பண்டைய அரச காலங்களில் மந்திர சக்தியால் பில்லி சூனியம் ஏவல்
என்ற நிலைகளில் செயல்பட்டார்கள்…? அதனின் தொடர்ச்சியாக இன்றும் பல பல இடங்களில் மந்திரத்தால்
என்னென்ன தவறுகள் செய்கின்றார் என்பதை குருநாதர் காட்டினார்.
ஒரு வயதிற்கு வந்த பெண்ணை அது திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளவில்லை
என்றவுடனே ஏவல் செய்து விட்டார்கள்.
அந்தப் பெண் விட்டத்தில் அப்படியே தலை கீழாகத் தொங்கும். அப்புறம்
கீழே இறக்கி விட்டு விடுவார்கள். இறக்கி விட்ட பின்னாடி ஆகாரம் சாப்பிடப் போனால் உச்சந்தலையில்
இருந்து வெறும் இரத்தமாகக் கொட்டும்.
1.சாப்பிட விடாது செய்கின்றது.
2.ஆனால் இத்தனை இம்சைகளையும் பட்டு அது வாழுகின்றது.
இன்னொரு ஆவி அந்த உடலுக்குள் நின்று ஏவல் செய்த நிலைக்கொப்ப
எப்படி இம்சிக்கின்றது என்று காட்டுகிறார் குருநாதர். அந்தப் பெண் எந்தத் தவறும் செய்யவில்லை.
எதை எதையெல்லாம் உருவாக்கி அந்த உடலைக் கொன்றானோ கொல்வதற்கு
எது மூலமாக இருந்ததோ அதை வைத்து ஏவல் செய்கிறார்கள். ஏவல் வேலைக்காக என்றே இப்படித்
தயார் செய்கிறார்கள்,
மந்திரம் செய்பவர்கள் பிறருடைய நிலைகள் அறியாதபடி பொருளுக்காகச்
செய்கிறார்கள்.
1.தன்னுடைய புகழைத் தேடவும்
2.தன்னை எல்லோரும் போற்ற வேண்டும் என்றும்
3.தன்னைக் கண்டால் மற்றபர்கள் பயப்பட வேண்டும் என்றும்
4.நிலையற்ற உடலுக்காகவே அவ்வாறு செய்கிறார்கள்.
பிறரை இம்சிக்கச் செய்து பொருளை வாங்கி இவன் அனுபவித்தாலும்
இவன் கண்ட வித்தைகள் அனைத்தும் பிறரைத் துன்புறுத்தும் நிலைகளில் தான் செய்து விட்டேன்
என்று அகந்தை கொள்வதும் தன்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்று அகம் கொண்டு செயல்படுபவர்களையும்
குருநாதர் காட்டுகின்றார்.
மனித உடலில் எந்த ஆசையின் உணர்வுகள் விளைய வைத்தார்களோ அதனின்
அடிப்படையில் மந்திரங்கள் ஜெபிக்கப்படும் போது அந்த அலைகளைக் கவர்ந்து பெரிய தத்துவ
ஞானியாகவும் பெரிய கடவுளாகவும் அவர்கள் செயல்படுத்துகின்றார்கள்.
தனக்கு மீறி எவரும் இல்லை…! நானே கடவுள்…! என்ற நிலையும் மந்திர
ஒலிகள் பெற்றவர்கள் அவர் எவ்வாறு அலைகின்றனர்…? என்று காட்டுகின்றார் குருநாதர்.
ஆவியை வைத்துச் செயல்படுத்தும் போது அந்த உடலிலே இம்சைகளைக்
கொடுத்தாலும் அவன் (மந்திரவாதி) இறந்தபின் இந்த ஆன்மா எவ்வாறு போகும் என்ற நிலையும்
நிலைப்படுத்திக் காட்டுகின்றார்.
இந்த உடலை விட்டுச் சென்றபின் அவன் எந்த காரியத்தைச் செய்தானோ அதே உணர்வு இவர்களுக்குள் வந்து
1.அடுத்தவன் கையில் சிக்கி இதே காரியத்தைச் செய்து
2.அதில் எத்தனை வேதனைப்படுகின்றான் என்ற நிலையும் காட்டுகின்றார்.
அதே சமயத்தில் மந்திர சக்தி பெற்றவர்கள் மந்திரம் அல்லாது
ஞானத்தின் தொடர் கொண்டு ஞானியின் வழியில் செல்ல வேண்டும் என்று அந்த வழியில் செல்ல
முற்படுபவர்களுக்கு தீமையான நிலைகளைச் செய்து அவர்கள் பெற முடியாத நிலைகள் எவ்வாறு
தடைபடுத்துகின்றனர்?
,
ஆகவே ஒரு மந்திரக்காரனிடம் அவனுடைய தொழில் எவ்வாறு இருக்கின்றதென்றால்
1.நீ நன்மையே செய்தாலும்
2.அவன் தீமையின் வலு கொண்டு
3.உன் நல்லதைச் செய்யாது எவ்வாறு தடைபடுத்துவான் என்ற நிலையையும்
உணர்த்துகின்றார் குருநாதர்.
இதைப் போன்ற மந்திரங்களையும் சரி… மனித உடலில் விளைய வைத்த
தீமைகளையும் சரி… இத்தகைய இருளை எல்லாம் நீக்கி உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி சப்தரிஷி
மண்டலத்தில் நிலை கொண்டு மகரிஷிகள் எவ்வாறு வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள்?
1.பிறருடைய தீமையை அகற்றிட வேண்டும் என்று தன் உடலை வருத்திக்
கொண்டு
2.பிறருடைய தீமைகளைப் போக்க அந்த உணர்வின் செயலாக
3.அந்த மகா மகரிஷிகள் எவ்வாறு வாழ்கின்றார்கள்…?
4.அந்த ஞானிகள் மகரிஷிகள் அவர்கள் விளைய வைத்த உணர்வுகளை நமக்குள்
கவர்ந்து
5.நம் உடலுக்குள் ஒளியான உணர்வுகளை விளைய வைத்தால் “அதனின்
பலன் என்ன…?” என்று
6.இவ்வளவையும் பிரித்துக் காட்டுகின்றார் மாமகரிஷி ஈஸ்வராய
குருதேவர்.