ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 1, 2018

“நாசமாகப் போகவேண்டும்” என்று சொல்வதை விட்டு விட்டு “நல்லதாக வேண்டும்…” என்று அழுத்தமாகச் சொன்னால் முதலில் நமக்கு நல்லதாகின்றது…!

மனிதனானவன் தீமையை அதிகமாகச் செயல்படுத்துவதில்லை. நன்மை செய்யவே முற்படுகின்றான்.

நன்மை செய்ய முற்பட்டாலும் வேதனைப்படுத்தும் நிலையோ..... துன்பப்படுத்தும் உணர்வையோ அவர்கள் நுகர்ந்து விட்டால் நல்ல குணங்களை மறைந்து செயலற்றவர்களாக மாறி தீயவர்களாகத்தான் மாறுகின்றார்கள்.

ஒருவன் அடிக்க வருகிறான் என்று வைத்துக் கொள்வோம் நம்மை அடித்து விடுவான் என்று பயந்து ஓடினாலும்
1.ஒரு சமயம் ஏன் இப்படி என்று திரும்பினால்
2.அவன் செய்வதற்கு முன் நாம் தவறு செய்பவனாக மாறி விடுகின்றோம்.
3.இப்படித்தான் மக்கள் மத்தியில் இந்த உணர்வுகள் இயக்குகின்றது.

ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்ளும் பொழுது  பிடிக்கவில்லை என்றால் அவர்கள் குடும்பம் நாசமாகப் போகட்டும்...! மண்ணிலே போகட்டும்...! என்று சொல்வார்கள்.

நாசமாக வேண்டும் என்ற இந்த உணர்வுகளை எடுக்கப்படும் பொழுது
1.இதே உணர்வுகள் அதைச் சொல்பவர் உடல் முழுவதும் பெருக்கப்பட்டு
2.இவர்கள் விட்ட உணர்வையே அவரின் உயிர் உருவாக்கி அவருக்கே தான் பாதகமாக்கும்.

ஒரு வித்தை உருவாக்கி அது விளைந்த பின் அதே வித்தை இன்னோரு இடத்தில் ஊன்றினாலும் அதே வித்துதான் மீண்டும் விளைகின்றது.

நாசமாகப் போக வேண்டும் என்று முதலில் இவர்கள் எண்ணுகின்றனர். அந்த உணர்வு ஊழ்வினை என்ற வித்தாக  உருவாகின்றது (ஊன்றப்படுகின்றது).

அது சொல்லாகப் போகும் பொழுது விளைந்த சொற்கள் ஆகாத எதிரியின் செவிகளில் படுகின்றது. அந்த உணர்ச்சிகளைக் கண் வழி கவர்கின்றது.

என்னை இப்படியெல்லாம் சொல்லத் தொடங்கி விட்டாயா...! என்று எதிர் பதிலாக இரண்டு பேருமே இந்த உணர்வுகளைப் பேசுகின்றனர்.

இப்படிப் பேசும் உணர்வுகள் இருவரையுமே வீழ்த்தி அவர்களுக்குள் உள்ள நல்ல குணங்களையும் மடியச் செய்கின்றது.

மனிதனுக்கு மனிதன் நாம் எப்படி வாழவேண்டும் என்று அறியாதபடி சிலர் தவறான வழிகளில்
1.எதிரிகள் வீழ்ந்திட வேண்டும் வேண்டும்
2.என் வாழ்க்கை நன்றாக அமைய வேண்டும் என்று ஆலயங்களுக்குச் சென்று வேண்டி
3.சந்தர்ப்பத்தால் வெறுப்பின் நிலைகளுக்குத்தான் செல்கிறார்கள்.

என் எதிரி வீழ்ந்து விட்டால்… என் தொழில் விருத்தியானால்… உனக்கு ஆட்டைப் பலி கொடுக்கிறேன் என்று பக்தியில் தான் நம் புத்தி செல்கிறது.

குருநாதர் இதைத் தெளிவாக காட்டுகின்றார்.

கருப்பணச்சாமி போன்ற தெய்வங்களுக்கு ஆட்டையும் கோழியையும் பலி கொடுக்கின்றோம். சிந்திக்கும் தன்மையை இழந்து விட்டால் ஒன்றைக் கொல்லும் உணர்ச்சியைத்தான் ஊட்டுகின்றது.

ஆனால் நம் நல்ல சிந்திக்கும் தன்மையை மாற்றும் நிலையிலிருந்து மீள்வதற்கு அந்த உருவங்களை ஞானிகள் காட்டினாலும் அதை நாம் அறியவில்லை.

நாம் சிந்திக்கும் உணர்வின் தன்மையை இழந்து,.. அந்தத் தீமையின் உணர்வை வளர்த்து அந்த ஆவேசத்தால் காக்கும் உணர்வு இழக்கப்பட்டு நாம் எடுத்துக் கொண்ட வேதனைகள் நமக்குள் எப்படி கடும் நோயாக மாறுகின்றது.

மக்கள் அறியாத நிலைகளில் இப்படி வாழ்ந்து வளர்ந்து கொண்டு வருகின்றனர். இதிலிருந்து இவர்களை நீ மீட்க துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அவர்களுக்குள் நீ பதிவு செய் என்றார் குருநாதர்.

நம் நல்ல சிந்தனைகளை மறைக்கும் இந்த நிலையிலிருந்து நாம் மீள்வதற்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா என்று ஆத்ம சுத்தி செய்து கொள்ளவேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும். எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று உடலுக்குள் அதைச் செலுத்த வேண்டும்.

பின் எங்கள் சொல்லும் செயலும் புனிதம் பெறவேண்டும். மற்றவர்களைப் புனிதப்படுத்தும் சக்தியாக வளர வேண்டும் ஈஸ்வரா என்று எண்ணுதல் வேண்டும்.

நாம் பார்ப்பவர்கள் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற்று நலமும் வளமும் பெறவேண்டும் என்று எண்ணி எடுத்து இப்படி மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும். .

1.நல்லதை மற்றவர்கள் பெறவேண்டும் என்று வேண்டும் பொழுது
2.அந்தச் சக்தியை நாம் முதலில் பெறுகின்றோம்.
3.நாம் அதுவாகவே மாறுகின்றோம்.