ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 14, 2025

ஆறாவது நிலையிலிருக்கும் நாம் பத்தாவது நிலையை அடைதல் வேண்டும்

ஆறாவது நிலையிலிருக்கும் நாம் பத்தாவது நிலையை அடைதல் வேண்டும்


மிளகாயை மற்ற பொருள்களுடன் இணைத்து அதை எப்படிச் சுவையாக்குகின்றோமோ இதைப் போல
1.ர்வத்தையும் சுவையாக மாற்றிய அந்த அருள் ஞானிகள் அருள் வாக்கின் உணர்வை நாம் சுவாசித்து
2.நாம் கேட்டறிந்த பிறர் சொன்ன வேதனையான உணர்வுகளுக்குள் அதைக் கலந்த உடனே அந்த விஷம் தணிந்து
3.குழம்பைச் சுவையாக ஆக்குவது போல நம் உடலுக்குள்ளும் சுவையாக ஆக்க முடியும்.
 
நம் உடலோ விஷத்தை மலமாக நீக்கிவிட்டு நல்ல உணர்வின் தன்மை உடலாக எப்படிச் சேர்த்ததோ இந்த உணர்வின் நிலைகள் கொண்டு ஞானியின் அருள் வித்தைத் தனக்குள் செலுத்தி இந்த உணர்வின்ண்ண அலையாக தனக்குள் வளர்த்து றை ஏழாவதாக ஆக்கப்படும் பொழுது சப்தரிஷி…!”
 
நாம் எடுக்கும் இந்த உணர்வுகள்
1.அந்த நாதத்தின் தன்மை தனக்குள் உணர்வாக வடிக்கப்பட்டு
2.அதை ரிஷியாக்குவது சிருஷ்டிப்பது அதுதான் ரிஷி…!
 
இப்படித்தான் ஞானிகள் பெற்றார்கள். அந்த ஏழாவதைத் தனக்குள் எட்டாவதாக விளையச் செய்ய வேண்டும்.
 
ஒரு மரம் எப்படி நல்ல உணர்வை எடுத்துத் தன் உணர்வாக எடுத்துக் கொள்கின்றதோ இதைப் போல
1.நமக்குள் தீமை நமக்குள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் எல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.அந்த உணர்வின் ஆற்றல் என் உடல் முழுவதும் படர வேண்டும்
3.எனக்குள் இருக்கும் ஜீவாத்மா பெற வேண்டும் என்று இப்படிக் கலக்கச் செய்யும் பொழுது
4.இந்த வாழ்க்கையில் நம்மை அறியாமலே வரும் இடையூறுகள் வேதனையை ட்டும் அந்த உணர்வுக்குள் கலந்து கலந்து கலந்து கலந்து
5.அந்த செல்களை மாற்றிவிட்டால் வித்தாக அது விளைகின்றது.
 
உதாரணமாக வேப்பமரம் தன் கசப்பை மட்டும் தான் அது எடுத்துக் கொள்கிறது மற்றதைத் தள்ளி விடுகின்றது. ஒரு ரோஜாச் செடி அதனுடைய நறுமணத்தை மட்டும் எடுத்துக் கொள்கின்றது. கசப்பைத் தன்னை அணுக விடாதபடி தடுத்துக் கொள்கிறது.
 
இதைப் போன்று தான் எட்டாவது… எட்டுக் கோளின் சக்தியின் தன்மையை நமக்குள் உணர்வின் சத்தாக எட்டாவதாக ஒளியின் சுடராக வளரும் பொழுது
1.யாராவது கெடுதலாக எண்ணிக் கொண்டு நம்மிடம் வந்தால் அந்த உணர்ச்சிகள் உந்தி என்னை இயக்காத வண்ணம் பாதுகாக்கும்.
2.இவ்வாறு செய்த இந்த உணர்வின் தன்மையை உயிருடன் ஒன்றி ஒளியாக மாறும் பொழுது ஒன்பதாவது நிலை இது காயத்ரி.
3.எனக்குள் தீமை அணுகாது நிலையை ருப் பெறச் செய்யும் நிலை வரும் பொழுது உடலை விட்டுச் செல்லும் பொழுது தசமி பத்தாவது நிலை.
 
இந்த உடலில் எட்டாவது நிலையாக இருந்து வெளி வந்தது போல
1.வெளியிலே இன்னொரு உடலுடன் இருக்கக்கூடிய ஆன்மா என்னைக் கவர ந்தால்
2.அது தன்னை அணுகாது விரட்டி விட்டு ஒளியின் சுடராகத் தனக்குள் ஆக்கித் தான் விண் செல்வதே கல்கி.
 
விண்ணிலிருந்து வரக்கூடிய ஆற்றல்மிக்க சக்தியை இந்த உடலுக்குள் எப்படி எட்டோ அதைப்போல மற்ற எட்டுக் கோளின் சக்தியை ஒளியின் சுடராக மாற்றுவது பதினெட்டு.
 
இங்கே எட்டு உடலுக்குள் எட்டு வெளியே வரக்கூடிய எட்டுக் கோளின் ஆற்றலின் உணர்வுகள் தாக்காதபடி ஈரெட்டு பதினாறு.
1.இங்கேயும் எட்டாக விளைந்து
2.எட்டாகத் தான் வெளியே சென்றாலும் உணர்வின் ஒளியாக மாறும் பொழுது ஈரெட்டு பதினாறு… என்றும் பதினாறு
3.துருவ மகரிஷியைத் தான் மார்க்கண்டேயன் என்று காட்டப்பட்டது.
 
அகஸ்தியன் துருவத்தைக் கண்டுணர்ந்து துருவத்தின் ஆற்றலைத் தனக்குள் படைத்து ஒளியின் சுடராக ன்றும் மனிதனுக்கு உணர்வின்ண்ண ஒளியாகக் காட்டிக் கொண்டிருப்பது தான் அந்தத் துருவ நட்சத்திரம்.
 
அந்தத் துருவத்தின் நிலைகளைத் தான் கதைகளாக எழுதி இந்த உணர்வினை எட்டும் நிலைகளில் அதைத் தனக்குள் சிருஷ்டிக்கும் அந்த என்றும் பதினாறு… ஒளியின் தொடராக… ஒளியின் சுடராகப் பெற்றதை மார்க்கண்டேயன் கதையாகத் துருவ மகரிஷியினைக் குழந்தையாகக் காட்டி அது வளர்த்துக் கொண்ட நிலையை… அகஸ்தியனின் வாழ்க்கை நிலைகளைச் சித்தரித்துக் காட்ட மார்க்கண்டேயனைக் காட்டினார்கள்.
 
இது எல்லாம் மெய் உணர்வுகள்…! ஆனால் நான் படிக்காதவன்… எந்தப் புத்தகத்தையும் படித்து விட்டு இதைச் சொல்லவில்லை. ஞானிகளுடைய உணர்வுகளைக் கவர்ந்துர்ந்து அதைத்தான் வெளிப்படுத்துகின்றேன்.
 
1.குருநாதர் எனக்குக் காட்டிய அருள் உணர்வுகளை அந்த வித்தினை உங்களுக்குள் பரச் செய்யும் பொழுது
2.இதை நீங்கள் நினைவு கூர்ந்து எடுத்தால் உங்களைக் காக்க உங்கள் எண்ணம் உதவும்.