ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 5, 2018

செடியிலிருந்து வித்தா…? வித்திலிருந்து செடியா…?

வேப்ப மரம் அந்தக் கசப்பான உணர்ச்சியின் தன்மை கொண்டு தன் வித்தை உண்டாக்குகின்றது. அதை நிலத்தில் ஊன்றினோம் என்றால் அதன் சத்தை மட்டும் கவர்ந்து வேப்ப மரமாக விளைகின்றது.

ஒரு ரோஜாச் செடி – வித்து இல்லை என்றாலும் கூட வித்திற்குக் காரணமான அந்தக் கொடியை எடுத்து வைத்தால் தன் உணர்வை எடுத்து அதே போல நறுமணம் கொண்ட செடியாக மாறுகின்றது.

விஷச் செடியின் வித்தினை நிலத்தில் ஊன்றினால் அது தன் இனத்தைக் கவர்ந்து விஷச் செடியாக வளர்கின்றது.

வேப்ப மரத்தின் சத்தையும் ரோஜாப்பூவின் சத்தையும் விஷச் செடியின் சத்தையும் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்துக் கொண்டதனால் (பரமாத்மாவாக – காற்று மண்டலம்) அந்தந்த வித்துக்களை நிலத்தில் ஊன்றும் போது நிலத்தின் ஈர்ப்பு சக்தியின் துணை கொண்டு அந்தந்தச் செடிகள் விளைகின்றது.

இதை நாம் பார்க்கின்றோம்.

விஷச் செடியில் இருந்து வரக்கூடிய சத்தை வேப்ப மரத்தின் அருகிலே வந்தால் வேப்ப மரத்தின் உந்து விசை கொண்டு தன் அருகில் வராதபடி அதைத் தள்ளி விட்டுவிடும். அதை இழுப்பதிலை.

அதே போன்று தான் வேம்பின் உணர்வின் சத்து விஷச் செடியின் பக்கம் போனதேன்றால் இதை அது விடுவதில்லை. அதைத் தள்ளி விட்டு விடுகின்றது.

ரோஜாச் செடியும் இதே மாதிரித்தான். அது இரண்டும் இது பக்கத்தில் வந்தால் அவைகளை இது தள்ளி விட்டு விடுகிறது. ரோஜாச் செடி தன் நறுமணத்தை மட்டும் நுகர்ந்து கொள்கிறது.

ஏனென்றால் இதையெல்லாம் பூமியின் காற்ற மண்டலத்தில் சூரியன் எடுத்து வைத்திருக்கின்றது. அதனதன் வலு கொண்டு அதனதன் நிலைகள் எடுத்து விளைகின்றது.

வேப்ப மரம் இருக்கக் கூடிய பக்கம் விஷச் செடியின் சத்துக்கள் அதிகமானால் வேப்ப மரத்தின் வளர்ச்சி குன்றிவிடும். அதை இழுக்கக்கூடிய தன்மை வந்தால் வேப்ப மரம் குறையும்.

அதே போல் விஷச் செடியின் சத்து அதிகமாக நிலைகள் பரவப் போகும் போது ரோஜாப்பூ செடியின் வளர்ச்சி குன்றி விடும்.

வேப்ப மரத்தின் உணர்வு அதிகமானால் விஷச் செடியின் அந்த வளர்ச்சி அது குறையும். இது அடர்த்தி அதிகமாகும்பொழுது இதற்கு வேண்டிய ஆகாரம் குறைந்து சிறுத்துப் போகும்.

வேப்ப மரத்திலிருந்து வரும் உணர்வின் சத்துக்களை சூரியன் கவர்ந்து அலைகளாகப் பரவி வரும் பொழுது அந்த உணர்வின் அழுத்தத்தைக் கண்டு ரோஜாப்பூ செடியிலிருந்து வெளி வந்த உணர்வலைகள் நகர்ந்து ஓடுகின்றது.

ஏனென்றால் இது பிடிக்க வில்லை. அதனால் நகர்ந்து ஓடுகின்றது. அதனுடைய அழுத்தம் தாங்காது ஓடும் போது ஒரு விஷச் செடியில் வெளிப்படும் உணர்வுடன் மோதிவிட்டால் அப்படியே “கிறு…கிறு…” என்று சுற்ற ஆரம்பித்து விடும்.

அவ்வாறு சுற்றும் போது விரட்டி வந்த வேப்ப மரத்தின் உணர்வின் அலைகளைத் தனக்குள் இழுத்துக் கொள்கிறது. இழுத்தவுடனே மூன்றும் மோதுகின்றது.

இதைத்தான் வேதங்கள் கூறுகிறது. வேப்ப மரமும் ரிக். ரோஜாப்பூச் செடியும் ரிக். விஷச் செடியும் ரிக்.

வேப்ப மரத்தில் இருந்து வரக்கூடிய மணம் சாம இசை. பேப்ப மரத்தின் கசப்பான சத்தை நாம் நுகர்ந்தவுடனே
1.“ஐய்யய்ய.. வாந்தி வர மாதிரி இருக்கிறது என்று சொல்கிறோம்.
2.“ஓ…ய்..” என்று வெளியே தள்ளிவிடுகின்றது.

ரோஜாப்பூவின் மணத்தை நாம் நுகர்ந்தவுடனே “ஆஹாஹா…” என்று நம்மை அறியாமலே அந்த இசைகள் இயக்குகின்றது. நல்ல நறுமணமாக இருக்கின்றது. சந்தோஷமாக இருக்கின்றது என்று சொல்கிறோம்.

விஷச் செடியின் சத்தை நுகர்ந்தால் “உச்..உச்..உச்…” என்று அரிப்பு எடுக்கின்றதே…! என்ற நிலைகள் தான் உருவாகும்.

அதனால் தான் ஞானிகள் அதனதன் மணத்தின் நிலையை “சாம இசை” என்று சொல்கின்றார்கள்.

உதாரணமாக ஒரு பத்து சதவிகிதம் வேம்பும் மூன்று சதவிகிதம் ரோஜாப்பூவும் ஒரு சதவிகிதம் இந்த விஷத்தின் தன்மையும் இந்த அணுக்கள் ஒன்றுக்கொன்று மோதிச் சுழன்று கவர்ந்து கொண்டால் அதற்குப் பெயர் அதர்வண.

வேம்பின் சத்தை அது இழந்துவிடுகின்றது. ரோஜாப்பூவின் நறுமணத்தின் சத்தை அது குறைந்து விடுகின்றது. விஷச் செடியின் அரிப்பின் தன்மையும் குறைந்து விடுகின்றது.

மூன்றும் சேர்த்து ஒன்றோடொன்று மோதுகின்றது. மோதலில் இரண்டறக் கலந்து விடுகின்றது.

சூரியனிலிருந்து வரக்கூடிய வெப்பம் காந்தம் விஷம் மூன்றும் ஒன்று சேர்ந்து தான் அணுத்தன்மைகள் விளைகின்றது.

இருபத்தேழு நட்சத்திரங்களின் நிலைகள் கடும் விஷமானது. அதைச் சூரியன் உணவிற்காகக் கவர்கின்றது.

கவர்ந்து கொண்ட பின் தன் உடலிலே உருவான பாதரசத்தால் அருகிலே வந்ததும் மோதுகின்றது. மோதியவுடனே வெப்பமாகின்றது. வெப்பமான பின் இந்த விஷம் பிரிந்து செல்லுகின்றது.

நெருப்பில் ஒரு விஷத்தைப் போட்டால் ஆவியாக மாறும். இதே போல் தான் சூரியன் பிரிக்கின்றது. பிரிந்து போகும் போது வெப்பத்தால் ஈர்க்கும் நிலை ஏற்படுகின்றது.

ஒரு கிளாசில் தண்ணீர் வைத்துக்கொண்டு சுற்றிப் பாருங்கள். தண்ணீர் சிந்தாது. அது சுற்றும் வேகத்திற்குள் ஈர்த்துத் தன்னுடன் அரவணைத்துக் கொள்ளும்.

இதே போல் தான் பாதரசத்தால் மோதப்படும் போது ஈர்த்துக் கொள்ளும்.
1.இயற்கை எப்படி நம்மை இயக்குகின்றது?
2.இயற்கை எப்படி இயங்குகிறது?
3.இயற்கையில் எப்படி நாம் வாழுகின்றோம்? என்ற நிலையை நாம் புரிந்து நடத்தல் வேண்டும்.

சூரியனில் இருந்து வெப்பமும் காந்தமும் வெளிப்படுகின்றது. கடைசியில் வலுவிழந்த விஷத்தை அந்தக் காந்த இழுத்துக் கொள்கின்றது காந்தம் இழுத்தவுடனே மூன்றும் மோதுகின்றது.
1.வெப்பம் உருவாக்கும் சக்தி
2.காந்தம் அரவணைக்கும் சக்தி
3.விஷம் இயக்கும் சக்தி என்ற நிலையில் தான் சூரியனில் இருந்து வெளிப்படுகின்றது.

இப்போது செடியில் இருந்து வெளிப்படும் இந்த சூரியனால் அந்த வெப்பம் தாக்கிய பின் அதனுடைய மணம் வெளிப்படுகின்றது.

வெப்பம் தாக்குவதால் அதனுடைய ஈர்க்கும் தன்மை அதனுள்ளே எந்தச் சத்தோ அதே போல தன் தாய் மரத்தின் சத்தைக் கவர்ந்து அது விளைகின்றது.

அதே சமயத்தில் வெளிப்படக்கூடிய சத்தை சூரியன் கவர்ந்து வைத்துக் கொள்கின்றது. இதைக்கவர்ந்து எடுத்துக் கொண்டால் அந்த மரத்தில் விளைந்த வித்திற்கு பூமியின் ஈர்ப்பின் துணை கொண்டு அது வளர்க்கத் தொடங்கும்.

மோதும் போது வெப்பமாகின்றது. வெப்பமானால் தான் எதுவுமே வளரும்.

குளிர்ச்சியான நீராக இருந்தாலும் உள்ளுக்குள் அந்த வெப்பம் இருக்கும். வெப்பம் இல்லை என்றால் எந்தச் செடியும் விளையாது. (வெளியில் உறை பனியாக இருந்தாலும் உயிரின் துடிப்பால் உடல் உஷ்ணமாக இருப்பது போல்)

ஒரு வித்து நிலத்தின் ஈர்ப்பின் துணை கொண்டு மோதி அதனால் வெப்பமாகி அது விளையப்படும் போது அதனுடன் கலந்த விஷம் இருக்கின்றதே அது உணர்ச்சியைத் தூண்டும்.

ரோஜாப்பூ சத்து பத்து சதவிகிதமும் வேம்பின் சத்து பத்து சதவிகிதமும் விஷச் செடியின் சத்து பத்து சதவிகிதமும் இது சேர்ந்து விட்டது என்றால் அரளிச் செடியாக மாறும்.

அதில் விளைந்த வித்தை நாம் சாப்பிட்டோம் என்றால் ஆளைக் கொன்றுவிடும். உடலில் விஷமான அணுக்களாகி கிருமிகள் ஏற்பட்டால் அரளிப் பூவின் மணத்தை நுகர்ந்தால் அந்த விஷக் கிருமிகளைக் கொல்லும்.

ஏனென்றால் அரளிப்பூ விஷம் என்றாலும் அதற்கு மாறான விஷம் என்று வரும் போது அதை இது கொல்லும்.

வேப்ப மரத்தின் சத்தும் ரோஜாச் செடியின் சத்தும் விஷச் செடியும் சேர்த்தால் மூன்றும் ஒன்றாகி அதர்வண – இதை அடக்கி “யஜூர்” என்ற ஒரு வித்தாக மாறிவிடுகின்றது.

அப்படி வித்தாக மாறியது பூமியிலே படருகின்றது. படரப்படும் போது அதில் கலந்த சத்தை இழுக்கக்கூடிய திறன் வருகின்றது. எப்படி…?

27 நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படும் தூசிகள் ஒன்றோடொன்று மோதியது என்றால் மின்னலாக மாறுகின்றது. அந்த மின்னல் பூமியில் படர்ந்திருக்கும் வித்தில் படும் பொழுது அதற்குள் துடிப்பின் நிலை அதிகமாகி ஈர்க்கும் தன்மைக்கு வருகின்றது.

அப்பொழுது வேம்பின் சத்தையும், ரோஜாப்பூ சத்தையும் விஷச் செடியின் சத்தையும் இழுக்கும் சக்தி வருகின்றது. அவ்வாறு இழுக்கும் பொழுது அது கருவேப்பிலைச் செடியாக மாறுகின்றது.

கருவேப்பிலையில் பார்த்தோம் என்றால் கசப்பு இருக்கும் துவர்ப்பும் இருக்கும். நல்ல மணமும் இருக்கும் அரிப்பும் இருக்கும். இந்த கலவைக்கொப்ப அந்த உணர்ச்சியாகி அந்தச் செடி வருகின்றது.

நமது ஞானிகள் முதன்மையானவன் அகஸ்தியன். அகம் என்றால்” ஒரு இயக்கத்தின் உண்மையை அறிந்தவன் அகஸ்தியன்.

அவன் கூறிய உணர்வு தான் பிற்காலங்களில் வேதங்களாக மாற்றப்பட்டு அதன் உண்மையின் நிலைகள் அனைத்தும் சிதைந்து அறிய முடியாத நிலைகள் போய் விட்டது.

ஜோஸ்யம் ஜாதகம் என்று இப்படிப் பல நிலைகளும் மாற்றி விட்டனர். வைத்தியர்கள் அந்த உணர்வுக்குத்தக்க மருந்துகளை சாம வேதத்திலிருந்து கற்றுக் கொண்டவர்கள். ஆயுர்வேதம் என்று சொல்வார்கள்.

மனிதனுக்குள் நாடித் துடிப்பு ஏற்படும் போதும் எத்தகைய விஷத்தின் தன்மை ஆனதோ அதற்குத்தக்க துடிப்பு என்றும் இந்த துடிப்பைச் சீராக்குவதற்கு ஆயுர்வேதத்தில அதற்கு தக்க மருந்துகளை மற்ற தாவர இனங்களைக் கலந்து கொடுப்பார்கள்.

அந்த மணத்தை நுகரும் போது இந்த துடிப்பின் தன்மை மாறி மனிதனை நோயில் இருந்து விடுபடும் சக்தியாகக் கொண்டு வருகின்றார்கள்.