நாம் எல்லோருமே எல்லாம்
தெரிந்தவர்கள் அல்ல. நானும் (ஞானகுரு) எல்லாம் அறிந்தவன் இல்லை. நான் அறிந்து இதைப்
பேசவும் இல்லை. நான் கல்வி கற்கவில்லை.
“கல்வி கற்காதவனுக்கு…!”
இத்தகைய ஞானத்தின் உணர்வை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் பாய்ச்சினார்.
அவர் பாய்ச்சிய நிலைகள்
கொண்டு அந்த விண்ணின் ஆற்றலை நுகர முடிகின்றது. அதை உங்களுக்குள் தெளிவாகச் சொல்லவும்
முடிகின்றது.
உங்கள் மனதினைப் பண்படுத்தி
ஞானிகளின் அருள் ஆற்றல்மிக்க சக்தியை உங்களுக்குள் பதியச் செய்யவும் பதிவானதை நீங்கள்
நினைவுபடுத்தி அருள் சக்திகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.
ஏனென்றால் இந்தப் பிரபஞ்சம்
முதுமையடையும் நிலைக்கு வந்துவிட்டது.
இந்த நிலையிலிருந்து சிறிது
பேரையாவது மீட்டுக் கொள்ளலாம்… மீட்டிட வேண்டும் என்ற நோக்குடன் தான் எல்லா மகரிஷிகளின்
செயல்களும் செயலாகிக் கொண்டுள்ளது.
ஆகவே நமது குருநாதர் இந்த
உலக மக்களை மீட்பதற்கு அந்த நல்லதை எண்ணி ஏங்கினார். மெய் ஞானியின் அருள் ஆற்றலை உனக்குள்
வளர்த்து எல்லோருக்கும் பெறச் செய் என்றார்.
1.இங்கே வாழ்ந்து கொண்டிருக்கும்
2.வாழ எண்ணும் நல்லதை எண்ணும்
அந்த நல்ல உள்ளங்களில்
3.அந்த மெய் உணர்வுகள்
வளரவேண்டும் என்று நீ ஏங்கி ஒலிபரப்புச் செய் என்றார்.
அப்படி ஒலி பரப்பு செய்யும்
போது அவர்களும் தமக்குள் துன்பத்தை நீக்கிட வேண்டும் என்று எண்ணி ஏங்கினால்
1.அவர்கள் விண்ணை நோக்கி
எண்ணும் பொழுது
2.அந்த உணர்வின் ஆற்றலால்
விண்ணின் ஆற்றல் அவர்களுக்குள் பெருகி
3.அவர்களை அறியாது வந்த
துன்பங்களை நீக்கி
4.அந்த ஞானிகள் அருள் வட்டத்தில்
செல்ல இது உதவியாக இருக்கும் என்று குருநாதர் சொன்னார்.
ஒவ்வொரு உள்ளத்திலும் மகரிஷிகளின்
அருள் உணர்வுகளை விளையச் செய்ய வேண்டும் என்றார் குருநாதர்.
சிறு துளி பெருவெள்ளம்
போன்று ஒரு நெல்லை விதைத்தால் அது விளைந்து நெல்கள் பலவாகி அந்தப் பல நெல்களையும் விளைவித்து
எடுத்துக் கொண்டால் மலைபோல் குவிகின்றது.
அப்படி மலைபோல் குவிந்தால்
அவரவர்கள் பசிக்கு அளவுக்குத் தககவாறு உணவாக எடுத்து உட்கொள்ள முடியும்.
நாம் எல்லோரும் இந்த உணர்வின்
தன்மை பெறவேண்டும் என்றால் அந்தக் கூட்டமைப்பின் தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
1.அதற்குத்தான் இந்தக்
கூட்டமைப்பை உருவாக்கி (மகரிஷிகளுடன் பேசுங்கள்)
1.ஒவ்வொரு உள்ளத்திலும்
அறிந்தோ அறியாமலோ சேர்ந்த
3.தீமையை விளைய வைக்கும்
இந்த உணர்வினை மாற்றச் செயல்பட்டு வருகின்றோம்.