இன்று ஆங்கில மருத்துவப்படி ஊசி
மூலம் மருந்தினை (ஆற்றல் மிக்க) உடலுக்குள் செலுத்தி நோயான அணுவைக் கொல்ல வேண்டும்
என்று எண்ணினாலும் அதைத் தழுவிய உணர்வுகள் அதே வலு கொண்ட விஷத் தன்மை கொண்ட உறுப்புகளில்
வளரும்.
இந்த இன்ஜெக்சன் முறைப்படி அந்த
உறுப்புகளில் இது செல்லும் போது அந்த நல்ல அணுக்கள் மடிந்து விட்டால் அந்த
உறுப்பின் செயலாக்கங்கள் மாற்றிவிடும்.
மருந்தை உணவாக உட்கொள்ளும் நிலை
இல்லையென்றாலும் நமக்குள் இரத்த நாளங்களிலே அதை மாற்றி அமைக்கும் முறையைத் திரவ
நிலையை நீருடன் கலந்து அந்த மருந்தினைக் கொடுத்து இதைப் பாதிக்காத நிலையில் இணை
சேர்த்துத்தான் கொடுக்கின்றார்கள்.
நம் உடலிலுள்ள நல்ல அணுக்களுடன்
ஒத்த உணர்வை இணைத்து இந்த அணுக்களைப் பாதுகாத்து விஷத்
தன்மை கொண்ட அணுக்களை மடியச் செய்கின்றார்கள் விஞ்ஞானிகள்.
டாக்டர் மற்ற நிலைகளில் கற்றுணர்ந்த
உணர்வின் தன்மை கொண்டு பிறருடைய நோய்களை நீக்கக் கற்றறிந்து அதற்கு இன்ன இன்ன
உபாயங்கள் என்று மருந்தினைச் செலுத்தி நோய்களை நீக்கி மகிழச் செய்கின்றார்.
இந்த உடலின் உறுப்புக்கு இத்தனை
முக்கியத்துவம் செய்தாலும் இம் மனித வாழ்க்கையில் மீண்டும் ஆசை என்ற நிலைகளில்
பாசம் என்ற உணர்வுகளிலும் தன் உடலின் இச்சைக்குப் பொருளைத் தேடித் தான் செய்கின்றார்.
இந்த உடலைக் காக்கின்றார்.
1.இதைச் செய்தால் தனக்குப் பொருள்
கிடைக்கும் என்ற எண்ணத்தில் தான் செய்கின்றார்.
2.ஆகையினால் பிறருடைய நோய்களை அவர்
நுகர்ந்தாலும் அந்த நோய் அவரை பாதிப்பதில்லை.
நோயை நீக்கும் உணர்வுடன் கற்றுணரும்
போது நோயை அகற்றும் தன்மை கொண்டு கற்றுணர்ந்து மருந்தினை இணைத்து நோயை நீக்கும்
உணர்வு தான் டாக்டருக்கு வருகிறது.
ஆனால் ஒவ்வொரு மனிதனின்
வாழ்க்கையிலும்
1.பிறருடைய குறைகளையும்
துன்பங்களையும் கேட்டுணர்ந்த உணர்வுகள் தான்
2.உடலில் உள்ள நல்ல அணுக்களைக்
கொல்லும் அணுக்களாக விளைந்து
3.உடலில் நோயாக வருகிறது.
ஆனால் குறைகளை நீக்கும் உணர்வுகளைக்
கற்றுணர்ந்த நினைவாற்றல் வரும் போது (எலும்பில் பதிவான உணர்வுகள்)
1.அதற்குண்டான உணர்ச்சியைத் தூண்டி
2.அதற்குண்டான மருந்தை எதைக் கலவையாகக்
கொடுத்தனரோ
3.அதைக் கலக்கிச் சேர்த்துக்
கொடுத்தால் சரியாகின்றது.. வியாதி நீங்கும்.
இதைப் போன்று வியாதியைப் போக்கக்கூடிய
ஆற்றல் அனைத்து கற்றுணர்ந்த டாக்டர்களுக்கும் வருவதில்லை. கற்றுணர்ந்த காலத்தில் காலத்தையும்
சூழ்நிலையையும் அறியாது செய்தால் நோயை மாற்ற முடியாது.
ஆனால் சிந்தித்த உணர்வின் தன்மை
கொண்டு இந்தக் கலவையை இந்தக் காலத்தில் இன்ன பருவத்தில் இன்ன இன்ன இயக்கங்களில் இதைப்
பக்குவப்படுத்திக் கொடுத்தால் அந்த நோய் குணமாகும் என்று செய்பவரே உயர்ந்த டாக்டர்
ஆகின்றார்.
உயர்ந்த டாக்டராக இருந்து தன்
வாழ்க்கையில் செல்வங்களைத் தேடினாலும் தனது குடும்ப வாழ்க்கையில்
1.தன் சொத்துகளின் விஷயத்தில்
சிக்கலோ
2.சொந்த பந்தத்தில் என்னை
மதிக்கவில்லை என்று சொன்னாலோ
3.அவருடைய சகோதரிக்கும் மனைவிக்கும்
கொஞ்சம் வித்தியாசம் ஏற்பட்டாலோ
4.தாய் மேல் உள்ள பற்றினால் மனைவி அவர்களுக்குகந்த
நிலையில் செயல்படாவிட்டாலோ
5.டாக்டரின் உணர்வுகள் அனைத்தும் மாறுகின்றது.
மனைவி வாழ்ந்து வளர்ந்த நிலைகள்
கொண்டு தன் சார்புடையவர்கள் மீது பாசம் அதிகமாக வைத்துச் செயல்படும் போது
மருமகளைக் காணும் தாய் தன் பையன் (டாக்டர்) மீதுள்ள பாசத்தால்
1.அவனைப் படிக்க வைத்தோம்...!
2.அதற்கு ஒத்த நிலைகளில் அவன் மனைவி
வந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணி
3.பையனுக்கு அடிக்கடி நல் வழிகள்
சொல்லிக் கொண்டேயிருக்கின்றார்கள்.
இதைக் கேட்கும் போது டாடருக்கோ தாய்
சும்மா “அறிவூட்டிக் கொண்டே இருக்கிறார்கள்... குறை கூறிக் கொண்டே இருக்கிறார்கள்...”
என்ற உணர்வு வந்து விடுகிறது.
தொடர்ந்து இவ்வாறு காணும் நிலையில்
பகைமை உணர்ச்சிகளாக இந்த உயிர் அதை அணுவாக மாற்றி விடுகிறது. டாக்டருக்குத் தன்
மனைவியையோ தாயையோ பார்க்கும் போதெல்லாம் வெறுப்பாகி
1.அவர் உடலில் கை கால் குடைச்சல்
என்ற நிலை வருகிறது.
2.இவர்களை எண்ணும் போதெல்லாம் இந்த
நிலை வருகிறது.
அங்கே தன் நோயாளிகளின் நிலைகளை
அடிக்கடி டாக்டர் கேட்டறிகின்றார். மீட்கும் நிலை வருகின்றது. ஆனால் தன் குடும்பத்திற்குள்
வந்த பகைமையினாலும் வெறுப்பினாலும் டாக்டர் உடலில் நோய் வருகின்றது.
தன் மனைவிக்கும் தாய்க்கும் பகைமை...
தன் சகோதரிக்கும் மனைவிக்கும் பகைமை... என்று அந்தச் சந்தர்ப்பம் உருவாகின்றது.
அதே சமயத்தில் மனைவி கர்ப்பமாகிவிட்டால் கர்ப்ப காலங்களில் தாய் கருவில் இருக்கும்
குழந்தையின் நிலைகளையும் அது மாற்றுகின்றது,
ஏனென்றால் இந்தப் பகைமை எவ்வழியில்
வந்ததோ அவ்வழியில் உணர்வின் தன்மை
1.தன் கணவன் (டாக்டர்) அன்பைச் செலுத்தினாலும்
2.வைத்திய முறைப்படி
சமாதானப்படுத்தி அதன் நிலையை வளர்த்தாலும்
3.கணவன் மேல் அதிகப் பற்று
இருக்கும்.
4.தன் கொழுந்தியாள் மீதோ அல்லது
மாமியார் மீதோ தோன்றி விட்டால்
5.கருவுற்ற காலங்களில் இந்தப்
பகைமையின் நினைவாற்றல் அதிகமாகும்.
ஏனென்றால் கருவுற்ற காலங்களில் தாய்
தன் உடலில் வரும் உணர்வைக் கவர்ந்து தான் அந்தக் கருவின் சிசு வளரும். உடலில்
சோர்வடையும் தன்மை வரும் போது தான் யார் யாரிடம் பகைமை கொண்டதோ இந்த உணர்வின்
தன்மையைக் கர்ப்பமான தாய் நுகர நேர்கின்றது.
தன்னுடைய நிலைகளில் உயர்ந்த நிலை
வரும் போது எனக்குத் தடை இருக்கிறது என்ற நிலையாகி அந்தத் தாய் வெறுப்பால் வேதனையை
எடுக்கின்றது.
இதுவெல்லாம் மனித வாழ்க்கையில்
நம்மையறியாமல் நடக்கும் சந்தர்ப்பங்கள்.
உதாரணமாக பதார்த்தத்தைச் சுவையாகச்
செய்த பின் காரத்தையோ உப்பையோ விஷத்தையோ அதில் கலந்து விட்டால் என்ன ஆகும்?
விஷத்தின் தன்மை கலந்து விட்டால்
உண்டோர் நிலையும் அழியும். உப்பின் தன்மை வந்தால் உணவை உட்கொள்ளும் நிலைகளை
வெறுக்கும். காரத்தின் தன்மை என்றால் உணவை வெறுக்கும் தன்மை வரும்.
தன் தாய் மீது தன் மனைவி வெறுப்பாகி
அதற்குதக்க வெறுப்பான சொல்களைச் சொல்லும் பொழுது கணவனுக்கு மனம் சுளிக்கின்றது. அந்த
உணர்வைச் செயல்படுத்தினால் கணவனுக்கு இது நோயாகின்றது.
வெறுப்பின் தன்மை மனைவிக்கு வரும்
போது இங்கே கொதிக்கும் தன்மை அணுவாக அங்கே உருவாகின்றது.
இப்படியெல்லாம் மனித வாழ்க்கையில்
வளர்ந்த நிலை கொண்டு விஷம் கொண்ட உணர்வுகளை நாம் செயல்படுத்தும் போது மனிதனை
உண்டாக்கிய நற் குணங்களின் அணுக்கள் மடிகின்றது.
இவ்வறு தாய் எண்ணிய உணர்வின் தன்மைகள்
கருவிலே வளரும் சிசுவிற்கு பகைமை உணர்வாக இங்கே வளரும். நோயை உருவாக்கும்
அணுக்களாக்க் குழந்தையின் உடலில் உருவாகிவிடுகின்றது.
டாக்டரும் அவர் மனைவியும் இவர்கள் அழகாக
இருப்பார்கள். ஆனால் குழந்தையின் நிலையோ
மாறுபட்ட உணர்வுகள் வரும் போது நிறங்கள் மாறும்; குணங்கள் மாறும்; செயல்கள்
மாறும்....!
தாய் எடுத்துக் கொண்ட பகைமையான
உணர்வுகள் தாய் உடலில் பதிவாகி விட்டால் ஊழ் வினை. தாய் கருவிலே அந்த அணுவின்
தன்மை உருவாகும் போது தாயும்
குடும்பத்தைச்
சார்ந்தவர்களும் தாய் உற்று நோக்கிய உணர்வுகளும் இது கலவையாகி குழந்தை கருவிலே
இணைந்து விட்டால் பூர்வ புண்ணியம்.
சிசு பிறந்த பின் தாய் எப்படி
சங்கடப்பட்டதோ
1.தாயின் மேல் வெறுப்பு வரும்
2.தந்தையின் மேல் வெறுப்பு வரும்.
3.பாட்டியின் மேல் வெறுப்பு வரும்
4.குடும்ப சார்புடைய நிலை வரும்
போது குழந்தை பற்றற்றதாக மாறும்.
5.ஆயிரம் புத்தி சொன்னாலும் அவன்
நிலைக்கே அது வரும்.
தாய் எடுத்த ஊழ் வினைப்படி அந்தக்
குழந்தை செய்யும் நிலைகளைப் பார்த்து “இப்படி ஆகிவிட்டதே...” என்று நினைத்தால் அந்த
எண்ணத்தின் உணர்வு வித்தாகிறது.
ஒரு செடியில் விளைந்த வித்து எதை
நுகர்ந்து செடியாகிறதோ அதைப் போல
1.அந்த வேதனையின் உணர்வு வளர்ந்து
2.நல்ல உணர்வுகளை அழிக்கும் நிலைகள்
உருவாகிறது,
அதாவது வினைக்கு நாயகனாக குறையான
உணர்வுகளை அந்தத் தாய் நுகர்ந்ததை இந்தக்
குழந்தையின் உடலில் குறையச் செய்து உயர்ந்த நிலைகளைப் பெறவிடாதபடி தடைப்படுத்திவிடுகின்றது.
நாம் யாரும் தவறு செய்யவில்லை.
சந்தப்பத்தால் நாம் நுகரும் உணர்வுகள் நம்மை இவ்வாறெல்லாம் இயக்கிவிடுகின்றது.
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்
உணர்த்திய நிலைகளை நீங்கள் எல்லோரும் தெளிவாகத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்
என்பதற்கே இதைச் சொல்கிறோம்.
உங்கள் வாழ்க்கையில் உங்களை அறியாத
செயல்களிலிருந்து விடுபட வேண்டும் அருள் ஞானியின் உணர்வை உங்களுக்குள் பதிவாக்குகின்றோம்.
பதிவாக்கிய ஞானிகளின் உணர்வை எடுத்து உங்கள் வாழ்க்கையில் வரும் தீமைகளைத்
தடுத்துக் கொள்ளுங்கள்.
ஞானிகளின் உணர்வுகள் வளர வளர உடலை
விட்டுப் பிரியும் உயிரான்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து அழியா ஒளியின் சரீரம்
பெறும்.