ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 11, 2018

உண்மையான பக்தியும் யாகமும் - ஈரேழு லோகத்தையும் வென்றவன் விண் சென்றான்

1.  பக்தி:-
பக்தி என்பது எது? கீதையில் நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்றுரைக்கப்படுகின்றது. அதாவது மற்றவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணும் பொழுது இதனின் உணர்வின் அணுவாக நமக்குள் மாறுகின்றது.

கீதையைச் சொல்வது யார்...? கண்ணன்…! கண்கள்”

நாம் ஒரு மனிதரைப் பார்க்கின்றோம்.
1.அவர் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்று எண்ணுகின்றோம்.
2.இதனின்  உணர்வு நம்முள் இணைந்து நம்மை உயர்த்துகின்றது.
3.நமது சொல் அவரை உயர்த்தப் பயன்படுகின்றது.

கண்ணின் இயக்கங்களுக்கு இவ்வளவு பெரிய தத்துவத்தைக் கொடுக்கின்றார்கள்.

கோயிலைச் சாதாரணமாக நினைக்கின்றோம். ஆனால் நம்முடைய ஒழுக்கப் பண்பாடுகளை வளர்ப்பதற்கு அவ்வளவு தெளிவாகச் செய்துள்ளார்கள் ஞானிகள்.

சாதரண மனிதர்களும் பிறவியில்லா நிலை பெற வேண்டும், அகஸ்தியர்  கண்டுணர்ந்த உண்மையின் உணர்வை பெற வேண்டும் என்ற நிலைக்காக வேண்டிக் காவியங்களையும் ஆலயங்களையும் படைத்தார்கள்.

2.  யாகம்:-
உண்மையான யாகம் என்பது நமது உயிர் ஒரு நெருப்பு, நாம் எந்த உணர்வின் தன்மையினை நமது உயிரான நெருப்பில் போடுகின்றோமோ இதனின் உணர்வலைகளை நமது உயிர் உடல் முழுவதும் பரப்பும்.

உணர்வின் சொல்லாக வரப்படும் பொழுது பிறருடைய நிலைகளை இயக்கும். நீங்கள் ஒருவர் மீது மயக்கப் பொடியைப் போட்டால் மயங்கி விடுகிறார். நல்ல நறுமணத்தைக் கொடுத்தால் மகிழ்ச்சி ஆகின்றார்.

அதே போல் தான் நல்ல உணர்வின் தன்மை சொல்லாகச் சொல்லப்படும் பொழுது கேட்போர் உணர்வுகளை இனிமையாக்குகின்றது. நமக்குள் நட்பு என்ற நிலை வளர்கின்றது. பகைமை என்ற நிலைகளை மாற்றுகின்றது. அருளுணர்வை நமக்குள் கூட்டுகின்றது.

உயிரைக் கடவுளாக மதித்து உடலை ஆலயமாக மதித்து மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும் என்று எண்ணும்போது அருள் ஒளி பெருகுகின்றது. ஈசனான உயிர் வீற்றிருக்கும் ஆலயம் பரிசுத்தமாகின்றது.

3.  ஈரேழு லோகத்தையும் வென்றவன் விண் சென்றான்
சூரியன் பல உணர்வுகளை எடுத்து ஒளியாக மாற்றுகின்றது. இது போன்று உயிரானது தோன்றி தன்னுள் உணர்வை ஒளியாக மாற்றிக் கொண்டபின் துருவ நட்சத்திரமாக இருக்கின்றது.

மனிதரிடம் உள்ள ஆறாவது அறிவு ஏழாவது நிலை ஆகும் போது சப்தரிஷி மண்டலம் ஆகின்றது.

1.சூரியனிடமிருந்து வரக்கூடிய கலர்கள் ஆறு - ஏழாவது ஒளி
2.மனிதருடைய அறிவு ஆறு - தன் உணர்வின் தன்மை அறிந்து எடுப்பது ஏழு.

இதைத்தான் ஈரேழு லோகத்தையும் வென்றவன் விண் செல்கின்றான் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.