ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 4, 2018

“தீமையிலிருந்து மீட்டிடும் சக்தி தென்னாட்டிலே தோன்றும்” – “புரியாத பாஷையில்” நாஸ்டர்டாமஸ் குறிப்பிட்டதை... அறியும் காலம் வந்துவிட்டது...!

நாஸ்டர்டாம்ஸ் அவர் 400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு பிரெஞ்சு அறிஞர்.

“மெய் வழி காணும் ஆன்மா...” அவரிடத்தில் சென்ற பின்
1.இந்தப் பூமியின் இயக்கங்கள் எங்கே மோதுகின்றது... எங்கே இணைகின்றது...?
2.ஒவ்வொரு நாடும் எப்படி ஆகின்றது..?
3.உலக மாற்றங்கள் எப்படி ஆகின்றது
4.மதத்தின் தன்மைகள் எப்படி உருவாகின்றது...? என்றும் தெளிவாகக் கூறியுள்ளார்.

அவர் எல்லாவற்றையும் கூறியிருந்தாலும் இன்று படித்த வர்க்கங்கள் அதை எடுத்து வைத்திருக்கின்றார்கள்,

ஆனாலும் அந்த உண்மையின் உணர்வை உணர்வதற்கு இல்லை...! விஞ்ஞான அறிவில்தான் எண்ணங்களை செலுத்துகின்றார்கள்.

அதே சமயத்தில் விஞ்ஞான அறிவால் வளர்ந்து வரப்படும் பொழுது அதனால் “இன்னென்ன நாடுகள் அழியும்... இன்னென்ன மதங்கள் அழியும்.. இன்னென்ன நிலையில் உலகம் அழியும்...!” என்று சொல்லியிருக்கின்றார்.

தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி என்று தென்னாட்டில் தோன்றிய அந்த அகஸ்தியன் தான் கண்ட இயற்கையின் உண்மைகளை எந்நாட்டவருக்கும் கிடைக்கும்படியாகத் உணர்வின் நிலைகளை ஆதியிலேயே பரப்பிச் சென்றவன்.

“தன்னை அறிதல்...” என்ற நிலையில் உணர்வுகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படும் பொழுது அதன் செயலாக்கம் எப்படி உயர்கின்றது என்பதனைத் தெளிவாக்கிக் காட்டிய அந்த அகஸ்தியனின் உணர்வு தான் உலகம் முழுவதற்கும் பரவியது.

பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் ஒளியின் சுடராகப் பெற்றுத் துருவ நட்சத்திரமாக ஆன அதிலிருந்து விளைந்த உணர்வுகள் உலகம் முழுவதும் செல்கின்றது.

சந்தர்ப்பத்தால் உண்மையை உணர வேண்டும் என்று விரும்பும் அவர்களுக்குள்ளும் ஈர்க்கப்பட்டு அதனின் அறிவாக அங்கே உள்ள மனிதரையும் உயரச் செய்கின்றது.

இதே போல நாஸ்டர்டாம்ஸ் அவர் வெளியிட்ட நிலையும் கோள்கள் குறித்த அளவுகளில் (அளவுகோல்படி) வரப்படும் பொழுது இதே தென்னாட்டில் தான் வளர்ச்சியின் தன்மை இருக்கின்றது என்றார்.

உலகில் விஷத்தன்மைகள் படர்ந்தாலும் இந்த தென்னாட்டில் தோன்றிய நிலையில் தான் உலகை மீட்கும் நிலை வரும் என்பதையும் உணர்த்தியுள்ளார் அவர்,

1.எந்த அகஸ்தியன் தனக்குள் கற்றுணர்ந்த உணர்வுகளை உலகமெங்கும் பரப்பி
2.உணர்வின் தன்மையை ஒளியாக்கித் துருவ நட்சத்திரமாக இருக்கின்றானோ
3.அதனின்று வெளிப்படும் உணர்வுகளை  
4.உண்மையைப் பெறவேண்டும் என்று ஏங்கியவர்களின் உணர்வில் சிக்கப்பட்டு
5.அதிலிருந்து அறிவின் ஞானமாக அவர்களுக்குள் வளர்ந்ததோ
6.அவர்கள் அனைவரும் சப்தரிஷி மண்டலங்களாக வாழ்கின்றார்கள் என்ற நிலையை
7.அன்றே (400 ஆண்டுகளுக்கு முன்) தெளிவாக நாஸ்டர்டாம்ஸ் சொல்லியிருக்கின்றார்.

இதன் அறிவின் தன்மையை நாஸ்டர்டாமஸ் சொன்னாலும் இன்று விஞ்ஞான அறிவால் உள்ளவர்களால் அறிய முடியாது.  

இந்த உலகைத் தீமையிலிருந்து மீட்டுவதற்கு இந்தத் தென்னாட்டிலே தான் தோன்றுகின்றான். “அவன் வளர்கின்றான்... அவன் வளர்ந்து கொண்டே வருகின்றான்...!”

நஞ்சு கொண்ட நிலைகள் எங்கு வளர்கின்றதோ அது அழிந்தே தீரும் என்று அவர் குறிப்பிட்டுக் காட்டியுள்ளார்.

நாம் தவறான செயலைச் செய்து கொண்டு இந்த உடலில் இருப்பினும் நுகர்ந்த உணர்வுகள் இந்த உடலை ஒரு நாள் அழித்தே தீரும். ஆனால்
1.உயர்ந்த உணர்வின் தன்மை வரும் பொழுது
2.தீமை என்ற உடலை நீக்கியே தீரும்.
3.தீமையற்ற உணர்வாக உயிரோடு ஒன்றி ஒளியின் சரீரமாக மாறத்தான் செய்யும்.

தீமையின் உணர்வுகள் தனக்குள் வரும் பொழுது ஒளி பெறும் உணர்வுகளின் அணுக்களை அழித்தே தீரும். பின் அசுர உணர்வுகள் தீமையின் நிலையே உருபெறும் என்ற நிலைகளை அவர் காட்டியுள்ளார்,

1.அவர் குறித்த உணர்வுகள் அன்றைய பாஷையில் எழுதியிருந்தாலும்
2.அதனின் விளக்க உரைகளை உலகம் முழுவதும் கொண்டு வருவதற்கு இன்னும் (உபதேசம் செய்த வருடம் 1996) சில காலம் ஆகும்.

இந்தத் தென்னாட்டிலே அந்த அகஸ்தியன் கரு உணர்வுகள் இங்கே வீரியம் பெறுகின்றது. கருவிலே வளரும் சிசுக்கள் இங்கே உயர்வு பெறுகின்றது. இந்த உணர்வின் ஞானம் நிச்சயம் பெறும்.

அனைவரும் ஞானிகள் ஆவார்கள்.

அந்த உணர்வின் தன்மையை வளர்ப்பதற்குச் சிசுவிலிருந்து நாம் கொண்டு வர வேண்டும்.

இதைப் படிப்போர் உள்ள அனைவருமே தபோவனத்தில் வெளியிடப்பட்ட நூல்களை எடுத்து மெய் ஞான உணர்வுகளை அந்தந்தக் குடும்பங்களில் கருவிலே வளரும் அந்த குழந்தைக்குப் பெறவேண்டும் என்று உணர்வின் நிலைகளைப் போதித்து வாருங்கள்.

அந்த ஞானிகளின் உணர்வுகள் குழந்தைகளுக்குப் பூர்வ புண்ணியமாக அமைந்து அருள் ஞானிகளாக வளர இது உதவும்.