பூமி பரிசுத்தமடையும் காலம்
மனித ஆத்மாக்களுக்குத் தான் வழிமுறையும் செயல் திறமையும்
செய்விக்க உணர்த்துகின்றேன். இவ்வுலக மாற்றத்தில் மிருகங்களின் நிலை என்ன…? மற்ற ஜீவராசிகளின் நிலை என்ன…?
1.இவ்வுலக மாற்றத்தினால் மனிதனின் நிலை மட்டும்
மாற்றப்படுவதில்லை.
2.இப்பூமியின் இயற்கைக் குணமே மாற்றம் கொள்ளப்
போகின்றது.
நல்ல கனியை அது கெடாத வரைக்கும் சுவை உணர்ந்து உண்ண
முடிகின்றது. அதே கனி அழுகிவிட்டால் நாற்றம் அடிக்கின்றது. அதைப் போன்று மாற்றம்
கொள்ளும் தருவாயில்… நல் உணர்வு கொண்ட ஆத்மாக்கள் மற்ற ஜீவ
ஜெந்துக்கள் இவற்றின் நிலையில் இருந்து “மாறும் அமில
குணங்கள் தான்” இவ்வுலகமே கல்கிக்குச் செல்லும் அவதார
நிலைப்படுத்துகிறது.
தீய எண்ணத்தை கொண்ட விஷமான அமில குணங்கள் இவ்வுலகினில்
இக்கலியுடன் மாறப் போகின்றது. ஜீவராசிகளில் உன்னத சக்தியுடைய
1.நம் மனித ஆத்மாக்கள் காணாத பல கோடி நிலைகள்
உண்டு.
2.பல கோடி தாவர வர்க்கங்களுண்டு
3.நாம் கண்டுணரும் பட்சிகளும் மற்ற சாது குணங்கள்
கொண்ட பிராணி வர்க்கங்களும் பல உண்டு.
இவ்வுலக மாற்றத்தின் போது அந்தந்த இடங்களின் மாற்ற நிலைக்கொப்ப அங்கங்குள்ள
ஜீவன்கள் எல்லாமே இன்றைய நிலை கொண்ட ஜீவநிலை உருமாறி… அவ்வுயிரணுக்கள் அவ்வுருவிலிருந்து பிரிந்தவுடன் அவ்வுருவுக்குண்டான
ஆவியான அமில குணங்கள் நற்குணங்கள் எல்லாம் ஆவியான நிலையில் திடப்பட்டுப் பல உன்னத
சக்தி கொண்ட பல கனிவளங்கள் இப்பூமியில் தோன்றிட… கலிக்குப்
பிறகு கல்கியில் செயல் கொள்ள உதவுகின்றது.
அப்பொழுது அக்கல்கியில் எந்நிலை கொண்ட தன்மையில் உயிரணு
வெளிப்பட்டதோ அதன் சக்தி இப்பூமியில் கல்கியில் உருவாக்கும் உயிர்த் துடிப்பின்
உன்னத சக்தியில் அவ்வுயிரணுவின் உருவ ஜொலிப்பு இருந்திடும்.
இவ்வுலகம் முழுமைக்கும் இன்றுள்ள உண்மையின் உயிர் ஜீவ
நற்சக்திகள் அதிகம். கடலும் மலையும் மடுவும் எல்லாமே. ஜீவத் துடிப்புள்ள சக்திதான்.
1.இத்தீய எண்ணங்களும் தீய செயலும் புரிவதெல்லாம்
மனித ஆத்மாக்களின் தொடர் தான்.
2.மனிதனிலிருந்து சென்ற சென்ற மிருகங்களும் சில
உள்ளன.
3.இம்மாற்றத்தினால் இத்தீய சக்திகள் மாறப்
போகின்றன.
எத்தீய சக்தியும் கல்கிக்கு மருந்தாகச் செல்கின்றது. எந்த
நிலையில்?
இப்பொழுது எப்படி இக்காற்றில் உள்ள விஷத்தன்மையை சில விஷச்
செடிகள் தன்னுள் ஈர்த்துக் கொண்டு இக்காற்றை சுத்தம் ஆக்குகின்றனவோ அதைப் போல் பல
நிலைகளை இன்றுள்ள தீய குணங்களும் இம்மாற்றத்தினால் வளர்ச்சிப் பெறப் போகின்றன
கல்கியில்.
இவ்விஷமான காற்று எங்கு செல்லும்…?
இவ்வுலகம் மாற்றம் பெற்றால் எல்லாமே ஆவி நிலையாகி அமில
குணப்பட்டு திடப்பட்டு ஒன்றுடன் உராய்ந்து வளர்ந்து கொண்டே தான் உள்ளது. தீய சக்தியையும்
அழிக்க முடியாது... நற்சக்திகளையும் அழிக்க
முடியாது.
இம்மாற்றத்தினால்…
1.இவ்வுலகத்துடன் கலந்துள்ள காற்று மண்டலத்தின்
கரியமில வாயுவின் விஷச் சக்தி
2.இவ்வுலகின் இயற்கைத் தன்மையினால் இவ்வுலகம்
மாறும் தருவாயில்
3.இவ் இயற்கைக் குணத்தில் இருந்து வெளிப்படும்
ஆவியான அமில சக்தி அதிகப்பட்டு அதன் திடத்தினால்
4.இக்காற்று உலகத்தின் இன்று சுழன்றுள்ள தீய
விஷமான அமிலக் குணத்தை இந்நற்சக்திகளின் அமில குணங்கள் மோதுண்ட பொழுது
5.சுழன்று கொண்டுள்ள இக்காற்று மண்டலத் தன்மை
மேல் நோக்கி இப்பூமியின் காற்று மண்டலத்திற்கு மேல் சென்று விடுகின்றது.
இப்பூமியில் ஈர்ப்பின் காற்று குண அமில நிலைக்கு மேல் இத்தீய
சக்தி பல நூறு மைல்களுக்கு மேல் நோக்கி உயர்ந்தும் சக்தி பெற்று… பால்வெளி மண்டலத்துடன் பல திசைகளில் பரவி விடுகின்றது. அதன் தொடரில்
அந்தந்த குண நிலைக்கொப்ப உள்ள மண்டலங்களில் இந்நிலை சேர்த்து விடுகின்றது.
ஒரு நிலையில் சுழன்று கொண்டுள்ள இச்சக்தி நிலையே பிரிந்து
செல்லும் பொழுது அதன் தன்மையிலும் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன.
கடும் விஷமான வைரம் எப்படி ஜொலிக்கின்றது…? அப்படித்தான் இம்மாற்றத்தினால் பல உன்னதத் தன்மைகள் நிகழப் போகின்றன.
1.இப்பூமியைச் சுற்றியுள்ள காற்று மண்டலம்
புனிதப்படும் பொழுது
2.இப்பூமியில் வளரும் ஜீவனின் நிலை எந்நிலை கொண்ட
புனிதத்தன்மை பெறும்…? இதனை உணர்ந்து செயல் கொள்ளுங்கள்.