ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 21, 2018

எண்ணியதை.. எண்ணியவாறு நடத்தித் தரும் நாயகன்… “நம் உயிரான ஈஸ்வரன் தான்…!”


அனுபவங்கள் பெறுவதற்காக காடு மலை மேடெல்லாம் அழைத்துச் சென்றார் குருநாதர்.

காட்டுக்குள் உன்னை அழைத்துச் சென்றதும் உனக்குள் துன்பப்படுத்தும் உணர்வுகள் ஏன் வருகின்றது…? என்று தெளிவுபடுத்தினார் குருநாதர்.
1.நானும் இதைத்தான் பெற்றேன்… “துன்பத்தில்தான்.. இன்பத்தைக் கண்டேன்…!”
2.துன்பத்திலிருந்துதான் இன்பத்தைப் பெறும் அணுக்களை நீ உருவாக்குகின்றாய் என்றார்.

நீங்கள் இந்த உபதேசங்களைக் கேட்கும்பொழுதும் படிக்கும் பொழுதும் வீட்டில் சங்கடமென்றோ வெறுப்பென்றோ அதன் மேல் நினைவினைச் செலுத்திடாது அருள் ஒளியின் உணர்வினை நீங்கள் பெறுங்கள்.

அப்படிப் பெற்றால் துன்பத்தை நீக்கிடும் அருள் ஒளியின் உணர்வுகளை உங்கள் உயிர் “அந்த உயிரான ஈசன்.. கருவாக உருவாக்கி” அருள் உணர்வினை வளர்க்கச் செய்யும் இச்சக்தி பெறுகின்றது.

நீங்கள் அந்தச் சக்தி பெறவேண்டும் என்பதற்காகத்தான் இதை உணர்த்துகின்றோம்.

உபதேசத்தைக் கேட்கும் பொழுதும் படிக்கும் பொழுதும்..
1.என் உடல் நிலை சரியில்லை..
2.என் மனதே சரியில்லை.. என்னால் முடியவில்லை…! என்ற எண்ணத்தைச் செலுத்தாதீர்கள்.

உபதேச வாயிலாக நுகரும் உணர்வுகள் உங்களுக்குள் இருக்கும் துன்பத்தைப் போக்கும். அந்த அருள் சக்தி நீங்கள் பெறுவீர்கள்.

அதே சமயத்தில் “கால் வலியாக இருப்பினும் சரி.. உடல் வலியாக இருப்பினும் சரி… அல்லது எத்தகைய நோய் கொண்டவராக இருப்பினும் சரி…” சிறிது நேரம் இதைக் கூர்ந்து பதிவாக்குங்கள்.

நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் அருள் ஞானிகள் பெற்ற அந்த உணர்வை நுகர்ந்து உணர்வினை யாம் வெளிப்படுத்துகின்றோம்.
1.மகரிஷிகளின் அருள் உணர்வுகளை உந்தச் செய்யும்போது
2.அதனின் நினைவின் ஆற்றல் கண்ணுக்கு வந்து
3.மகரிஷிகளின் உணர்வுகளை நுகரும் சந்தர்ப்பம் ஏற்படுகின்றது.

அதன் வழி உங்கள் உடலில் தீமைகளை நீக்கிடும் அருள் உணர்வுகள் படர்ந்து அதை அடக்கிடும் நிலை வரும் பொழுது அதை அடக்கிடும் அணுக்களாக உங்களுக்குள் பெருகும்.

இதை நீங்கள் எல்லோரும் பெறவேண்டும் என்று தான் மணிக்கணக்கில் செயல்படுத்திக் கொண்டுள்ளோம்.

உங்களுக்குள் அந்த ஆற்றல்மிக்க சக்திகளை நுகரச் செய்யவும் அணுக்களாக உருப்பெறச் செய்யவும் இந்தச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்துகின்றோம். ஏனென்றால்
1.உங்கள் மனம் மாறும் பொழுதெல்லாம்
2.இந்த அருள் உணர்வுகளை ஊட்டும்படிச் செய்கின்றோம்.
3.அருள் உணர்வுகளை உங்களுக்குள் இரண்டறக் கலக்கச் செய்கின்றோம்.

துன்பப்படுத்தும் உணர்வுகளுக்குள் அருள் ஞானிகளின் ஆற்றல் மிக்க உணர்வுகளைச் செலுத்தும் பொழுது அது ஒடுங்கிவிடும்.

துன்பத்திலிருந்து மீண்டிடும்… “உபாயமும் ஞானமும்..” தக்க தருணத்தில் உங்களுக்கு உதயமாகும்.

அதன்வழி நீங்கள் செயல்படுத்தும்போது “துன்பத்திலிருந்து விடுபடுவீர்கள்…!” துன்பத்திலிருந்து மீட்டிக் கொள்ளும் ஆற்றல்கள் பெருகும்.

துன்பத்திலிருந்து மீட்டிய உணர்வுகள் உங்களிடமிருந்து மூச்சலைகளாக வெளிப்படும் பொழுது மற்றவர்களுக்கும் நல்ல உணர்வாகப் படரும். அதைச் சுவாசிக்கும் பொழுது துன்பத்திலிருந்து அவர்களும் விடுபடுவர்.

அறியாமல் வரும் துன்பங்களிலிருந்து மீட்டிக் கொள்ளும் சக்திகளை ஒவ்வொருவரும் பெறும் நிலைக்குத்தான் “எழுத்தறிவு இல்லாத அக்காலங்களில்.. ஆலயங்களைக் கட்டினார்கள் ஞானிகள்”.

ஆனால் இன்று சாங்கிய சாஸ்திரமாக “யாரோ செய்வார்..!” என்ற நிலையில் தான் எண்ணிக் கொண்டுள்ளார்கள்.

1.எண்ணியது அனைத்தையும் உயிர் உருவாக்குகின்றது…
2.நம் உடலாக மாற்றுகின்றது.
3.உடலுக்குள் உருவான அனைத்தையும் உயிரே குருவாக நின்று இயக்குகின்றது என்பது தான்
4.ஞானிகள் காட்டிய சாஸ்திரங்கள்.

ஆகவே துன்பம் வரும் பொழுது “இப்படி ஆகின்றதே..! இப்படி ஆகிவிட்டதே..!” என்பதை எண்ணாமல் அந்தச் சமயத்தில் “அதிலிருந்து விடுபடும் உணர்வைப் பெறவேண்டும்…” என்று இச்சைப்பட்டால் துன்பங்கள் நீங்கி அங்கே மகிழ்ச்சி நிச்சயம் உருவாகும்.

எண்ணியதை… எண்ணியவாறு நடத்தித் தரும் நாயகன்.. “நம் உயிர் தான்…!” நம் உயிர் அந்தப் பேரானந்தத்தை உருவாக்கிக் கொடுக்கும்.