கடலில் சிற்றலை
பெரிய அலை வருவது போன்று மனித வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடத்திற்கு நிமிடம் எண்ணப் புயல்கள்
மாறிக் கொண்டே தான் இருக்கும். அலைகள் மாறி மாறி வந்து கொண்டே தான் இருக்கும்.
ஒரு நண்பனைப் பார்த்தவுடன்
மகிழ்வோம்.
அடுத்த நண்பன் வந்தவுடன் அவன் நம்மைத் திட்டினான் என்று சொன்னால்…
உடனே “அப்படியா சொன்னான்...?” என்று ஆத்திரத்துடன் செயலபட்டுவிடுவோம்.
அடுத்து வரக்கூடிய
நண்பனுடைய நிலைகளில் கொடுத்த பாக்கியை கொடுக்க முடியாது என்று சொன்னவுடன் “இருக்கட்டும்
நான் பார்க்கிறேன்...” என்ற ஆத்திர உணர்வுடன் செயலபடுவோம்.
அடுத்தாற்போல்
ஒரு நண்பன் வந்தவுடன் இன்னொருவர் சொல்கிறார்.
“உங்களைப்
பைத்தியக்காரர்…! ரொம்ப மோசமான ஆள்… இரண்டில்
ஒன்று பார்க்கிறேன்..” என்று சொல்கின்றார்.
இதைக் கேட்டவுடன் “நம் மானம் கௌரவம் எல்லாம் போய்விடும்...” என்று சோர்வான நிலைகளில் இந்த அலைகள்
வந்து பலவீனமான நிலைகளை உருவாக்கிவிடும்.
இப்படி ஒரு நிமிடத்திற்கு
நிமிடம் ஒவ்வொருவரையும் நாம் சந்திக்கும் பொழுது அந்த உணர்வலைகள் நமக்குள் தாக்கப்பட்டு
அந்த உணர்வாலே இத்தனை அலைகளும் மோதிக் கொண்டேதான் இருக்கும்.
சாதாரண வாழ்க்கையில்காற்று
மண்டலம் எப்படி இந்தப் பூமியிலே சுழலுகின்றதோ இதைப் போன்று நாம் எடுத்துக் கொண்ட உணர்வுக்கொப்ப
நம் உடலில் அலை அலையாக மாறி வருவதை சுதி வாய்வு என்று சொல்கின்றனர்.
இவ்வாறு நாம் எடுத்துக்
கொண்ட உணர்வுகளெல்லாம் உடலாக மாறி அந்த உடலின் தன்மையினுடைய நிலைகள் ஆவியாக மாறி அது
ஒலியாக மாறி நமக்குள் அது சொல்லாகவும் பேச்சாகவும் செயலாகவும் செயல்படுகின்றது.
இதை நாம் அறிந்துணர்ந்தவர்கள்தான். அறியாதவர்கள்
யாரும் இல்லை. எல்லோருக்கும் தெரியும். புதிதாக ஒன்றும் சொல்லவில்லை.
நம் உடலிலே எந்தெந்த
குணங்களை அதிகமாக ஆழமாகப் பதிவு செய்திருக்கின்றோமோ
1.அதிகமாகப்
பதிந்திருப்பது அதிவேகமாக முன்னனியிலே வந்து
2.அதைச்
சுவாசிக்கும் பொழுது அதன் வழிகளில் நடக்கின்றோம்.
நாம் சாந்தமான
நிலைகளில் இருக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம்.
அதையும் தாங்காதபடி
ஆழமான உணர்வுகளை நாம் உந்தச் செய்யும் பொழுது அந்த உணர்வை முன்னனியிலே வைத்தவுடன் அந்த
உணர்வுகள் நமக்குள் வேகமாகக் கூடி அதன் வழிகளில்தான் நாம் நடக்கின்றோம்.
இதைப் போன்ற நிலைகள்
நம்மை அடிக்கடி சாடிக் கொண்டிருக்கும் இந்தக் காலத்திலேதான் இதைப் பரிசுத்தப்படுதுவதற்கு
வரக்கூடிய துன்பத்தைப் போக்க குருநாதர் காட்டிய அருள் வழிப்படி
1.உங்களை நீங்கள்
நம்புங்கள்
2.தாய் தந்தையை
தெய்வமாக எண்ணுங்கள்,
ஒவ்வொரு நிமிடமும்
நம்மை அறியாமல் பிறர் கோபமாகப் பேசினாலும் “ஈஸ்வரா..” என்று உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நாங்கள் பெறவேண்டும் என்று
ஏங்கி உடலுக்குள் செலுத்த வேண்டும்.
தீமைகள் வரும்
பொழுதெல்லாம் இதை அலை அலையாகச் செலுத்தப் பழகிக் கொள்ள வேண்டும். அப்பொழுது நம்
ஆன்மாவில் முன்னழுத்தமாக இருக்கும் அந்தத் தீமையான உணர்வலைகள் நம் ஈர்ப்பை விட்டு
அகன்று அனாதையாகிவிடும்.
நம்
சுவாசத்தின் ஈர்ப்புக்குள் வராது. இது தான் ஆத்ம சுத்தி