர வேண்டும்.
உணவை எடுத்து நாம்
சாப்பிடுவதற்குக் கைகள் வேண்டும் கைக்குண்டான
வலுப்பெற வேண்டும். வெறுமனே பார்த்து அல்லது எண்ணி அதைச் செயல்படுத்த
முடியாது.
1.காற்றுக்குள் படர்ந்து இருக்கும் ஆற்றல்மிக்க சக்திகளை
2.ஞானிகளின்
ஆற்றல்மிக்க வித்துக்களை நமக்குள் பெருக்கித் தான் அதைக் கவர்ந்து
எடுத்துக் கொள்ள முடியும்.
வேப்பமரம் தன் உணர்வின் ஆற்றல் வலுக் கொண்டு
இருக்கும் போது தான் அந்தக் கசப்பான உணர்வை… மற்ற உணர்வுகள் படர்ந்திருந்தாலும்…
தனக்குள் அந்தக் கசப்பினைப் பிரித்து அதனின் உணர்வின் சத்தாக விளைய வைத்துக் கொள்கின்றது.
ரோஜாச் செடியை எடுத்துக் கொண்டால் தன்னுடைய சத்தின் தன்மை இந்த காற்றுக்குள் படர்ந்து
இருந்தாலும் அந்த விஷத்திற்குள் இருந்து தான் நறுமணத்தின்
தன்மை கவர்ந்து வளர்த்து அந்த நறுமணத்தினை நமக்கு ஊட்டுகின்றது.
இதைப் போன்று நமக்குள் ஆயிரக்கணக்கான குணங்கள் இருந்தாலும் வேதனை ஊட்டும் உணர்வின் தன்மை வரும் பொழுது வேதனையைச் சுவாசித்து உடல் நலியும் தன்மையும் நோயையும் வரவழைத்துக்
கொள்கின்றோம். நறுமணத்தின் நல்ல குணங்களைச்
சுவாசிக்கும் வலுவை நாம் இழந்து விடுகின்றோம்.
ஆகவே அந்த நறுமணத்தின் நிலைகள் ஆற்றல் மிக்கதாக ஓங்கச் செய்வதற்கு மெய் ஞானிகள் ஆற்றலை நமக்குள்
சேர்க்கப் பழக வேண்டும்.
நாம் இதை உணர்ந்து
1.உயிரான
ஈசனுக்குள் அதை இணைக்கப்படும் பொழுது அந்த
உணர்வுகள் பிரம்மமாகி பிரணவமாகி
2.அந்தப் பிரணவத்தின் தத்துவம் நமக்குள்
இயக்கமாகி
3.அந்த
உணர்வின் சக்தியாக ஒளியின் சரீரமாக ஒளியின்
சுடராக என்றும் நிலையான நிலைகள் பெருக்க முடிகின்றது.
இதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அது நிரந்தரமான ஒளியின் சுடரை நாம் பெற வேண்டும். பொருளை அறியும் உணர்வாகப் பெருக்கிக் கொள்ள முடியும்.
ஆகவே விநாயகர் தத்துவத்தில்
காட்டப்பட்டது போன்று மிருக உடலிலிருந்து என்று மனிதனாகத் தோன்றினானோ அவன் முழு முதல் கடவுள் -
சிருஷ்டிக்கும் தன்மை.
எப்பொழுது மனித உடலில் பெற்றோமோ இயற்கையில் விளைந்ததை நிறுத்திவிட்டு
கொழுக்கட்டையாக சுவை மிக்கதாக நாம் சமைத்து சாப்பிடுகிறோம். விநாயகர் சதுர்த்தி என்று அதை நினைவுபடுத்துகின்றார்கள்.
மிருக நிலையில் இருந்து மனிதனாகத் தோன்றிய பின் தனக்கு வேண்டியதைப் படைத்து
1.தனக்குள் சுவை மிக்க வளர்த்துக் கொள்ளும் நிலைபெற்றவன் நீ மனிதா
2.முழு முதல் கடவுள் நீ… சிருஷ்டிக்கும் நிலைகள் பெற்ற
மனிதன் நீ என்று உணர்த்தினார்கள்.
மூஷிகவாகனா…! எக்குணத்தின் தன்மை சுவாசிக்கின்றோமோ இந்த உடலைச் சுமந்து
சென்று அந்த வினைகளாக உருவாக்கும். எதை நினைக்கின்றோமோ நம்மை உருவாக்கும் உயிர் அதை வழிநடத்திச் செல்கின்றது
திருட வேண்டும் என்று நினைத்தால் கண்கள் திருடச் செல்ல வழி செய்கின்றது.
திருடனுக்குத் தப்பிக்க வேண்டும் என்ற
உணர்வுகளையும் இதே கண் வழிகாட்டுகின்றது.
நீ எதை
நினைக்கின்றாயோ நீ அதுவாகின்றாய். ஆகவே நீ எங்கே சென்றாலும் என்னை
விட்டு நீ பிரிய முடியாது.
நீ திருடச் சென்றாலும்
எனக்குள் தெரியும்… பிறருக்கு நன்மை
செய்தாலும் எனக்குத் தெரியும்…!
எடுத்துக் கொண்ட நிணைவை அதன் வழியைக்
காட்டி அதன் வழியே நீ செல்வாய்… அதனின்
வழியில் நீ அடுத்த உடலைப் பெறுவாய்…! என்ற
1.கீதையின் மகத்துவத்தை மெய் வழியினை ஒளியின் சுடரை
வியாசகர் காட்டி இருக்கிறார் என்றால்
2.அந்த உண்மையின் தத்துவத்தை நீங்கள் பெற வேண்டும்
என்று பிரார்த்தித்துக் கொள்கின்றேன்.