ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 25, 2018

ஹரே ராம்… ஹரே ராம்… என்று காந்திஜி ஏன் சொல்கின்றார்…?


“ஹரே ராம்…ஹரே ராம்…” என்று காந்திஜி அடிக்கடி சொல்வார். எதற்காக அவ்வாறு சொன்னார்…? அவர் சொன்னதன் உட் பொருள் என்ன…? என்பதைப் பார்ப்போம்.

1.நமது உயிர் பல கோடி உணர்வின் தன்மை கொண்டு
2.அந்த எண்ணங்களால் தன்னைக் காத்திடும் உணர்வைப் பெற்றது இந்த மனித உடல்.
3.அந்த எண்ணத்தைத் தான் “ராமா…!” என்றார்.

 நான் எந்த உணர்வின் நிலையை அதாவது எந்தக் குணத்தை எண்ணுகின்றேனோ அந்தக் குணமே எனக்குள் இருந்து… ராமனாகச் செயல்படுகின்றது.

அதைச் சொல்வதற்குத் தான் எதை எடுத்தாலும் ஹரே ராம்…! ஹரே ராம்…! என்று சொல்கிறார்.

1.ஹரி என்றால் சூரியன்.
2.சூரியனினால் கவரப்பட்ட உணர்வுகளை நாம் நுகரப்படும் பொழுது
3.”எண்ணங்களாக வருகின்றது…” என்பதைக் காந்திஜி நமக்குத் தெளிவாக எடுத்துக் கூறி உள்ளார்.

ஹரே ராம்…! ஹரி என்றால் சூரியன். இப்பொழுது நான் பேசிக் கொண்டிருக்கின்றேன்.
1.நான் பேசுவதை இந்தச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து கொண்டால்
2.அந்தக் “காந்தம்” ஹரி.
3.நுகர்ந்து கொண்ட அந்த உணர்வுகள் “சீதாவாகின்றது...!
4.அதை நீங்கள் நுகரப்படும் போது “ஹரே ராம்…!”

அதாவது… அந்தச் சூரியனின் எதிரொளியாக… நாம் நுகர்ந்து கொண்ட உணர்வுகள் நமக்குள் “எண்ணங்களாக உருவாக்குகிறது…” என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே காந்திஜி எதை இயக்கமாகக் கொண்டார்…?

நீ எத்தனை நிலைகள் கொண்டாலும் எதன் வழி கொண்டாலும் ஒவ்வொருவரையும் மதத்தால்.. இனத்தால்… நீ பார்க்காதே…!

மதம் என்றோ இனம் என்றோ எல்லாம் அரசனால் உருவாக்கப்பட்டது. அரசனால் பிரிக்கப்பட்ட மதங்கள் தான் இனங்கள் தான் அவை. அவன் சுகமாக வாழ வேண்டும் என்பதற்காகச் செய்த நிலைகளால் தான் பல இனங்கள் இப்படி வந்தது என்று உணர்த்தினார்.

“மக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும்” என்ற சீதா என்ற குணத்தைத் தான் அவர் நுகர்ந்தார்.

1.நாம் எண்ணியதை உருவாக்குவது உயிர் தான் என்ற உண்மையை உணர்த்தி
2.ஒருவருக்கொருவர் பகைமை கொண்டு தாக்கிக் கொள்ளும் எண்ணத்தை வளர்க்காமல்
3.அனைவரும் சகோதரர்களாக வாழ வேண்டும் என்ற உணர்வைத்தான் அவர் ஊட்டினார்.
4.இதை நினைவுபடுத்தும் விதமாகத்தான் அவர் “ஹரே ராம்…ஹரே ராம்…!” என்று சொல்கிறார்.