ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 24, 2018

போகர் உருவாக்கிய சிலையின் மகத்துவம் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள் - தீமையைப் பிளக்கும் “மனோசிலையும்” மனதைத் தெளிவாக்கும் “கண்ணாடிக் கற்களும்” அதற்குள் உண்டு…!


நம்முடைய வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் சந்தர்ப்பவசத்தால் பிறர் படும் வேதனையான உணர்வுகளைச் சுவாசித்து நம் உடலுக்குள் இரண்டறக் கலந்துவிட்டால் நம் உடலின் மணம் (ஆன்மா) மாறுகின்றது.

வேதனையான உணர்வுகளே நம் ஆன்மாவாக மாறும் போது நமக்குள் நல்ல குணங்கள் இருந்தாலும் நாம் சுவாசிக்கும் போதெல்லாம் நம்மை அறியாமலேயே வேதனை... வேதனை... வேதனை... கோபம்... துயரம்... என்ற எண்ணங்களே நமக்குள் வந்து கொண்டிருக்கும்.

1.நம் ஆன்மாவில் இப்படிப் பெருக
2.இந்த உணர்வைச் சுவாசிக்கச் சுவாசிக்க
3,அந்த உணர்வின் அலைகள் உடலுக்குள் சென்று கிரியையாகி
4.அதனின் செயலாகவே நமக்குள் உருவாக்கி விடும்.

எதனின் உணர்வு நமக்குள் ஆன்மாவாகிக் கொண்டுள்ளதோ அந்த மணத்தின் தன்மையை நுகர்ந்து உயிர் அதனின் கிரியையாக இயக்கி அதனின் ஞானமாக நம் எண்ணத்தையும் செயலையும் இவ்வாறு மாற்றி கொண்டே உள்ளது.

நாம் யாரும் தவறு செய்யவில்லை.

பிறர் வெளிப்படுத்தும் துயரங்களோ வேதனைகளோ கோபங்களோ குரோதங்களோ சாப வினைகளோ பாவ வினைகளோ கேட்டு உணர்ந்த அந்த உணர்வுகள்
நம் ஆன்மாவில் பெருகி
2.நம் நல்ல உணர்வுகளைச் செயலற்றதாக மாற்றிவிடுகின்றது.

இதிலிருந்து மக்கள் அனைவரையும் மீட்க வேண்டும் என்பதற்குத்தான் முருகனின் சிலையை போகன் உருவாக்கினான்.

அந்தச் சிலையை எப்படி உருவாக்கினான்..? அதனின் மகத்துவம் என்ன…? என்று மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் உணர்த்தினார்.

ஒவ்வொரு தாவர இனத்திலும் நட்சத்திர உணர்வுகள் கலந்துள்ளது. நட்சத்திரத்தின் உணர்வுகள் இயக்கப்பட்டு அந்தத் தாவர இனத்தின் மணத்தை எப்படி இயக்குகின்றது..?

அதைச் சுவாசிக்கும்போது நம் எண்ணங்களின் இயக்கங்கள் எவ்வாறு என்று தன் உணர்வின் செயலால் உணர்ந்தவன் போகன்.

அந்தச் சத்துக்கள் அனைத்தையும் தன் உணர்வின் அறிவால் எப்படி நுகர்ந்தான்... அதைப் போகித்தான்... தனக்குள் கவர்ந்து தனதாக எப்படி ஆக்கினான். என்ற நிலைகளை குருநாதர் அங்கே சுட்டிக் காட்டுகிறார்.

பல கோள்களின் சத்துக்கள் சேர்ந்து மனித உடலை நாம் பெற்றிருந்தாலும் நட்சத்திர இயக்கங்கள் அது தன் உணர்வின் பொறிகளை எப்படி இயக்குகிறது என்ற நிலைகளையும் சுவாசிக்கும் பொழுது எண்ணங்களாக எப்படி இயக்குகிறது என்ற நிலைகளையும் கண்டுணர்ந்தவன் போகன்.

நவ பாஷாணத்தையும் சூரியனில் இருந்து வெளிப்படும் பாதரசத்தையும் நட்சத்திரங்கள் இயக்கும் இந்த உணர்வின் தன்மையை ஒன்றாக இணைத்து அதற்கென்ற சூரிய புடமாக்கி இயக்கினான்.

இப்போது காந்தக் கண்ணாடிகள் (LENS) என்று சொல்கிறோம் அல்லவா. போகன் அன்று தனக்குள் கண்டறிந்த உணர்வின் தன்மையை சூரியக் கதிர்களைக் குவித்து இந்த உணர்வின் தன்மையை தனக்குள் எடுத்துக் கொண்டான்.

நட்சத்திரங்களால் விளையப்பட்ட வைரங்களையும் நவ பாஷாணத்தையும் சூரியனிலிருந்து வெளிப்படும் பாதரசத்தையும் மூன்றையும் ஒன்றாக இணைத்தான். (முருகன் சிலையைச் செய்ய)

பாதரசம் நம் உடலிலும் உண்டு. தாவர இனத்திலும் உண்டு. கல்லிலும் உண்டு.

எவை எவைகளில் எதனின் நிலைகள் எவ்வாறு இருக்கின்றன என்ற நிலைகளை உணர்ந்தவன் போகன். கண்ணாடிக் கற்களைக் (CRYSTAL) கண்டுபிடித்தவன் போகன்.

ஏனென்றால் ஒளியின் தன்மை கொண்டு தெளிவாக உணர்த்தும் அந்த உணர்வின் தன்மையை அதை உரசி அதையும் (சிலை செய்ய) இணைத்துக் கொண்டான்.

மனிதனின் எண்ணத்தின் சிந்தனைகள் உருவாகக் காரணமான பல கோடித் தாவர இனங்களைத் தேடி அலைந்து அவைகளையும் அந்தச் சிலைக்குள் இணைத்தான்.

சிந்தனைத் திறன் கூடி தீமைகளை அகற்றிடும் உணர்வின் ஞானங்கள் மனிதனுக்குள் எவ்வாறு வளர்ந்தது என்ற நிலையும் அந்த ஆற்றல்கள் எந்தெந்தத் தாவர இனச் சத்திற்குள் இருக்கின்றது என்பதையும் நுகர்ந்தறிந்தான். தன் உயிரின் துணை கொண்டு அறிவால் அறிந்தான்.

அத்தகைய பல கோடி உணர்வின் சத்தையும் காந்தப் புலனின் நிலைகள் கொண்ட பாதரசத்தையும் அதற்குள் இணைத்து சிலையில் சாரணையாக ஏற்றினான்.

தீமைகளை அகற்றும் ஆற்றல்களையும் நஞ்சினை அகற்றிடும் உணர்வின் சத்துக்களையும் சிலையில் சாரணையாக ஏற்றினான் போகன்.

அதை ஏற்றி மனிதனைப் போன்ற ஒரு உருவச் சிலையாக அமைத்து
1.NEGATIVE POSITIVE அதாவது சத்ரு மித்ரு என்ற நிலைகளில் இயக்கப்படும் போது
2.எப்படி மின் அணுவின் நிலைகளில் விளக்கு எரிகின்றதோ
3,காந்தக் கட்டைகளைச் சுழற்றும் போது காந்தப் புலனறிவு இயங்குகின்றதோ
4.அதைப் போன்று உயிருள்ள சிலையாக உருவாக்கினான்.

அதே சமயத்தில் கந்தகத்தை மற்ற பொருள்களோடு இணைத்து வெடி மருந்தை 5300 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கியது இதே போகன் தான்.

அதை மனோசிலையாக உருவாக்கி வைத்தியத்துக்கு உபயோகப்படுத்தும் நிலைக்குக் கொண்டு வந்தான் போகன். அதாவது மனோசிலை நம் உடலுக்குள் ஊடுருவிச் சென்ற பின் (வெடித்து) தீமைகளைப் பிளக்கும் நிலைகளுக்குச் செய்தவன் போகன் தான்.

கந்தகத்தையும் மற்ற பொருள்களையும் இணைத்து மனோசிலை என்ற வெடி மருந்தை உருவாக்கியதும் அவனே…! என்று இதைக் குருநாதர் காட்டுகின்றார்.

இந்த உணர்வின் கருவின் தன்மையையும் அதற்குள் சேர்த்து இந்த உணர்வின் சிலையாக அன்று உருவாக்கினான்.
1.மனிதனைப் போன்ற இந்த உணர்வின் சத்தை அது உருவாக்கி 
2.மக்கள் அனைவரும் சிலையை உற்றுப் பார்க்கும் போது
3.இதனின்று உமிழ்த்தும் மணத்தை நுகரச் செய்து
4.மனித வாழ்க்கையில் அறியாது சேர்ந்த தீமைகளை அது உள் நின்றே பொசுக்கி
5.மக்களை இன்னல்களிலிருந்து விடுபடச் செய்யும் தத்துவத்தை உருவாக்கினான் போகன்.
6.இதற்காகத் தான் அந்த உருவச் சிலையை உருவாக்கினான் போகன்.