
அடிக்கடி ஆத்ம சுத்தி செய்தால் கிடைக்கும் நன்மை
1.அம்மா அப்பா அருளால் குரு அருளால் மகரிஷிகளின் அருள்
சக்தி பெற வேண்டும் என்று ஒரு நிமிடம் தியானிக்க வேண்டும்
2.மகரிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று ஒரு
நிமிடம் தியானிக்க வேண்டும்
3.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து இரத்த நாளங்களில்
கலந்து உடலில் உள்ள ஜீவான்மாக்கள் ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று
ஒரு நிமிடம் தியானிக்க வேண்டும்
4.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல்
உறுப்புகள் முழுவதும் படர்ந்து அந்த உறுப்புகளை உருவாக்கிய எல்லா அணுக்களும்
மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஒரு நிமிடம் தியானிக்க வேண்டும்
இதற்குப் பெயர் ஆத்ம சக்தி என்பது.
அடிக்கடி
ஆத்ம சுத்தி செய்வதால் பெறும் நன்மை:-
இப்படி நாம் அடிக்கடி செய்து வந்தோம் என்றால் நாம் எண்ணி எடுத்த அந்த மகரிஷிகளின் அருள்
உணர்வுகளைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்கின்றது… அலைகளாக மாற்றுகின்றது.
1.நாம் பரப்பிய அந்த அலைகளை
2.மீண்டும் நாமே எடுத்துப் பெருக்கிக் கொள்ள இது உதவும்.
ஒருவரிடம் சண்டை போட்டால் “என்னை இப்படிப் பேசினான்… பேசினான்…” என்று எண்ணப்படும் பொழுது அந்த உணர்வலைகள் ஒலிபரப்பாகின்றது… சூரியனின்
காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றுகிறது.
மீண்டும் சண்டையிட்டவனை நாம் எண்ணும் போது சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்த அந்த அலைகள் குவிந்து
1.எங்கே போனாலும் சண்டை வரும்… பேசினாலும் சண்டை…
நம்மைப் பார்த்தாலே மற்றவருக்கு வெறுப்பு வரும்.
2.இதைப் போல் அடிக்கடி அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறக்கூடிய
வாய்ப்பாக நமக்கு நாமே உருவாக்கிக் கொள்ள முடியும்.
உடலில்
உள்ள ஆன்மாவைப் புனிதப்படுத்தும் முறை:-
ஒரு சிலர் உடலிலே ஆவி புகுந்து விட்டது பேய் பிடித்து விட்டது அருளாடுகிறது
என்று சொல்வார்கள்
1.இது எல்லாம் எந்தெந்த குணங்களிலே ஓங்கி எடுத்துக் கொண்டோமோ இன்னொரு ஆத்மா
வெளியில் இருப்பது இங்கே வந்துவிடுகிறது.
2.காரணம் மனிதன் இன்னொரு உடலுக்குள் வந்து தான் மீண்டும் மனிதனாகப் பிறக்க
வேண்டும்.
ஆனால் எந்த குணத்தின் உணர்வுடன் அவன் இறக்கின்றானோ அதே உணர்வு கொண்டு ஒரு மனிதன்
ஏங்கி இருந்தால் அந்த உடலில் ஈர்க்கப்பட்டு விடும். எந்த நிலையில் ஆன்மா நோயாகி உடலை விட்டுப்
பிரிந்ததோ புகுந்த உடலில் அதே நோயை உருவாக்கி அவனையும் வீழ்த்தும்.
தற்கொலை செய்து உயிர் பிரிந்திருந்தால் அடுத்த உடலுக்குள் சென்றால் அங்கேயும்
தற்கொலை செய்ய வைக்கும். பக்தியின் நிலைகளில்
“முருகன் எனக்கு இப்படிச் செய்தானே” என்ற
வேதனையான எண்ணத்துடன் பிரிந்திருந்தால் அதே பக்தி கொண்டு
யாராவது எண்ணினால் அந்த உடலில் சென்று “முருகன் இப்படிச்
செய்கின்றானே” என்று ஆட்டிப்படைத்து அங்கேயும் நோயாக்கி
அவனையும் வீழ்த்தும்… அடுத்து மனிதனாகப் பிறப்பதில்லை.
1.அத்தகைய ஆன்மாக்கள் நமக்குள்
சரியான நிலையில் கட்டுப்பட்டால் தான்
2.இந்த மனித வாழ்க்கையில் நாமும் நல்லதை எடுக்க முடியும்.
ஆனால் பேயை ஓட்டுகின்றேன் என்று யார் செயல்படுத்தினாலும் உடலுக்குள் புகுந்த அந்த
ஆவியை வெளியேற்ற முடியாது.
1.நாம் எடுக்கக்கூடிய அந்த நல்ல உணர்வின் சத்தை… அந்த மகரிஷிகளின்
அருள் சக்திகளை… அதற்கும் உணவாக ஊட்டி
2.அந்த ஆன்மாவை நமக்குள் நல்லதாக மாற்றினால் ஒழிய யாரும் மாற்றவே முடியாது.
அப்படி யாரும் மாற்றியதாகச் சொன்னால் ஒரு போக்கிரியான ஆவியை வைத்து அடக்கலாம். ஆனால் அந்த போக்கிரியான ஆன்மாவும்
மந்திரத்தால் செருகப்பட்டால் அந்த ஆவி முதலில் புகுந்ததை அடக்கிவிடும்.
ஆனால் இது இயங்கத் தொடங்கி போக்கிரியான உணர்வுகளை இங்கே
உருவாக்கும் உடலுக்குள் கை கால் குடைச்சல் அதிகமாகும் அதனால் விளையக்கூடிய உடல்
வலிகள் எந்த டாக்டரிடம் சென்றாலும் அது நிவர்த்தி ஆகாது.
இது போன்ற மீண்டும் மீண்டும் தீமையின் நிலைகளுக்கு மரணமடையும் நிலைகளுக்குத் தான்
செல்ல முடியுமே தவிர நல்லதை நீங்கள் காண முடியாது.
ஆகையினால் நீங்கள் உங்களை நீங்கள் நம்ப வேண்டும். காற்றுக்குள்
மகரிஷிகளின் அருள் சக்தி பரவி உள்ளது. அதை எடுக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.
1.நம்மையறியாது கெட்டது நமக்குள் வந்து எப்படி ஆட்டிப்படைப்பதை மாற்றி அமைக்க
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து அந்தத் துன்பத்தை அகற்ற
3.”நம் எண்ணம் தான்” உதவுமே தவிர மற்ற யாரும் காப்பாற்ற
முடியாது.
4.நீங்கள் எடுத்துக் கொண்ட “அந்த எண்ணத்தை” உங்கள் உயிர்தான் சிருஷ்டிக்கின்றது
5.சிருஷ்டித்த உணர்வு தான் உங்களுக்குள் விளைகின்றது… உங்களை இயக்குகிறது.
நீங்கள் எதை எண்ணுகின்றீர்களோ உயிர் பிரம்மமாக இருந்து அந்த குணத்தினைச் சிருஷ்டிக்கின்றது. அந்தச் சக்தியின் உடலாக இயக்குகின்றது ஆகவே… நீங்கள்
எண்ணியதை நடத்திக் கொடுப்பது உங்கள் உயிர் என்பதை மறந்து விடாதீர்கள்.
கீதையில் சொன்னது போல் நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்…! என்று அந்த உணர்வின் சக்தியாகத்தான்
“நாம் எண்ணுவது நமக்குள் விளையும்…”