ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 25, 2018

நம்முடைய சொந்தமும் பந்தமும் அருள் மகரிஷிகள் தான்…!


உறவு முறைகளிலோ அல்லது தொழில் நிலைகளிலோ (நம்) சொந்தம் என்று சொல்கிறோம். “தனது… தன்னுடைய…” என்ற நிலைகளில் சொந்தம் என்றால் எல்லாவற்றிலும் தான் சொந்தம் ஆகின்றது.

ஆனால் சொந்தம் என்ற நிலைகள் இல்லை. ஏனென்றால்
1.சொந்தம்… என்ற நிலைகள் வந்தால் வந்தால் அதற்குப் பின்
2.பந்தம்… (பற்றுதல்) என்ற நிலைகளே வரும்.

உயர்ந்த குணங்கள் கொண்டிருந்தாலும் “சொந்தம்…! பந்தம்…!” என்ற பாசத்தால் வரும் பொழுது எதிர்பாராத நிலைகள் ஏற்பட்டால் என்ன ஆகின்றது…?

1.செய்வதறியாது…
2.கற்றுணர்ந்த உயர்ந்த உணர்வை நாம் அறிய முடியாது…
3.செயல்படுத்த முடியாது அந்த  நல்ல நிலையைத் தவற விடுவது தான்
4.அந்தப் பாசத்தால் வருவது.

ஆனால்…,
1.பாசத்தால் எண்ணுவதற்குப் பதில் நேசத்தால்
2..உயர்ந்த நிலைகள் கொண்டு மகரிஷிகளின் உணர்வுகளைப் பெற வேண்டும் என்று எண்ணி ஏங்கினால்
3.அந்த நேசம் உயர்வைக் காட்டும்.

அனைவரும் நேசம் செய்ய வேண்டும். அதை எதைக் கொண்டு நேசிக்க வேண்டும்…?

மகரிஷிகளின் பால் நம் நேசம் இருந்தால் அவர்கள் அருளை எளிதல் பெறலாம். அந்த அருள் சக்திகளை எடுத்து மற்றவர்களுக்குப் பாய்ச்சும் பொழுது
1.அவர்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கின்றது.
2.அதைப் பார்க்கும் நமக்கும் பெரு மகிழ்ச்சி கிடைக்கின்றது.

ஆகவே அருள் ஞானிகளின் உணர்வைப் பெற வேண்டும் என்ற அந்த நேசத்தைத்தான் கூட்ட வேண்டும்.

ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…
1.குரு காட்டிய வழியில் மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுவோம்
2.மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற தியானிப்போம்
3.உலகம் நலம் பெற உலக மக்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெறத் தவம் இருப்போம்.

எமது அருளும் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளும் உறு துணையாக இருந்து மெய் உணர்வைப் பெற்று உங்கள் வாழ்க்கையில் மகிழ்ந்திட வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.