ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 8, 2018

1.துவைதம் 2.அத்வைதம் 3.விசிஷ்டாத்வைதம் – ஆதி சங்கரர் உணர்த்திய மெய் வழியில் அந்த மூன்றாவது நிலையை அடைதல் வேண்டும்

நாம் உயர்ந்த உணர்வுகளை நுகரப்படும் பொழுது அது அபிஷேகம் ஆகின்றது. இதனின் உணர்வலைகள் உடல் முழுவதும் படர்கின்றது. தெளிவாகும் உணர்வின் அணுவாக மாறி நம்மை தெளிந்த அறிவுடையவராக ஆக்குகின்றது.

இதனை நாம் அனைவரையும் பெறச் செய்வதற்கே ஆலயங்களில் அபிஷேகமும் ஆராதனையும் செய்ய வைத்தார்கள் ஞானிகள்.
1.இது “துவைதம்…”
2.ஆனால் அருள்ஞானிகளின் அருளுணர்வை எண்ணினால் அது “அத்வைதம்…”
3.இதன் வழி கொண்டு நுகரப்படும் பொழுது “விசிஷ்டாத்வைதம்”.
4.நுகர்ந்த உணர்வின் உணர்ச்சி நம்மை இயக்குகின்றது.

உணர்வின் தன்மை உடலானால் துவைதம், உயர்ந்த குணங்களை நம் உடலாக்க வேண்டும்.

வாழ்க்கையில் வரும் இருள்களை அகற்றப் பழக வேண்டும் என்பதற்குத்தான் “துவைதம்” எனும் நிலையாக ஆலயங்களில் உருவங்களை அமைத்து நமக்கு உணர்த்தினார்கள் ஞானிகள்.

காவியப் படைப்புகள் அனைத்தும் அத்வைதம், காவியப் படைப்புகளின் கருத்துக்களை எண்ணும் பொழுது அதனின் உணர்ச்சிகளை நாம் நுகர முடிகின்றது.

நுகர்ந்தபின் அதனின் உணர்ச்சியின் இயக்கமாக நம்மை இயக்குகின்றது.

1.கண்களால் பார்ப்பது அனைத்தும் துவைதம்
2.கண்களுக்குப் புலப்படாததை எண்ணி (நினைவால்) எடுப்பது அத்வைதம்
3.நாம் எண்ணியது உணர்வாகி உணர்ச்சிகளாகி அது நுகரும் தன்மையாகும் பொழுது விசிஷ்டாத்வைதம்.

நாம் துவைதத்தின் நிலையிலே (ஒன்றாவது) தான் உள்ளோம். ஆலயங்களில் உள்ள சிலையைக் கடவுளாகக் காணுகின்றோம்.

அந்தத் தெய்வத்தின் சக்தியை எண்ணி நமக்குள் எடுக்க வேண்டும் என்ற நிலைக்கு வந்தால் (இரண்டாவது) அத்வைதம் தீமைகளை உறுதியாக நாம் நீக்க முடியும்.

தீமையை நீக்கும் அந்தச் சக்திகள் நமக்குள் விளையத் தொடங்கினால் தன்னிச்சையாக (விசிஷ்டாத்வைதம்) மகரிஷிகளின் உணர்வை நுகரச் செய்யும். நம்மை அறியாமலே அதை நுகர்ந்து கொண்டே இருப்போம். (அதைத்தான் முக்கண் முதல்வன் – நெற்றிக் கண் – ஞான திருஷ்டி என்று சொல்வது)

அந்த மூன்றாவது நிலைக்கு வந்தால் நாம் ஆலயங்களில் காட்டப்பட்டுள்ள தெய்வ குணமாக வளர்ந்து மனிதனுக்கு அடுத்த நிலையான தெய்வமாக ஆக முடியும்.

இதுவெல்லாம் ஆதி சங்கரர் அன்று 2000 ஆண்டுகளுக்கு முன் சொன்னது.