துருவப் பகுதியில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் அதிகப்படியான மாற்றங்கள்
இது நாள் வரை உள்ள ஆராய்ச்சியின் கண்டுபிடிப்பில் உணர்ந்த
உண்மைக்கு மேலும் வலுக்கொண்ட பல நிலைகள் இன்று கூடி வருகிறது.
நம் பாட முறையில் யான் உணர்த்திய நிலையில் நம் பூமியின் சுவாச
நிலை பெற்று வாழும் உயிர் ஆத்மாக்கள் மற்ற கோள்களில் சென்று வாழ முடியாது…
இப்பூமிக்குகந்த ஈர்ப்பு குண அமிலத்தைத்தான் நம் பூமி ஈர்த்து வெளிப்படுத்தி
வாழ்கின்றது என்பதனைப் பல இடங்களில் உணர்த்தியுள்ளேன்.
நம் பூமியின் ஓட்டப் பாதை சிறிது மாறு கொண்டுள்ளதாகவும்… மாறு கொண்ட அமிலங்களும் ஓடும் ஓட்டமுடன் நம் பூமியின் ஈர்ப்பு காற்று
மண்டல நிலையுடன் சிக்குண்டு மோதிச் சிதறும் நட்சத்திர மண்டலங்களின் அமில குணமும்… “முந்தைய நாட்களைக் காட்டிலும் மாறு கொண்டு
வருகின்றது” என்று உணர்த்துகின்றேன்.
மாறு கொண்ட அமிலத்தைத் தான் நம் பூமி ஈர்க்காதே…! அப்படியிருக்க நம் பூமியின் சுவாச நிலை கெடுவதேன்…? என்ற வினா எழும்பலாம்.
1.நம் பூமியின் ஈர்ப்பு வட்டக் காற்று மண்டல
நிலைக்கும்
2.நம் பூமியின் வட்டத்திற்கு மேல் காற்று
மண்டலத்திற்கு மேல் பால்வெளி மண்டலத்திற்கும்
3.நம் பூமியின் காற்று மண்டல ஈர்ப்பு
நிலைகளுக்கும் இடைப்பட்ட நிலையில் தான்
4.பல சக்தி நிலைகளும் அமில நிலைகளும் மாறுபட்டு
நம் பூமியின் ஈர்ப்பிற்கு வருகின்றன.
நம் பூமி ஈர்த்து விடும் சுவாச அலையும் பால்வெளி மண்டலத்தில்
இருந்து நம் பூமிக்கு வரும் (பூமியின் ஈர்ப்பிற்கு வரும்) அமில குணங்களும்
இவ்விடைப்பட்ட நிலையில் சுத்திகரிக்கப்பட்டுத் தான் (FILTER)
நம் பூமியின் ஈர்ப்பிற்கே வருகிறது.
அப்படி இருக்க மாறு கொண்ட ஓட்ட கதியில் அமில குணங்கள்
அதிகப்பட்டு வருகிறது என்றால் அதனின் பொருள் என்ன…?
நாம் சமையல் செய்யும் பொழுது ஒரு வகை மரத்தை கருவேல மரத்தை
வைத்து எரிக்கின்றோம். அதனுடன் மற்ற குணவிறகைக் குறைவாக வைக்கும் பொழுது கருவேல
மரத்தின் நிலை உயர்ந்ததாக இருக்கும்.
மற்ற விறகைக் கருவேல மரத்தைக் காட்டிலும் அதிகமாக வைத்து எரிக்கும் பொழுது மற்ற விறகின் நிலை அதிகமாகக்
கூடி விடுகிறது.
எரிந்து ஆவியாகிக் கலக்கும் நிலையில் அதிகப்படியாக வைத்த
விறகின் குண ஆவி நிலையும் கருவேல மரத்தின் ஆவி நிலையும் ஒன்றுடன் ஒன்று கலந்து
அதற்குகந்த தனி அமில நிலையாகி மீண்டும் ஒரு நிலையான தன்மை வழிபடுகிறது.
அதைப் போல்
1.நம் பூமியின் ஓட்டக் கதியில் இன்று ஓடும் மாறு கொண்ட
ஓட்டத்தினால் ஏற்படும் புதிய அமில குணமானது
2.வழக்கமாக எடுக்கும் நிலையைக் காட்டிலும்
அதிகப்பட்டுள்ளதால்
3/நம் பூமியின் ஈர்ப்பு நிலைக்கும் பால்வெளி
மண்டலத்திற்கும் இடையிலுள்ள இச்சுத்திகரிப்பு ஆலை
4.”புதிய அமில குணத்தை”
நமக்கு அனுப்பி வருகின்றது.
இதன் தன்மை நம் பூமியின் நிலையில் அதிகமாக ஜீவராசியின் சுவாச
நிலைக்கு வருவதைக் காட்டிலும் நம் பூமியின் “வட துருவ தென்
துருவ” நீர்நிலையின் ஈர்ப்பிற்குத்தான் அதிகமாகச்
செல்கின்றது.
முந்தைய பாடத்திலேயே நம் பூமிக்கு உயிர் நாடியாய் வட துருவம்
தென் துருவம் அமைந்துள்ளன என்று உணர்த்தினேன். அதுவல்லாமல் நம் பூமிக்குச் சில
இடங்களில் சூரியனின் ஒளியே காணாத இடம் உள்ளது என்றும் உணர்த்தினேன்.
ஆனாலும் அங்கு உயிரணுக்கள் உண்டு. சூரியனின் ஒளி படாவிட்டாலும்
(நேராக) பூமியின் சுவாச அலையின் வெக்கையும் காற்று மண்டலத்தின் அலையும் அங்கு
உள்ளதினால் ஜீவன் உண்டு. ஆனால் கடும் விஷ குணங்கள் நிறைந்துள்ள
இடங்களாகத் தான் அவை உள்ளன.
இப்பூமியிலேயே பலதரப்பட்ட வளர்ச்சி நிலைகள் எண்ணிலடங்கா வண்ணம்
உள்ளன. அதற்குகந்த நிலையை அவை அவை பிரித்து அவற்றின் வளர்ச்சி நிலை வளர்கின்றது.
இதை உணர்த்தும் நிலை எதற்கு…? என்று
எண்ணலாம்.
பூமியின் மாறு கொண்ட ஓட்ட கதியில் இருந்து பூமியின் அலையுடன்
அதிகப்பட்டு அவ்வமிலங்கள் நம் பூமியின் ஈர்ப்பிற்கு வந்தாலும்
1.அதன் நிலைக்குகந்த ஈர்ப்பு நிலையான நம்
பூமியின் சூரிய ஒளி படாத இருண்ட பகுதியின்
2.அமில குண வர்க்கத்தின் தொடர்புடைய அமில குணமாக
அது இருப்பதினால்
3.இருண்ட பகுதியின் ஈர்ப்பிற்கு இப்புதிய நிலை
விஷ அமிலம் சென்று விடுகின்றது.
ஆனால் இதன் வளர்ச்சி நிலை அதிகரிப்பினால் இன்றைய காலகட்டத்தில்
நம் பூமியின் ஆத்மாக்கள் ஏற்க முடிவதாகத்தான் உள்ளது. காலநிலை கூடக்கூடத் தான் இதன்
வளர்ச்சி நிலையில் அதிகரிப்பும் ஏற்படும்.
1.மிளகாய் குறு மிளகு இப்படியுள்ள செடிகள்
அதற்குகந்த கார குணத்தையும்
2.கரும்பும் கனிகளும் அதற்குகந்த இனிப்பு
குணத்தையும் அதனதன் பழக்கப்பட்ட ஈர்ப்பில் வளர்வதைப் போல்
3.இன்றைய நிலையில் நம் பூமியின் ஓட்ட
மாற்றத்தினால் வந்தடைந்த அமிலத்தை எடுக்கக்கூடிய
4.இருண்ட பகுதியில் உள்ள விஷ ஜெந்துக்களுக்கும்
தாவரங்களுக்கும் உகந்ததாக உள்ளது.
5.”இதன் வளர்ச்சியினால் தான் மாற்ற நிலை ஏற்படும்…”