தாவர இனங்களிலே சில குருவியோ மற்றதோ மற்ற பழங்களை விழுங்கி விட்டுத் தன் மலத்தைப்
போடுகின்றது. அப்பொழுது அந்த மலத்தைப் போடும் பொழுது ஒரு மரத்தின் மேல் இந்த வித்து
கலக்கின்றது.
அந்த வித்து கலக்கப்படும் பொழுது அதிலே சிறிதளவு மண் இருந்தால் போதும் இந்த வித்து
முளைத்து விடும். அப்பொழுது இந்த விழுது இந்த மரத்தோடு கலக்கின்றது.
ஆனால் இந்த விழுது மரத்தோடு கலந்தாலும் இந்த விழுது அந்த மரத்திற்கு வரக்கூடிய
தண்ணீரை மட்டும் தான் நீரை மட்டும் தான் எடுக்கின்றது. இது துணையாக வைத்து இதில் விளைந்த
வித்து தன்னிச்சையாக விளைகின்றது. ஆனால் இதில் மாற்றம் ஏற்படுவதில்லை.
ஆனால் அதே இதை இதிலே விளைந்த கொம்பை அதோடு சேர்த்து இணைத்து வைத்தோமென்றால் இதே
மாதிரி அதனுடைய துணை கொண்டு இது தன்னுடைய கனியை மாற்றுகின்றது.
நீங்கள் ஒரு மரத்தில் இப்படி இரண்டு ஒரு join செய்து ஒவ்வொரு விழுதுக்கும் நீங்கள்
மாற்றி மாற்றி வைத்தீர்கள் என்றால் இந்த மரத்தில் ஒரு பக்கம் மாங்காயைப் பார்க்கலாம்
ஒரு பக்கம் கொய்யாக்காயைப் பார்க்கலாம். அந்த இடத்திலே காண்பிக்கிறார்.
அப்பொழுது ஒரு மரத்தில் பல விதமான காய் இருப்பதைப் பார்க்கலாம். இது தண்ணீரை எடுத்துக்
கொடுக்கும். ஆனால் அதிலே விளையக் கூடிய அணுக்களை இரண்டற இணைத்து அதை மாற்றும் பொழுது
அது ஒவ்வொன்றும் உருமாறுகின்றது.
அதை இந்தச் செல்களை எப்படி எடுப்பது என்று விஞ்ஞான அறிவு காண்கின்றது.
மெய் ஞானியோ அந்த உணர்வின் தன்மை தன் எண்ணத்தை அவர்கள் உணவாக உட்கொண்டு அந்த உணர்வின்
எண்ண அலைகளை மற்ற செடிகளுடன் பாய்ச்சி தனக்குகந்த செடிகளை மாற்றி வந்திருக்கிறார்கள்.
மனிதன் தன் தேவைக்கு இன்று விஞ்ஞானி எதைச் செய்கிறான். அன்று மெய் ஞானி பல தாவர
இனங்களை தனக்குகந்ததாக இப்பொழுது நெல் இந்த மாதிரிப் பயிரினங்களை எல்லாம் மற்ற செடிகளிலிருந்து
இதை மாற்றி மாற்றித் தனக்குகந்ததாக எப்படி மாற்றி வந்தான்.
அக்காலத்திலே
முந்தைய காலங்களில் இருந்த நெல்லைக் இப்பொழுது காணவில்லை. அணுக்களை மாற்றி விஞ்ஞான
அறிவு கொண்டு எத்தனையோ நெல்கள் மாறிவிட்டது.
முதலில் நெல்லை உருவாக்கியது மனிதன் தான். அதில் மற்ற உணர்வின் செல்களை எடுத்து
நெல்லை உருவாக்கினான் சோளத்தை உருவாக்கினான்.
இதையெல்லாம் தனக்கு உணவுக்காக அந்த ஒவ்வொன்றையும் உருவாக்கி மக்களுக்குக் கொடுத்தான்.
இயற்கையில் அது வரவில்லை, இது மனிதனால் உருவாக்கப்பட்டது தான்.
பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன். இந்த ஆறாவது அறிவினால் இவனுக்கு உகந்ததை
அக்காலங்களில் எப்படி விளையச் செய்தான். இன்று விஞ்ஞான அறிவால் இன்று எப்படி மாற்றிக்
கொண்டு வருகின்றோம்.
இப்பொழுது பார்க்கின்றோம் மற்ற மிருகங்களிலுள்ள அணுக்களை எடுக்கின்றான். மற்ற மிருகங்களினுடைய
விந்துக்களில் இதைக் கலக்கிறான். அது வேறு விதமாகப் போகின்றது.
மற்ற மிருகத்தின் விந்தை எடுக்கின்றான். இவர்களுடைய விந்திலே கொடுக்கிறான். பாதுகாப்பாகக்
கவசம் பண்ணி இந்த மாட்டின் உணர்வின் தன்மை இதன் ரூபத்தை மாற்றி இதனுடைய ஆனால் அதே சமயத்தில்
இந்த இன்னொரு மாட்டின் அணுக்களின் தன்மையை இந்த விந்துடன் கலக்கப்படும் பொழுது மாடே
மாறுகின்றது.
இப்ப நாயோ ஆடோ கோழியோ மற்ற உணர்வுகளை மாற்றும் பொழுது அதிலுள்ள செல்களைப் பிரித்து
எடுக்கின்றான்.
இதோடு இணைக்கும் பொழுது கோழியின் ரூபம் மாறுகின்றது. இப்பொழுது மிருகங்களே நாம்
இனச் சேர்க்கையின் பொழுது வேறொரு மாட்டிற்கு நாட்டு மாட்டின் நிலைகளை மற்ற சீமை மாட்டின்
நிலையோடு ஆனால் அந்த விந்து இதிலே அந்த மாடாக மாற்றுகின்றது.
அது உணர்வது பாதுகாப்பாகப் போகின்றது. இதே மாதிரித் தான் மனிதனுடைய கருக்களிலும்
ஒரு மாட்டின் விந்தினை எடுத்து விட்டால் அதே மாட்டின் நிலையே தான் இங்கு மாற்றும்.
ஏனென்றால் இது ஒரு பாதுகாப்புக் கவசமாகின்றது.
இப்பொழுது விஞ்ஞான அறிவிலே கொண்டு வருகின்றார்கள். இங்கே குழந்தை இல்லை என்றால்
கருப்பைக்கு அப்புறம் இங்கு இயற்கையிலே செய்யப்பட்ட இந்தக் கருவின் அணுக்களை வைத்து
அந்தத் தாயின் வெப்பத்தை வைத்து இந்தக் கருமுட்டையை வளர்க்கின்றான்.
அதிலே குழந்தைகள் பிறக்கின்றது. அதாவது ஜீவ அணுக்களை வளர்த்ததை மற்ற உடலிலிருந்த
அணுக்களைப் பிரித்து இப்படிச் செய்கின்றான் இது விஞ்ஞான அறிவு.
அன்று மெய்ஞானிகளோ தன் பார்வையால் கிடைக்க வேண்டும் என்றால் அந்த அணுக்களின் குறைவு
எதுவோ அந்த அணுக்களுக்குத் தேவைப்பட்டது உணர்வால் கவர்ந்தால் அப்பொழுது பார்வையால்
இந்த உணர்வின் சத்தை இங்கு பாய்ச்சுகின்றான்.
குழந்தை இல்லை என்றால் குழந்தை கொடுக்கின்றான் எண்ணத்தால்.
இதே மாதிரித் தாவர இனங்களிலும் தமக்குள் பல தாவர இனங்களை அணு செல்களாக மாற்றுகின்றான்,
இதைக் காண்பிக்கின்றார். குருநாதர்
சிலதுகளைக் காண்பிக்கின்றார். ஒவ்வொன்றையும் இவையெல்லாம் உற்பத்தி பண்ணிக் காட்டுகின்றார்.
நீ இதிலே போய் இறங்கிடாதடா என்று சொல்கின்றார்.
நான் செய்கின்றேன் மாற்றுகின்றேன் கடைசியில் நீ விவசாயம் பண்ணுவதற்கு ஆளாகிவிடுகின்றாய்.
உனக்குக் காசு சம்பாதிப்பதற்கு ஆசை வந்துவிடும்.
அப்புறம் நீ மெய்பொருள் எதிலே இணைக்க வேண்டும் எதை எடுத்து உனக்குள் எதை இணைக்க
வேண்டும். எப்படிப் போக வேண்டும் என்பதை மாற்றி விடுவாய்.
உன் பிழைப்பு இங்கே வந்து விடும் என்பதற்காக வேண்டி அவ்வுணர்வுகளை அந்தத் தாவர
இனச் சத்துக்களை தன் வாயிலே வைத்துச் சில இதுகளை எடுத்துக் கண் ஒளி இந்த மூச்சு இந்த
உணர்வுகள் அதற்கு முன்னாடி ஆகாரத்தை எடுத்துக் கொள்வது.
இதிலிருந்து சத்துக்களைப் பரவச் செய்து இதை எடுத்து ஒரு இதோடு சேர்த்து அந்தக்
கருவை உருவாக்குகின்றார்.
புதுப் புதுவிதமான நிலைகள் வருகிறது. நேரடியாகவே சில வுத்துதுகளைச் செய்து காண்பித்திருக்கின்றார்.
ஏனென்றால் மனிதன் பல கோடித் தாவர இனங்களை எடுத்திருக்கின்றான். ஆனாலும் இதை இன்னொரு
செடியில் இருக்கும் பொழுது அணுவாக மாறுகின்றது.
இப்பொழுது நாம் வாடிய முகத்தோடு வேதனை கொண்ட உணர்வோடு வீட்டில் வளர்ப்பதற்கு கண்
கொண்டு நீங்கள் தண்ணீர் ஊற்றினால் போதும்.
இதே உணர்வுகள் வந்தால் செடியை வாட வைத்துவிடும். வேதனை கொண்ட உணர்வு கொண்டு நீ
பார்த்தால் இந்தப் புழுக்கள் உண்டாகும். அந்த இதுகளில் அதைத் தின்றுவிடும்.
நாம் விவசாயம் செய்பவர்களுக்கு சில பேருக்குப் பார்த்தோம் என்றால் பிரமாதமாக வரும்.
அதே சமயத்தில் மற்ற வேதனை கலந்தோ மற்ற நிலைகள் எடுக்கப்படும் பொழுது இது அந்த தாவர
இனங்கள் நல்ல பலனுக்கு வரும் பொழுது கருகிவிடும்.
இதைப்போல மனிதனின் வளர்ச்சியில் எத்தனையோ விதமான மாற்றங்கள் இருக்கின்றது. இதைத்
தெரிந்து கொண்டபின் நீ எதுவாக இருக்க வேண்டும் என்றால் திரும்பத் திரும்பத் திரும்ப
குருநாதர் நீ உனது வாழ்க்கையில் உனக்கு எது தேவை என்று தெளிவாக்கினார்.