ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 1, 2018

பித்தம் உடலுக்குள் எப்படி அதிகரிக்கின்றது? அதை மாற்றும் வழி என்ன?

மனிதனின் வாழ்க்கையில்
1.கோபப்படுவோரை
2.நோய்வாய்ப்படுவோரை
3.வேதனைப்படுவோரை
4.வேதனைப்படுத்துவோரைப் பார்க்கும் பொழுதெல்லாம் நம் உடலில் “ஊழ்வினை என்ற வித்தாகிவிடுகின்றது”.

ந்தந்த குணத்திற்குத்தக்க உணர்வுகள் நம் இரத்த நாளங்களில் கலக்க ஆரம்பித்துவிடுகின்றது.

அப்பொழுது நம் உறுப்புகளில் இருக்கும் நுரையீரல் கல்லீரல் கிட்னி போன்ற உறுப்புகளில் இரத்தம் சுழன்று வரும் பொழுது மற்ற ஈரல்களில் அந்த உறுப்புகளில் உள்ள நல்ல அணுக்கள் விஷத்தின் தன்மையால் சோர்வின் தன்மை அடைகின்றது. அதனின் இயக்கங்களும் குறைகின்றது.

ஏனென்றால், “இரத்தத்தில் அதற்கு வேண்டிய உணர்வு (உணவு)” கிடைப்பதில்லை. அது உடனே வாடிவிடுகின்றது அல்லது மடிய வைத்துவிடுகின்றது.

மடிந்துவிட்டால் அந்த உறுப்புகள் சீர்கெட்டு விடுகின்றது. நாம் தவறு செய்யவில்லை.

வேதனை உணர்வுகள் -அந்த விஷத் தன்மை இரத்தத்தில் கலக்கப்படும் பொழுது விஷத்தை வடிகட்டும்.., “ஏற்றுக் கொள்ளக் கூடிய பித்த சுரப்பிகள்” அந்த விஷத் தன்மைகளைத் தனக்குள் எடுத்துக் கொள்ளும்.

அந்த விஷத்தின் தன்மை அதிகமாகப் பெருகிவிட்டால்.., அது உமிழ்த்த நேர்ந்தால்.., “பித்தம்” என்ற நிலைகள் நம் உடலுக்குள் அதிகரிக்கும்.

அதனால் அடிக்கடி சோர்வடையச் செய்து நம்மையறியாமல் “தலை சுற்றுவதும்” சிந்தனையற்ற நிலைகளாகவும் ஆகிவிடும்.

அப்பொழுது நாம் உணவாக உட்கொள்ளும் உணவைச் சரியாக ஜீரணிக்க முடியாது போய்விடும். இதற்கு எதிர் நிலையான நிலைகள் ஆகிவிடுகின்றது.

பித்த சுர்ப்பிகளில் சேரும் இத்தகையை நஞ்சான உணர்வுகளைக் குறைக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்...?

உயிரணுவாகத் தோன்றி மனிதனாக வளர்ந்து நஞ்சை எல்லாம் வென்றவன் அகஸ்தியன். உயிருடன் ஒன்றி எல்லா உணர்வுகளையும் ஒளியாக மாற்றியவன் அகஸ்தியன்.

அகண்ட அண்டத்திலிருந்து வரும் கடுமையான நஞ்சுகளையும் உணவாக எடுத்து அதை ஒளியின் சுடராக மாற்றித் துருவ நட்சத்திரமாக இன்றும் வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளான் அந்த “அகஸ்தியன்”.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எடுத்து நமக்குள் உள்ள “ஒவ்வொரு குணங்களிலும்... ஒவ்வொரு எண்ணங்களிலும் இணைக்க வேண்டும்.

வாழ்க்கையில் நாம் சந்திக்கும் சந்தர்ப்பம் எந்தக் குணம் வந்தாலும் அதற்குள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும் கலக்கச் செய்யும் பழக்கம் வரவேண்டும்.

அதே சமயத்தில் நம் உடலிலுள்ள சிறு குடல் பெரும் குடல் கணையங்கள் கல்லீரல் மண்ணீரல் நுரையீரல் சிறு நீரகம் இருதயம் போன்ற உறுப்புகள் முழுவதிலும் துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகளைக் கண்ணின் நினைவு கொண்டு இணைக்க வேண்டும்.

அப்பொழுது அந்த உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் உற்சாகம் அடையும். அந்த அகஸ்தியன் எல்லா உனர்வுகளையும் ஒளியாக்கியது போன்று ஒளி பெறும் உணர்வின் கருவாக விளையத் தொடங்கும்.

நஞ்சை அடக்கிப் பேரருள் பேரொளியாக நமக்குள் மாறும். உடல் நலம் பெறுவோம். நோய்கள் நமக்குள் வராத நிலையும் ஆகின்றது.

இவ்வாறு வாழ்க்கையில் ஒவ்வொரு நொடிகளிலேயும் நம் ஆறாவது அறிவினை அந்த நல்ல உணர்வினைச் சீராகப் பயன்படுத்துதல் வேண்டும்.

துருவ நட்சத்திரம் எத்தகைய விஷம் வந்தாலும் அதை ஒளியாக மாற்றுவது போல் நம் உயிரான்மாவிலும் அந்த ஆற்றல் பெருகும். தீமை புகாத வலிமை பெற்றதாக மாறும்.