“ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…” – ஒவ்வொருவரும்
அவரவர்கள் உயிரைப் புருவ மத்தியில் நினைவைச் செலுத்தி அந்த உணர்வின் ஆற்றலைப் பெருக்கிக்
கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் அதைத் திரும்பத் திரும்பச் சொல்வது.
“ஓ…” என்பது பிரணவம் என்று என்று சாஸ்திர
விதிகள் கூறுகின்றன. “ஓ…ம் “என்பது பிரணவம் என்று தான் எல்லாரும் சொல்லி இருக்கின்றார்களே
தவிர
1.பிரணவம் என்பது எது?
2.பிரணவத்தை எதற்காகக் குறித்தார்கள்?
சாஸ்திர விதிகளைக் கரைத்துக் குடித்தவரும்
சாஸ்திரத்தை உணர்ந்து கொண்டவரும் “ஓ…ம் “என்ற பிரணவத்தைப் பற்றி விளக்கங்கள் பல முறைகள்
கொண்டாலும் இயற்கையின் உண்மையினுடைய நிலைகள் இது வரையிலும் வெளிப்படுத்தவில்லை.
இயற்கையின் தன்மையில்
1.தான் யார்…?
2.தன் உயிரின் இயக்கத்தின் தன்மை என்ன?
என்ற நிலையையும்
3.”ஓ…ம்” என்ற பிரணவத்தின் தன்மையை நாம்
எவ்வாறு தெரிந்து கொள்ள வேண்டும்?
4.அது மக்களுக்கு எப்படித் தெரியப்படுத்த
வேண்டும்? என்று நம் குருநாதர் உணர்த்தியுள்ளார்.
பிரணவம் என்றால் “ஜீவன்.. இயக்கம்” என்று
பொருள்.
நம் உயிர் உடலுக்குள் நின்று இயக்கமாக
இருக்கின்றது. “ஓ…” என்பது பிரணவம்… ஜீவனாக இயங்கிக் கொண்டு இருக்கின்றது.
விஞ்ஞான அறிவு கொண்டு ஒரு “காந்த ஊசியினை”
வைத்து மற்ற காந்தப் புலன் அறிவுகள் கொண்ட நாடாக்களில் பதிவு செய்கின்றோம்.
1.காந்த ஊசியினை மீண்டும்
2.அந்தப் பதிவு செய்த அலை மீது வைத்த
பின்
3.”அது உராய்ந்து…”
4.அதற்குள் பதிவான ஒலி அலைகளை எழுப்புகின்றது.
நாம் எதைப் பேசுகின்றோமோ அதை இயக்குகின்றது.
இதைப் போன்று தான் நம் உயிர் நம் உடலுக்குள்
காந்த ஊசியாக இயங்கிக் கரண்ட்டை (மின் ஆற்றலை) உற்பத்தி செய்து நம்மை இயக்கிக் கொண்டு
இருக்கின்றது.
எத்தகைய குணம் கொண்டு நாம் எண்ணுகின்றமோ
அதைச் சுவாசிக்க நேர்கின்றது.
1.எந்தக் குணத்தை நாம் சுவாசித்தமோ
2.உயிரிலே அது உராய்ந்த பின்
3.அந்தக் குணத்தின் உணர்வின் செயல்களை
உணர முடிகின்றது.
கோப குணம் என்பது காரத்தின் உணர்ச்சிகளைத்
தூண்டக்கூடியது அது. உதாரணமாக ஒருவர் மேல் நான் கோபமாக எண்ணுகின்றேன் என்றால் காரமான
உணர்வைச் சுவாசிக்கின்றேன்.
சுவாசித்த உணர்வு உயிரிலே உராயப்படப்
போகும் போது அந்தக் கோபமான உணர்ச்சியைத் தூண்டக்கூடிய அந்த உணர்வுகள் நமக்குள் செயல்படுகின்றது.
1.உடல் கோபத்தால் துடிக்கின்றது.
2.கோபமான சொல்லாக அது வெளிப்படுகின்றது.
3.அப்போது நாம் எண்ணக்கூடிய அந்தக் கோபம்
என்ற குணம் ஜீவன் பெறுகின்றது
4.உயிர் அதை நமக்குள் ஜீவனாக்குகின்றது
(உருவாக்குகிறது) என்று அர்த்தம்
இதைத்தான் “ஓ…ம் ஈஸ்வரா…” என்று சொல்கிறோம்.
“ஈஸ்வரா…” என்றால் இயக்கமாக (இயக்கும் சக்தியாக) இருந்து நீ என்னை இயக்கிக் கொண்டிருக்கின்றாய்
என்று பொருள்.
“ஓ…ம்” என்பது பிரணவம். நாம் எண்ணியது
பிரணவமாகின்றது. அதாவது ஜீவன் ஆக்கக்கூடிய அந்தத் திறன் பெற்றது. உற்பத்தி செய்யக்கூடிய
திறன் பெற்றது என்று பொருள்.
1.”ம்…” என்றால்
2.நாம் எதை எல்லாம் எண்ணுகின்றமோ அந்த
உணர்வின் சத்தை இயக்கி விட்டு
3.நம் உடலுடன் இரண்டறக் கலந்து விடுகின்றது
– அதனால் தான் “ஓ… … …ம்”.
4.”ம்…” என்பது பிரம்மம். சிருஷ்டி என்று
பொருள்.
சாதாரண மனிதனுக்கும் புரியும்படியாகத்தான்
எல்லாக் கோவில்களிலும் அந்தந்தத் தெய்வத்திற்கு முன்னாடி “ஓம்” போட்டு ஞானிகள் காண்பித்துள்ளார்கள்.
ஆனால் “ஓம்” என்பதை மந்திரமாக எண்ணி
அந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என்று தான் எண்ணுகின்றார்களே தவிர
1.உயிரின் இயக்க நிலையும்
2.உயிரின் துணை கொண்டு நாம் சுவாசிக்க
வேண்டிய
3.மெய் ஞானிகளின் அருள் சக்திகளையும்
எண்ணுவதில்லை.