
எமது ஆசியைத் தாள் பணிந்து நீங்கள் பெறுவதல்ல… கண் கொண்டு நேர்முகமாகப் பார்த்துக் கவர வேண்டியதே அது…!
தீமையை விளைவிக்கும் சக்திகள் உங்களை அடிபணியும் நிலையாக உபதேசிக்கும் உணர்வுகள் உங்களுக்குள் ஓங்கி வளர வேண்டும் என்றே ஆசீர்வதிக்கின்றேன்.
உங்கள் தாய் தந்தையரைத் தாள்
பணிந்து அவருடைய அருள் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.
1.என்றைக்கும் உங்களுக்குக் குரு அவர்களே தெய்வமும் அவர்களே தாயின் உயிரே கடவுள்
2.ஒருக்கிணைந்து அவர்களை
அடிபணிந்தால் உங்களுக்கு வழிகாட்டிய உணர்வின் தன்மை அவர்கள் சொல்லும் வாக்கை நாம்
ஏற்றிடும் நிலையும்
3.நம்மைக்
காத்திடும் உணர்வுகள் பதிவு செய்தது ஓங்கி வளர்ந்து தீமைகளை அடிபணியச் செய்து
4.மெய் உணர்வைப் பெறும் தகுதியாக நாம் உருவாக்க வேண்டும்.
குருவிடம் கேட்பதெல்லாம்… உபதேசித்த உணர்வுகள் எனக்குள் ஓங்கி வளர்ந்து
என்னை அறியாது இருள் சூழ்ந்த நிலைகளுக்கு அழைத்துச் செல்லும்
அந்தத் தீமைகள் அடிபணிந்து
1.மெய் உணர்வைக் காணும் நிலையாகக் குரு அருள் பெற வேண்டும் என்று கண்ணைத் திறந்து
2.நான் ஆசி கொடுக்கும்
போது நீங்கள் என்னை நேர்முகமாகப் பார்ப்பதுதான் முறை.
கொடுக்கும் அருள் வாக்கின் நிலையை “நேரடியாகக் கண்கொண்டு பார்த்தால்…” கண்ணின் காந்தப் புலன் என்னைப் படம் எடுத்தாலும் கண்ணின் கருவிழி அதனுடன் இணைந்த காந்தப்புலன் யாம்
வெளிப்படுத்தும் அலைகளைக்
கவர்ந்து உங்களுக்குள் சுவாசிக்கச்
செய்து அருள் மகரிஷிகளின் சக்தியைப் பெறச் செய்யும்.
இந்த முறைப்படி தான் நீங்கள் ஆசி பெற வேண்டும்.
ஆனால் பெரியவரை நாம் வணங்காது
எப்படி இருப்பது…? என்ற தவறான வழிகள் காட்டப்பட்டதை விடாது பிடித்துக் கொண்டுள்ளார்கள்.
பாத நமஸ்காரம் செய்யத் தான் வருகிறார்கள். அதை விடுத்துவிடுங்கள்.
யாம் உபதேசம் கொடுக்கும் பொழுதெல்லாம்
1.யாம் கொடுக்கும் அந்த அருள் சக்திகளை
2.கண் கொண்டு
பாய்ச்சும்
உணர்வலைகளை
3.உபதேச வாயிலாகச் சொல்லாகச் சொல்வதை நீங்கள் உற்று நோக்கி
4.அந்த அருள் ஞானிகளின் உணர்வை நீங்கள் பெற வேண்டும் என்ற ஏக்கத்துடன்
5.கூர்ந்து கவனித்து எடுத்தால் தான் அந்த
உணர்வின் தன்மை உங்களுக்குள் ஆழமாகப்
பதிவாகின்றது.
ஆகவே தயவு செய்து
அதன் வழி
செயல்படுத்துங்கள்.
யாம் கொடுக்கும் வாக்குகள் அந்தச் சக்தி வாய்ந்த எண்ண வித்தாக விளைந்து… உங்கள் எண்ணத்தால் தீமைகளை அகற்றி… உங்களுக்குள் நன்மை பெறும் நிலையும்… அருள் ஞானம் பெறும்
தகுதியையும் பெறுகின்றீர்கள்.
அந்தத் தகுதியை நீங்கள் இழந்து விடக்கூடாது என்பதற்குத் தான் படிப்படியாகச் சொல்கின்றேன்.
உபதேசிக்கும்போது அதை ஏங்கிப் பெற வேண்டும்
என்ற நினைவுடன்
வரும் பொழுது தான்
1.என்னுடைய ஆசீர்வாதம் அருள் சக்தியாக உங்களுக்குள் விளைந்து உயர்ந்த ஆற்றலாகப் பெருகும்
2.மறவாது நீங்கள் இதைச் செய்ய வேண்டும்
என்று பிராத்தித்துக்
கொள்கின்றேன்.