“தாழ்ந்தவர்… உயர்ந்தவர்…!” என்று நாம் தான் வைத்துக்கொண்டமே
தவிர தாழ்ந்தவர் என்றோ உயர்ந்தவர் என்றோ இயற்கைக்குக் கிடையாது.
தாழ்ந்ததை எண்ணும் போது தாழ்ந்ததைத் தான் உயிர் உருவாக்குகின்றது.
1.“தாழ்ந்தவர்கள்…!” என்று மற்றோரை நாம் எண்ணும் போது
2.அந்த உணர்வுகள் நம்மைத் தாழ்த்தப்பட்டவனாக ஆக்குகின்றது.
3.நம்மைத் தாழ்த்தப்படும் நிலையே வருகின்றது
எதன் வழியில்…?
நல்ல குணங்கள் இருப்பதால் தான் நாம் மனிதனாக உருவாகியுள்ளோம்.
ஆனால்
1.மற்றவர்களைப் பார்த்து அவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்று
2.அசுர உணர்வுகள் கொண்டு நாம் எண்ணுவோமென்றால்
3.அது நமக்குள் இருக்கும் நல்ல குணங்களைத் தாழ்த்தி விடுகின்றது.
4.நம்மைத் தாழ்த்தப்பட்டவனாக மாற்றுகின்றது என்பதனைத் தெளிவாகக்
கூறினார் காந்திஜி.
ஒருவரைத் தாழ்த்தப்பட்டவர் என்று எண்ணப்படும்போது அந்தத் தாழ்த்தப்பட்ட
உணர்வே நமக்குள் இருக்கும் நல்ல குணத்தைச் சுதந்திரமாக வாழ விடாதபடி நல்ல குணங்களை
என் உடலிலே இயக்காதபடி இந்த மனித உடலை உருவாக்கிய உயிரையே தாழ்த்தப்படும் நிலைக்குக்
கொண்டு செல்கிறது.
உயிரினங்களில் ஒன்றை ஒன்று தாக்கித் தன் உணர்வை வளர்த்துக்
கொள்ளும் நிலை பெற்ற
1.அந்தத் தாழ்த்தப்பட்ட உணர்வுகள் நமக்குள் வரப்படும் போது
2.மனிதன் என்ற நல்ல நிலை இல்லாதபடி
3.நம் எண்ணமே நம்மைத் தாழ்த்தப்பட்ட உயிரினமாக மாற்றுகின்றது
ஆகவே தாழ்த்தப்பட்டவர் யார்…? அப்படிப்பட்டவர் எவர் இருக்கின்றார்கள்…?
தாழ்த்தப்பட்டவராக நம்மை யார் உருவாக்குகின்றார்…?
நம்முடைய எண்ணம் தான்…! நாம் எண்ணியது எதுவோ நமது உயிர் அதை
அணுவாக மாற்றி நம் உடலாக மாற்றிவிடுகின்றது.
எல்லோரையும் மகிழ்ச்சி பெறச் செய்யும் மனித உடல் பெற்ற பின்
இத்தகைய பகைமை உணர்வு வந்த பின் நமக்குள் என்ன செய்கின்றது என்று சற்று சிந்தித்துப்
பாருங்கள்.
பகைமை உள்ளவன் என்று நாம் எண்ணினால் அந்தப் பகைமை உணர்வே நமக்குள்
வருகின்றது. “ஒரு தாழ்த்தப்பட்டவன்…” என்னை இப்படிப் பேசிவிட்டான் என்ற அந்த வெறி உணர்வுகள்
நமக்குள் வருகின்றது.
என்னைத் தாழ்ந்தவன் என்று பேசக்கூடிய நிலைகள் வந்து விட்டதா…?
என்று அந்த உடலுக்குள் வெறி உணர்வைத் தூற்றும் உணர்வு போகும் போது
1.இதைத்தான் அவர்களும் வளர்க்க முடிகின்றது.
2.அதைத்தான் நாமும் வளர்க்க முடிகின்றது.
மனிதனாக வாழ்கின்றோம் என்ற நிலைகளில் நாம் சுதந்திரமாக வாழ
முடிகின்றதா…? இல்லை…!
நாம் எல்லோரும் அரவணைப்புடன் வாழ்ந்தால் நமக்குப் பரிபூரண
சுதந்திரம் கிடைக்கின்றது என்று தான் காந்திஜி சொன்னார்.
ஒதுக்கப்பட்ட நிலையில் உள்ள கடும் நோயாளிகளையும் காந்திஜி
சந்தித்தார். கைகள் உடல் எல்லாம் அழுகி அது அருவருப்பாக இருந்தாலும் அங்கே சென்றார்.
அவர்களைப் பார்த்துக் காந்திஜி இரக்கப்படவில்லை. இரக்கமும்
ஈகையும் அங்கு கொண்டு வரவில்லை.
1.மாறாக அவர்கள் நலம் பெற வேண்டும் என்று தான் எண்ணினார்.
2.அவர்கள் உயர வேண்டும் என்ற உணர்வைத் தான் தனக்குள் வளர்த்துக்கொண்டார்.
3.அந்த நோயைப் பற்றி எண்ணவில்லை.
ஆரோக்கியமான உடலாக அவர்கள் பெற வேண்டும் என்ற உணர்வுகளிலே
உயிரிலே எண்ணப்படும் போது அது கடவுளாக இயக்குகின்றது. அந்த உணர்வின் தன்மை கொண்டு அவர்கள்
சுகமாக வேண்டும் என்று தான் காந்திஜி எண்ணினார்.
“அன்னை தெரஸா” என்பவரும் இதைப்போலத் தான் ஏழ்மைகளில் இருந்து
மக்கள் விடுபட வேண்டும். இனங்கள் இல்லை. பேதங்கள் இல்லை என்று காந்திஜியின் வழியில்
செயல்பட்டார்,
இனம் என்று இருப்பது நமக்குள் நோயின் தன்மை வரப்போகும் போது
நமது நல்ல குணங்களைத் தாக்குகின்றது.
இத்தகைய நாம் இனங்களைப் பிரித்து குறை கூறும் போது அந்தக்
குறையின் உணர்வு நமக்குள் வரும் போது நல்ல குணங்களைத் தாக்குகின்றது.
நாம் பார்க்கும் அனைவரையும் மதித்துப் பழக வேண்டும். உயிரைக்
கடவுள் என்றும் அந்த ஈசன் வீற்றிருக்கும் உடலை ஆலயம் என்று நாம் மதித்துப் பழக வேண்டும்.
இது தான் ஞானிகள் சொன்னது. அந்த ஞானிகள் சொன்ன வழியைப் பின்பற்றி
ஒவ்வொருவரும் உயர்ந்த நிலை பெறவேண்டும் என்று நாம் தியானிப்போம் தவமிருப்போம்.