ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 30, 2024

இருபத்தியேழு நட்சத்திரங்களும் நவக்கோள்களும்

இருபத்தியேழு நட்சத்திரங்களும் நவக்கோள்களும்


27 நட்சத்திரங்களும் ஆற்றலை நீங்கள் பெற வேண்டும். ஏனென்றால் ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு நட்சத்திரத்தின் இயக்கத்தின் தன்மை கொண்டது.
 
அந்த நட்சத்திரத்தின் இயக்கம் கொண்ட எந்தெந்தத் தாவர இனமோ அதனின் உணர்வின் தன்மை விளைந்த பின் தன் இனத்தின் தன்மை இங்கே ஒளியின் சுடராக மாற்றிக் கொண்டுள்ளது.
1.ஒவ்வொரு உயிரும் 27 நட்சத்திரத்தால் இயக்கும் உணர்வின் துணை கொண்டு
2.அந்த நட்சத்திரங்களின் சக்திகள் நமக்குள் ஐக்கியமாகிடல் வேண்டும்.
 
எப்படி 27 நட்சத்திரங்களுடைய சக்தி ஒருங்கிணைந்து ஒரு பிரபஞ்சத்தை உருவாக்கி சூரியன் ஒளியின் சுடராக வாழுகின்றதோ இதைப் போல
1.உயிரின் இயக்கத்தால் உணர்வின் எண்ணங்களை வளர்க்கப்பட்டு வாழ்ந்திடும் உணர்வின் தன்மையும்
2.தன் இனத்தின் பெருக்கம் வரும் பொழுது ஒளியின் சிகரமாக ஒளியின் நிலையாக நமக்குள் அந்த இனத்தைப் பெருக்கும் நிலை தான்
3.27 நட்சத்திரத்தின் சக்தியை நாம் பெற வேண்டும் என்று நமக்குள் ஒருங்கிணைந்த நிலையில் கூட்டச் செய்வதற்கே “இது…”
 
இப்பொழுது நான் பேசும் நிலையோ நவக்கோள்கள்.யிரணு தோன்றும் பொழுது எந்த கோளின் தன்மையை அதிகரித்துச் சேர்த்திருந்ததோ அதனின் பங்கு விகிதமே மனிதனுக்குள் வரும் பொழுது அந்தக் கோள் முன்னணியில் இருக்கும்.
 
நவக்கிரகம் என்பதும் இதே தான்…! எந்தக் கோளின் தன்மை நமக்குள் அதிகரித்தோமோ மற்ற கோளின் தன்மை வரும் பொழுது எதிர்மறையான நிலைகள் இயக்கச் சக்திக்கே இது உதவும்.
 
நம் உடலின் தன்மை உடல் ஒரு கோள்தான்.
1.சகோதர உணர்வு கொண்டு எடுக்கப்படும் பொழுது இது ஓ என்று இயக்கப்பட்டு ஒன்றிட்ட நிலை வரும் போது
2.நவக் கோளின் சக்தியை ஒருக்கினைந்த நிலைகள் கொண்டு நமக்குள் உருவாகும் நிலையே வருகின்றது.
 
நான் ஏதோ சாதாரணமாகச் சொல்கிறேன் என்று எண்ண வேண்டாம்
1.குருநாதர் பித்தரைப் போன்று இருந்து உயர்ந்த நிலைகளை எனக்குள் அனுபவபூர்வமாகக் கொடுத்த நிலைகளை
2.நீங்கள் எல்லோரும் பெற வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்கின்றேன்.
 
ஏனென்றால் விஞ்ஞான அறிவு ஒரு பக்கம் அழிவின் தன்மை சென்று கொண்டிருக்கும் இந்த நேரத்தில் மனிதனின் சிந்தனை அழியும் நிலை வருகின்றது.
 
மனிதனின் சிந்தனையே அழியும் பொழுது இழிநிலையான நிலைகளுக்குச் செல்வதற்கு முன் நீங்கள் அனைவரும் தயாராகி விட வேண்டும்…”
 
தயாரானால்
1.ருண்ட உலகை அப்புறப்படுத்தி விட்டு ஒளி காணும் உணர்வாக
2.உங்கள் பேச்சும் மூச்சும் உலகைக் காத்திடும் நிலையாகப் பெற வேண்டும் என்பதற்குத்தான்
3.என் குரு இட்ட ஆணைப்படி உங்களில் பதிவு செய்து கொண்டிருக்கின்றேன்.
4.அந்த நக் கோள்களின் சக்தி நீங்கள் பெற வேண்டும் என்று உபதேசிக்கின்றேன்.
 
இதனின் தொடர் கொண்டு சூரியன் எப்படி ஒளிச் சுடராக இருக்கின்றதோ உயிருடன் நீங்கள் தொடர் கொண்டு காந்தப் புலனாக உருவாக்கிக் கொண்டிருக்கும் அந்த உயிரின் நிலைகள் கொண்டு மகரிஷிகள் உணர்வைத் தனக்குள் அறிவாக எடுத்து
1.நாம் அனைவரும் அனைவருக்கும் அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று
2.ஒளியின் சுடராக இணைக்கச் செய்வது தான் உயிரின் நிலைகள்.
 
சூரியன் எவ்வாறு மற்ற கோள்களின் தன்மையை தனக்குள் எடுத்துச் சமமாக ஒளியாக மாற்றுகின்றதோ இதைப் போல நமக்குள் ஒளியின் சிகரமாக “அந்த மாமகரிஷிகளுடன் நாம் ஒன்றி உணர்வினை ஒளியாக மாற்ற முடியும்.
 
இதற்குத் தான் 27 நட்சத்திரங்களின் சக்தியும் நவக்கோள்களின் சக்தியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷிகளின் அருள் சக்தியும் மனிதனாக உருவாக்கிய நிலைகளில்றாவது அறிவை ஏழாவது நிலைகள் கொண்டு ஒளியின் சரீரமாக இருக்கும் அதனை நாம் அனைவரும் பெரும் பாக்கியமாக இணைத்திடும் நிலை தான் தியானத்திலே இந்த உணர்வினை ஐக்கியப்படுத்துகின்றோம்…”
 
நவக்கோளின் சக்தி என்றால் வேறு எதுவும் இல்லை…!
 
இந்த உடலை விட்டு எப்பொழுது வேண்டுமென்றாலும் உயிர் வெளியில் செல்லும் என்பதை மனதில் வைத்து…. அதற்கு முன் அருள் ஒளியைச் சேர்க்க வேண்டும்.
 
காரணம்… இந்த உடலுக்குள் எதை எல்லாம் இணைத்தோமோ அந்த உணர்வின் துணை கொண்டே அடுத்த ருவை உயிர் உருவாக்கும். ன்று மனிதன் என்ற வெறுப்பு கொண்டால் மனித ஈர்ப்பிற்குள்ளே மீண்டும் ழுத்துச் சென்று விடும்
 
1.அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும்
2.அது மற்றவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று எண்ணினால் அந்த உணர்வின் தன்மை கொண்டு
3.நம்மை மகரிஷிகள் இருக்கும் இடத்திற்கு உயிர் அழைத்துச் செல்லும்.
4.உயிர் நமக்குள் இருந்து அதைச் செயல்படுத்திக் காட்டும்.
 
உலக மக்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும் அவர் அறியாத இருள்கள் நீங்க வேண்டும் மெய்ப்பொருள் கண்டுணர்ந்து செயல்படும் திறன் பெற வேண்டும் என்று எது குருநாதர் காட்டிய அருள் வழி உங்களுக்கெல்லாம் அது பெற வேண்டும் இந்த உணர்வின் தன்மை உங்களில் விளைய வேண்டும் என்று எண்ணும் பொழுது நான் அதுவாகின்றேன்.
 
1.நீங்களும் இதைப் போன்று உலக மக்கள் ஒளி நிலை பெற வேண்டும் என்று எண்ணத்தைக் கூட்டி
2.அந்த ஒளியின் சரீரமாகும் உணர்வைப் பற்றுடன் பற்றி அதன் வழி சென்றால் உங்கள் உயிர் உங்களை அங்கே அழைத்துச் செல்லும்.