
நம்முடைய எதிர்பார்ப்பு எதுவாக இருக்க வேண்டும்…?
பிறரிடமிருந்து வேதனை சலிப்பு சஞ்சலம் சங்கடம் என்று கேட்டறிந்தாலும் இதை மாற்ற அருள் மகரிஷிகளின்
உணர்வுகள் பெற வேண்டும் என்று சிறிது நேரம் அதிகமாக
எடுத்துக் கொள்ள வேண்டும். உடலுக்குள் அதை உருவாக்க வேண்டும்.
நம் உடலில் எத்தனை வகையான குணங்கள் உண்டு. அந்தந்த குணங்கள்
வரப்படும் பொழுது அதனால் ஏற்பட்ட அணுக்கள் உண்டு.
நாம் ஒன்றுமே சங்கடப்பட வேண்டாம்.
ஆனால் சங்கடப்படுபவர் உணர்வைக் கேட்டறிந்து
1.அது அணுவாக உடலிலே விளைந்திருந்தால்
அடுத்தாற் போல சந்தோஷப்படுவதைக்
கேட்டாலும் அது இயங்காது.
2.மற்றவர்கள் சங்கடமாகப் பேசிக் கொண்டிருந்தால்
அதைப் பார்த்த பின்
3.அவர் உடலிலிருந்து வந்ததை உணவாக எடுத்து இங்கே நமக்குள்
கொண்டு வந்து விடும்.
4.நம்மை அறியாமலே சங்கடமாகத் தான் அடுத்து
பேசுவோம்.
5.குடும்பத்தில் ஏதாவது நடந்தால் வம்பு வந்துவிடும்…
சங்கட உணர்ச்சிகள் தூண்டப்பட்டு விடுகின்றது.
இது போன்ற நிலைகளைத் தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும்…?
ஈஸ்வரா… என்று உயிரை எண்ணித் துருவ
நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் ரத்த நாளங்களில் கலக்க வேண்டும்
என்று பல முறை எண்ண வேண்டும்.
பின் மகரிஷிகளின் அருள் சக்தி அந்தச்
சங்கடப்படுபவர்கள் பெற வேண்டும். அவர்கள் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும். அவர் வாழ்க்கையில் நலம் பெறும் சக்தி உருவாக வேண்டும் என்று எண்ணி விட்டால்
இங்கே நம் உடலுக்குள் இது உருவாகின்றது.
அவர்கள் எண்ணினால் அவர்களுக்குக் கிடைக்கும். அவர்கள் எண்ணவில்லை என்றாலும்
1.அவர்கள் உணர்வு நமக்குள் இருப்பதால் நாம் இதை இந்த முறைப்படி
மாற்றிக் கொள்கின்றோம்.
2.இது ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்.
காரணம் நம் எண்ணியது எதுவோ அதைத்தான்
உயிர் உருவாக்கும். ஆகவே இந்த வாழ்க்கையில் “பிரதிபலனை எதிர்பார்த்து எதுவும் செய்யக்கூடாது…”
ஆனால் பிரதிபலன் எதுவாக இருக்க வேண்டும்…?
நாங்கள் பார்த்த குடும்பம் எல்லாம் நலம் பெற வேண்டும் அவர் குடும்பங்கள் அனைத்தும்
நலம் பெற வேண்டும்
1.அவர்கள் மகிழ்ச்சி பெற வேண்டும்…
அவர்கள் பேரானந்தப்பட வேண்டும் என்று அதை நாம் பற்றி
2.அவர்கள் வாழ்வில் நல்லது வருவதை எண்ணி நாம் மகிழ வேண்டும்.
3.இது தான் நம்முடைய எதிர்பார்ப்பாக
இருக்க வேண்டும்.
அவர்கள் நன்றாக இருக்க வேண்டும்… நல்ல சொல் சொல்ல வேண்டும்… குடும்பம் சந்தோஷமாக இருக்க
வேண்டும் என்று சொல்லி விட்டால் அது எதிர்பார்ப்பாக வளரும். அந்த
எதிர்பார்ப்பு நமக்குள் நல்ல உணர்வுகளாகப் பெருகும்…
அத்தகைய அணுக்கள் விளையும். தீமைகள் வராது தடுக்கும்.
ஒருவர் மீது நாம் அதிகப் பற்று கொண்டால்
1.அவர் என்ன தப்பு செய்தாலும்
2.நாம் அதை ஏற்றுக் கொள்வோம்…!
ஆனால் நமக்குப் பிடிக்காதவர்கள் என்று தெரிந்தால்
1.என்னதான் அவர்கள் நல்லது செய்தாலும்
2.அவர்களைக் குறை கூறும் நிலைகள் தான்
வரும்… அவர்களைப் பார்த்த உடனே இந்த
உணர்வுகள் தான் தோன்றும்.
இதைப் போன்ற நிலைகளிலிந்து நாம் விடுபட
வேண்டும்.
1.விஷத்தை ஒடுக்கிடும் ஆற்றலை ஒவ்வொரு நொடியிலும் நாம் பெற வேண்டும்.
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற்று நமக்குள் எந்தத் தீமையும் வளராது தடுக்க
வேண்டும்.