நாம்
ஒருவருக்கு பணம் கொடுத்து உதவி செய்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அவரும்
ஒரு மாதத்தில் தருகிறேன் என்று வாங்கிச் செல்கின்றார். சந்தர்ப்பவசத்தால்,
குறிப்பிட்ட காலத்திலே கொடுக்க முடியவில்லை.
அவர்
குறிப்பிட்ட காலத்திலே திருப்பித் தராததை எண்ணி, நம்மையறியாமல் நாம் வேதனைப்படுகின்றோம்.
ஒரு மாதத்தில் தருகிறேன் என்று சொன்னதைக் கேட்டு நாம் பிறிதொருவரிடம்
கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுத்தோம்.
குறிப்பிட்ட
காலக் கெடுவுக்குள் கொண்டுவந்து பணத்தைக் கொடுக்க வேண்டும் என்று சொல்லித்தானே கொடுத்தோம். ஒரு மாதமாகிவிட்டது.
மேலும் பத்து நாள் சென்றுவிட்டது. ஆனால்,
அவர் கொண்டுவந்து கொடுக்கவில்லையே? என்ற இந்த எண்ணம்
வரும். நம்மை அறியாமல் வேதனைப்படும் நிலை வருகின்றது.
நாம்
தவறு செய்யவில்லை.
நல்லதைத் தான் செய்தோம். வாங்கிக் கொண்டு போனவரும்
எப்படியும் கொடுத்துவிடவேண்டும் என்றுதான் வாங்கிக் கொண்டு போனார்.
ஆனால்
அவரின் சந்தர்ப்பம் கொடுக்க முடியவில்லை. அப்பொழுது நம்மையறியாது வேதனைப்படச்
செய்கின்றது. அந்த வேதனையான எண்ணத்துடன் போய்க் கேட்கலாம் என்று
போகிறோம்.
பாலிலே
விஷம் பட்டுவிட்டால் அதைக் குடித்தால் நினைவிழக்கச் செய்கின்றது. சுவையான
பதார்த்தத்தில் அந்த விஷம் கலந்திருந்தால் என்ன சுவையாகச் செய்து சுவையான நிலையில்
சாப்பிட்டாலும் அதற்குள் மறைந்துள்ள விஷம் நம்மை மயங்கச் செய்கின்றது.
நல்ல
மனத்துடன் நாம் இருந்தாலும் உதவி செய்தாலும் அந்தக் “காலக் கெடு” ஞாபகம் வந்துவிட்டால் அவரை எண்ணும் பொழுது இந்த வேதனையுடன் கொஞ்சம் கோபம் வரும்.
கோபம் வந்தவுடன் நாம் சிந்திக்கும் திறனை இழந்துவிடுகின்றோம்.
நேராகச்
சென்று அவரைப் பார்த்தவுடன் முதலில் அந்த உணர்வு நமக்குள் வெறுப்பை ஏற்படுத்துகின்றது. அவர் மேல்
வெறுப்பான உணர்வு இந்த வேதனை வெறுப்பாக மாறுகின்றது.
முதலிலே
பண்பாக பாசமாக இருக்கும் பொழுது அவர் கேட்ட பணம் கொடுத்தது, அவர் மேல்
இருக்கக் கூடிய இந்தப் பாசம் காலக் கெடு வந்ததும் நம்மை அறியாமலே வெறுப்பாக மாறுகின்றது.
இந்த
வேதனை உணர்வும்,
வெறுப்பான உணர்வும் நம்மை அறியாமலே நாம் சுவாசிக்கின்றோம். அவர் கொடுக்காதபொழுது அந்த நினைவலைகள் வருகின்றது. நாம்
அவரை எண்ணும் பொழுது வேதனையான உணர்வும் வெறுப்பும் வருகின்றது.
அவர்
செய்த செயலை நினைக்கும் பொழுது, “இரண்டிலே ஒன்று பார்ப்போம்” என்ற உணர்வு கொண்டு அவருடைய சூழ்நிலையை அறியச் செய்யாது அந்த உணர்வின் வேகம்
நேரே சென்று கேட்கும் பொழுது அவர், “இப்பொழுது இல்லை… பிறகு கொடுக்கிறேன்....!”
என்கிறார்.
“நான் சொல்லித்தானே கொடுத்தேன்” என்ற அந்த உணர்வுதான்
அங்கே வரும். அவர் எந்த நியாயத்தைச் சொன்னாலும் கேட்க முடியாது.
அந்த வெறுப்பின் தன்மை அதிகமாகின்றது.
அவரோ... “நான் கொடுக்கிறேன்
என்றுதானே சொன்னேன். என்ன செய்து கொள்கிறாயோ செய்து கொள்... போ...!”
என்கிறார்.
அப்பொழுது
நமக்குள் இந்த வெறுப்பு வேதனையும் கலந்து கோபம் அதிகமாகின்றது. இந்த மூன்று
குணமும்தான் வருகின்றது.
1.நாம்
நல்ல குணத்தை என்ன செய்தும்
2.விளைய வைக்க முடியவில்லை.
நாம்
நல்ல பயிரை விதைத்து இருக்கின்றோம் என்றால் அதன் பக்கத்திலேயே களை முளைக்கின்றது. களை அருகிலே
முளைத்ததனால் நல்ல பயிர் சிறந்த பயனைக் கொடுப்பதில்லை.
இது
போன்று நாம் நல்லதை எண்ணினோம். இருப்பினும் இதுபோன்று களைகள் முளைத்து விடுகின்றது.
அப்பொழுது
1.இந்த வேதனையான உணர்வுகளக் கொண்டு
2.நல்ல குணத்தைச் செயல்படுத்த முடியவில்லை.
சற்றுக்
கோபம் வந்து
“நீ எல்லாம் நன்றாக இருப்பாயா..?” என்கிறோம்.
இதை அவர் கேட்கும் பொழுது அவர் குணத்திலும் பதிந்து நாம் எண்ணிய அந்த
எண்ணங்கள் அங்கே வந்துவிடுகின்றது.
“ஓம் நமச்சிவாய… சிவாய நம ஓம்...” அவர் நான் தான் கொடுக்கிறேன் என்று சொன்னேனே… என்ன செய்துகொள்கிறாயோ
செய்து கொள் போ” என்கிறார்.
நாம்
சொல்லிய இந்த எண்ணம் அதே உணர்வுகள் அங்கே போய் வெறுப்பின் தன்மை உண்டாக்கியது. இதெல்லாம்
வாழ்க்கையில் வருகின்றது. நாம் தவறு செய்யாமலேயே இதெல்லாம் நம்மிடம்
வருகின்றது.
உதவி
செய்தோம் அந்த சந்தர்ப்பம் அவரால் கொடுக்க முடியவில்லை. நமக்கு
அவர் திரும்பச் சொன்னவுடன் நமக்கு ஆத்திரம் அதிகமாக வருகின்றது. அந்த ஆத்திரம் அதிகமானவுடன் என்ன செய்கின்றது?
அது
சிறுகச் சிறுக விளைந்து நம்மை எதிர்த்துப் பேசிவிட்டார் என்ற நிலையில் குரோதம் விளைகின்றது. அவரைப்
பற்றி நம்மிடம் யாராவது நல்லதாகச் சொன்னால் நம்மால் கேட்க முடியவில்லை. எதிர் உணர்வு வருகின்றது.
அவரைப்
பற்றி மோசமாகவே பேசச் சொல்லும். அவருக்கு யாராவது, ஏதாவது
நன்மைகள் செய்வதாக இருந்தால் அதைச் செய்யவிடாதபடி தடுக்கும் நிலையில் நம்மைப் பேசச்
சொல்லும்.
எல்லா
மனிதருக்கும் இதைப் போன்ற நிலைதான். நாம் தவறு செய்யவில்லை.
ஆயிரத்தில்
ஒருவர்தான் வலுவாகச் சிந்திக்கும் திறனுடன் இதிலிருந்து மீளக்கூடியவர்களாக இருப்பார்கள். மற்ற எல்லோருக்கும்
சிந்திக்கும் திறன் இழந்து வேதனை வெறுப்பு ஆத்திரம் இந்த உணர்வாக மாறும்.
நல்லதை
எண்ணினோம்.
இந்த உணர்வெல்லாம் நம் நல்ல குணத்தில் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்ந்து மேல்வலி
கைகால் குடைச்சல் கண் வலி காது வலி இடுப்பு வலி இது எல்லாம் வலிக்கும். நாம் எத்தனை வேதனைப்பட்டோமோ. அதெல்லாம் இவ்வாறு வரும்.
இதையெல்லாம்
சேர்த்து மனிதனாக வளர்ந்த நாம்
1.“யானை தேய்ந்து கட்டெறும்பு ஆனது போல” நமது நல்ல குணத்தில்
விஷமான உணர்வுகள் சிறுகச் சிறுகச் சேர்ந்து
2.நமது நல்ல குணம் சிறுகச் சிறுகத் தேய்ந்து அழகான உடலும் தேய்ந்து,
3.நம் சொல்லிலும் பேச்சிலும் தரம் குறைந்து
4.நம்மை அறியாமலேயே வேதனை என்ற நிலையில் கவலைப்பட்டு
5.இந்த உணர்வு அதிகமாகும் நிலையில்
6.எந்த வியாபாரத்திற்குப் போனாலும், பணம் திரும்ப வராது.
6.சண்டை போட்டுத்தான் வாங்க வேண்டும்.
இதைத்தான்
கீதையிலே
“நீ எதை நினைக்கின்றாயோ… அதுவாகின்றாய்...”
என்று சொல்லப்படுகிறது. நாம் இதையெல்லாம் தெளிவாகத்
தெரிந்து கொள்ள வேண்டும்.
நம்
அன்றாட வாழ்க்கையில் இதைப் போன்று நமக்குள் சேரும் தீமைகளை அவ்வப்பொழுது சுத்தப்படுத்த
வேண்டும்.
அதற்குத்தான் ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை உங்களுக்குக் கொடுத்துள்ளோம்.
ஆத்ம
சுத்தி செய்த பின்
1.மகரிஷிகளின்
அருள் சக்தி அவர்கள் உடல் முழுவதும் படர வேண்டும்.
2.அவர்களுக்கு
நல்ல வருமானம் வர வேண்டும்
3.என்னிடம்
வாங்கிய பணத்தைத் திருப்பி உடனே கொடுக்கும் சக்தி அவருக்குக் கிடைக்க வேண்டும்
4.எனக்கு
அந்தப் பாக்கியம் கிடைக்க வேண்டும் என்று இதைத்தான் செய்ய வேண்டும்.
உங்கள்
எண்ணம் அவருக்கு உருதுணையாக இருந்து அவர்
வருமானமும் பெருகி உங்கள் பணம் உங்களைத தேடி வரும். செய்து பாருங்கள்.
ஒவ்வொரு
சந்தர்ப்பத்திலும் நாம் நுகரும் உணர்வுகள்தான் நம்மை இயக்குகின்றது என்று அறிந்து நம்
குருநாதர் காட்டிய அருள் வழிப்படி அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை இணைத்துக் கொண்டே
வந்தோம் என்றால் எந்தத் தீமைகளையும் வெல்லலாம். மகிழ்ந்து வாழ முடியும்,
மகரிஷிகளின்
அருள் வட்டத்துடன் இணைய முடியும்.