ஒருவர் மேலே வெறுப்பாக இருக்கிறோம் என்று சொன்னால் அந்தக்
குணத்திற்குத் தக்கவாறு தான் நம் ஞானம் பேசும்.
1.அவர்களைக் குறை சொல்லுவோம்…!
2.நாம் குறை செய்திருந்தாலும் “குறை செய்யவில்லை…!” என்று
தான் சொல்வோம்.
3.அதை ஏற்றுக் கொள்ள மனது வராது.
4.குறை இருந்தாலும் அவர்கள் “அப்படிச் சொன்னதால் தான்” இப்படிச்
செய்தேன் என்று
5.இந்த உணர்வைத் தான் வலுக் கூட்டிக் கொண்டு வரும்.
6.வேற்றுமை உண்டானதை மாற்றாதபடி நம் உடலில் இந்த உணர்வுகள்
விளைந்து கொண்டேயிருக்கும்.
‘’நீ குறை செய்கிறாய்’’ என்று நாம் சொல்லுகிறோம். ஆனால் அந்தக்
குறையான உணர்வு வரப்படும்போது அது நம்மை ஆட்டிப் படைக்காதபடி ஆத்திரம் வராதபடி தடுத்து
நிறுத்த வேண்டும்.
அப்படித் தடுத்து நிறுத்துவதற்கு நமக்கு நாமே நம்மைக் கோபப்படச்
செய்யும் குரோதப்படச் செய்யும் வேதனைப்படச் செய்யும் சோர்வடையச் செய்யும் இந்தக் குறைகளை
நமக்குள் வராதபடி தடுத்து நிறுத்த வேண்டும். நல்ல சக்தியைப் பெறுவதற்கு நம் எண்ணத்தை
மாற்ற வேண்டும்.
அந்தக் கெட்டதை முதலில் நாம் அறிந்து கொள்கின்றோம். அதாவது
1.கருணைக் கிழங்கிலே விஷம் இருக்கின்றது என்று அறிந்து கொள்கின்றோம்.
2.ஆனல் அதை வேக வைத்து நீக்குகின்றோம்,
அதே போன்று தான் ஒருவர் கெட்டவர் என்று நாம் எண்ணுகின்றோம்.
அவருடைய எண்ணங்களை நாம் மனதிலே எண்ணும் பொழுது அவர் செய்கையினுடய உணர்வுகள் நமக்குள்
உணர்ச்சிகளைத் தூண்டி அந்த உணர்வுகள் வந்து அவரைக் குறையாகப் பேச வைக்கின்றது.
அப்படிக் குறையாகப் பேசும் பொழுது அந்த உணர்வுகள் உமிழ் நீராக
மாறி நம் உடலுக்குள்ளும் விஷத்தைச் சேர்த்துக் கொள்கின்றோம்.
கருணைக் கிழங்கில் விஷம் இருக்கிறது என்று தெரிந்து கொண்ட
பின் அதை அப்படியே சாப்பிடாமல் வேக வைத்துத்தான் சாப்பிடுகின்றோம். அதைப் போல
1.ஒருவரிடத்தில் நாம் குறை காணும் பொழுது
2.அந்தக் குறையான உணர்வின் விஷத்தை
3.நாம் நேரடியாக உட்கொள்ளாதபடி ஆத்ம சுத்தி செய்து தடுத்து
நிறுத்த வேண்டும்.
அந்தக் குறையான உணர்வுகளை நாம் எங்கே காணுகின்றோமோ யார் மேலே
காணுகின்றோமோ அந்த நேரத்தில் ஆத்ம சுத்தி செய்துவிட்டு அதைப் பார்த்தோம் என்றால் அதன்
வீரியம் நம்மைப் பாதிக்காது.
‘’ஓ…ம் ஈஸ்வரா…’’ என்று உயிரை எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தி
நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்கிவிட்டு அந்த மகரிஷிகளின் அருள்சக்தியை எங்கள் ஜீவாத்மா
பெற வேண்டும் என்று உங்கள் உடலுக்குள் தியானிக்கப்படும் போது இந்தக் காற்றிலிருந்து
மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குக் கிடைக்கும்.
இது தான் “ஆத்ம சுத்தி”
நமக்கு எந்தச் சந்தர்ப்பத்தில் துன்பங்கள் நேர்ந்தாலும் அடுத்த
கணமே நீங்கள் இப்படி ஆத்ம சுத்தி செய்தால்
1.உடனடியாக மன பலம் கிடைக்கும்.
2.மன அழுத்தம் (TENSION) அகலும்
3.பின்னால் வரக்கூடிய துன்பத்தை முன்னாடியே நாம் தடுத்து நிறுத்திவிடலாம்.