முதுமை என்பது வயதால் வருவது அல்ல. அறுபது வயது…, எழுபது வயது…
நான் முதுமை அடைந்து விட்டேன்..! என்று வெறும் வருடத்தால் கணக்கிட்டுச் சொல்வதல்ல…!
ஒரு தானியம் விளைந்தாலும் அதனின் முதிர்ச்சியின் தன்மையில்
1.தன் இனத்தை உருவாக்கும் வித்தின் தன்மையாக அடைந்து
2.அது மீண்டும் தன் வளர்ப்பின் வளர்ப்பாக வளர்க்கச் செய்யும்
போது தான்
3.அது முதுமை அடைந்தது (முதிர்ந்த வித்து) என்று சொல்ல முடியும்.
அதைப் போன்று தான்
1.ஒரு உயிரின் தன்மை மனித உடலாக உருப் பெற்ற பின்
2.அறிந்திடும் உணர்வு கொண்ட
3.ஒளியின் சரீரம் பெற்ற மெய் ஞானியின் உணர்வைச் சேர்த்து உடலை
முதுமையாக்கிவிட்டு
4.உணர்வின் தன்மையை – நம்மை என்றும் இளமையாக்கும் நிலைக்கு
வளர வேண்டும்.
(உடல் அழியக்கூடியது உயிர் என்றுமே அழியாதது)
இப்படி ஒவ்வொரு சரீரத்திலும் நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள்
அனைத்தும் அது இளமைப் பருவமே பெறுகின்றது.
1.நாம் இளமை பெற்று அது உடலிலே முதுமை பெறும்போது தான் (உடலுக்குள்
விளைந்தது)
2.”முதுமையின் வித்தாக…! உருபெற்ற உணர்வின் அறிவாக…
3.அது உயிருடன் ஒன்றிய நிலை கொண்டு,
4.அடுத்த அறிவின் ஞானச் சுடராக கனியின் வித்தாக (உணர்வாக)
ஞானத்தை வளர்க்கின்றது.
ஆகவே அருள் மகரிஷிகளின் உணர்வுடன் ஒன்றிடும் நிலையாக உயிருடன்
ஒன்றிய முதுமையின் நிலைகள் பெற்று முழுமையின் நிலையாக அந்தப் பேரானந்த பெருநிலை பெறுவோம்
அந்த பேரானந்த உணர்வை நமக்குள் வளர்த்திடுவோம். அனைவரும் பேரானந்த
நிலை பெறும் சக்தியாக நமக்குள் விளைய வைத்து அந்தச் சத்தான வித்துக்களைப் பரப்புவோம்.
அதை நுகர்வோர் அனைவருக்கும் அந்தச் சத்தான வித்துக்கள் படர்ந்து
அவர்களும் பேரானந்தப் பெரு நிலையை அடையட்டும்.
1.மகரிஷிகளின் அருள் வட்டத்திலே
2.நாம் என்றுமே இளமையாக
3.என்றும் பதினாறாக வளர்ந்து கொண்டேயிருப்போம்… வாழ்வோம்.