ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 9, 2018

அன்றைய சித்தர்கள் மற்றவர்கள் துன்பங்களையோ நோய்களையோ நீக்கக் காசோ பணமோ வாங்கவில்லை…! ஏன்…?

ஆரம்பத்தில் ஒன்றுமே தெரியாத குழந்தைகளைப் பள்ளிக்குக் கொண்டு போனோம் என்றால் அந்தக் குழந்தைக்கு தமிழ் பாஷையைத் தவிர வேற எதுவும் தெரியாது.

ஆனா ஆங்கிலத்தைச் சொல்லிக் கொடுக்க வைத்துப் படிக்க வைத்தால் அதைக் “கட…கட…” வென பதிய வைக்கிறது. அடுத்துத் தன் வளர்ச்சியில் ஆங்கிலத்தில் எழுதவோ பேசவோ செய்கிறது.

பள்ளிகளில் குழந்தைகளை நாம் இப்படி உற்பத்தி செய்கிறோம்.., சிருஷ்டித்துக் கொள்கிறோம். ஆனால் மற்ற உயிரினங்கள் இதைச் செய்ய முடிவதில்லை.

பள்ளிப் படிப்பில் பாட நூல்களைக் கற்கின்றோம். கற்ற வழியில் ஒவ்வொரு பொருள்களையும் பற்றிய அறிவு வருகின்றது.

வந்த பின் அவைகளை ஒன்றுடன் ஒன்று இணைத்தால் அது எந்த நிலை வரும் என்று கண்டறிகின்றோம். அந்தச் சந்தர்ப்பத்தை நாம் தான் உருவாக்குகிறோம்.

அந்த உணர்வின் (அறிவாக) வினையை நமக்குள் சேர்க்கின்றோம். சேர்த்துக் கொண்ட உணர்வுகளைக் கொண்டு நாம் எத்தனையோ பொருள்களையும் கண்டுபிடிப்புகளையும் உற்பத்தி செய்கின்றோம்.

சாதாரணமாக சூரியனிலிருந்து வெளிப்படக்கூடிய ஒரு வெப்ப காந்தம் எந்தச் சத்தினைக் கவர்ந்ததோ அதனின் அடிப்படையிலே பூமியிலே அது படர்ந்து விடுகின்றது. மண்ணுடன் மண்ணாக விளைகின்றது.

மண்ணுடன் கலந்திருந்தாலும் அதற்குள் விளைந்த அந்த உலோகத்தை விஞ்ஞானி பிரித்தெடுக்கின்றான். தனி உலோகமாகவே அதை உருக்கித் தூய்மைப்படுத்தி எடுக்கின்றான்.

அதனை மற்ற உலோகத்துடன் இணைத்துத் தனக்கு வேண்டிய நிலைக்குப் பக்குவபடுத்துகின்றான் மனிதன்.

புற நிலைகளில் இதைச் செய்யும் ஆற்றலை நாம் பெற்றுள்ளோம். இது எல்லோருக்கும் தெரிந்தது தான். ஒன்றும் புதிதில்லை.
1.ஆனால் ஞானிகளும் மகரிஷிகளும் தாவர இனத்தை நுகர்ந்தனர்.
2.அந்த உணர்வின் ஆற்றலைத் தனக்குள் பருகினர்.
3.தாவர இனத்தின் உணர்வின் ஆற்றலை அறிந்தனர்.

ஒரு தாவர இனத்தின் தன்மையை முதலில் உட்கொண்டு அடுத்து மற்ற தாவர இனத்தை நுகர்ந்து அதற்குள் எதிர் நிலையான மறைகளாகி மிருகங்கள் எப்படி உருவானது…? உயிரினங்களுக்குள் எப்படி எதனால் மாற்றங்கள் வருகிறது…? என்று கண்டறிந்தார்கள்.

அதே சமயத்தில் அந்தத் தாவர இனச் சத்தை நுகர்ந்து மனித உடலுக்குள் இருக்கக்கூடிய நஞ்சின் தன்மையை நீக்குவது எப்படி என்று அந்த உணர்வின் ஆற்றலை அன்றைய சித்தர்கள் தனக்குள் வளர்த்துக் கொண்டார்கள்.

சித்தர்கள் அவ்வாறு (நஞ்சை நீக்க வேண்டும்) வளர்த்துக் கொண்ட எண்ணங்கள் அங்கே உருவாகின்றது.
1.எண்ணத்தால் வளர்த்துக் கொண்ட அந்த நினைவலைகளை
2.மற்ற பொருளுடன் சேர்த்து இணைக்கச் செய்து,
3.மருந்தாக உற்பத்தி செய்கின்றார்கள்… சித்தர்கள்

மனிதனின் வாழ்க்கையில் அறியாத நிலைகளில் எதிர் நிலையாக வந்த எண்ணங்களால் நோயின் தன்மை அடையப்படும் பொழுது அந்த மருந்தினைக் கொடுத்து மனிதனின் நோயை நிவர்த்தி செய்தார்கள்.

இவன் உருவாக்கிய மருந்து அந்த நோயை நீக்குகின்றது. நோய் நீங்கிய பின் மக்கள் துன்பத்திலிருந்து விடுபட்டு மகிழ்ச்சியின் தன்மையை அடைகின்றார்கள்

1.மக்களுக்குள் அப்படி மகிழ்ச்சியை உருவாக்கிய அன்றைய சித்தன்
2.இதற்காக வேண்டி யாரிடமும் காசு வாங்கவில்லை.

மக்கள் அவர்கள் துன்பத்திலிருந்து விடுபடவேண்டும் என்று அவன் துன்பப்பட்டுப் பல நிலைகளைச் செய்தான்.

துன்பம் நீங்கி அவர்கள் இடும் இன்பத்தின் மூச்சின் அலைகளைத்தான் ஒவ்வொரு சித்தனும் அவன் எதிர்பார்த்தான்.
1.நீ மகிழ்ந்திரு…!
2.மகிழ்ச்சி பெறு…!
3.மகரிஷிகளின் அருள் ஒளி பெறு…!
4.அந்த அருள் ஒளி பெறும் தகுதியை நீ பெறு என்றான்.

கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்ற நிலைக்கொப்ப அந்தத் தகுதியை அந்தச் சித்தன் அவன் தனக்குள் பெற்றான்… உருவாக்கினான்.

அந்தச் சித்தன் தன் உணர்வுக்குள் துன்பத்தை மாற்றும் சக்தியாக வளர்த்து விளைய வைத்துக் கொண்டான். அவன் உடலில் இருந்து வெளிப்படுத்தப்பட்ட அத்தகைய உணர்வுகள் சூரியனின் காந்த சக்தியால் கவர்ந்து வைத்துள்ளாது.

அந்தச் சித்தனின் நினைவு கொண்டு அதனின் உணர்வை நாம் நுகர்ந்து எடுத்துக் கொண்டால்
1.அவன் எப்படித் துன்பத்தை நீக்கும் உணர்வின் தன்மையை வளர்த்துக் கொண்டானோ
2.அதனின் உணர்வின் தன்மை நமக்குள் சென்று
3.தீமையை நீக்கும் உணர்வின் ஆற்றல் நமக்குள் பெறப்பட்டு
4.அதிலிருந்து நம் நல் உணர்வைக் காக்கும் நிலைகள் வரும்.