ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 15, 2024

சோமபானம் என்ற சோகபானம்

சோமபானம் என்ற சோகபானம்


குடும்பங்களில் கடும் சிரமங்கள் ஏற்பட்டால் இன்று லாகிரி வஸ்துகளை (மது) உபயோகப்படுத்துகிறார்கள். அதைப் போட்டு குடும்பக் கவலையே இல்லாதபடி பல இம்சைகளைச் செயல்படுத்துகின்றார்கள்…”
 
ஆரம்பத்திலே அன்றைய அரசர்கள் சோமபானம் என்ற நிலையை உருவாக்கிக் கொடுத்துத் துஷ்ட தெய்வங்களையும் உருவாக்கி மந்திரங்களையும் சொல்லிப் பழகி இருந்ததனால்
1.அதையே காவல் தெய்வம் என்று வணங்கி சாராயமும் கறியும் வைத்துக் கும்பிடுபவர்களும் இருக்கின்றார்கள்.
2.இப்படிக் கும்பிட்டு ஏற்றுக் கொண்ட பின் இதை ஒத்த ஆன்மாக்கள் உடலுக்குள் வந்து சேர்ந்து விடுகின்றது.
 
ஆதியிலே அரசன் எந்த அடிப்படையில் (செய்வினை ஏவல் தோஷம்) இதை உருவாக்கி மக்களுக்குள் பதிவு செய்தானோ அதுவே இன்று வேரூன்றி வளர்ந்து விட்டது. அவன் உருவாக்கிய மந்திரங்கள் அனைத்தும் மக்களுக்குள் ஊடுருவி விட்டது.
 
மது மாமிசம் இவைகளை வைத்து இன்று மந்திரத்தை ஜெபித்தால் போதும்
1.அரசர் காலத்தில் உருவாக்கப்பட்ட நிலைகள் பிரிந்து சென்ற ஆன்மாக்கள் இங்கே வந்து சேரும் பல கெடுதலைச் செய்யும்.
2.துன்பங்களை மறக்க மதுவை உபயோகப்படுத்தி எதன் வழி அந்த ஜீவன்கள் பிரிந்ததோ அது இன்னொரு உடலுக்குள் சென்ற பின்
3.அதே மதுவைப் பருகச் செய்யும் அவனைச் செயலற்றதாக ஆக்கும்அதன் வழியில் வளர்ச்சி ஆகும்.
4.மீண்டும் அதனால் தொடர்படும் சாபங்கள்அதனால் டும் வேதனைகள் அங்கே உருவாகும்.
 
இப்படி உருவாகி விட்டால் அந்த உடலை விட்டுச் சென்ற பின் உயிரானமா தன் உடலில் எத்தனை வேதனைகள் பட்டதோ அந்த வேதனையை உருவாக்கும் உணர்வுகள் உயிருடன் ஒன்றித் தொக்கிக் (சுற்றி) கொண்டே இருக்கும்.
 
இந்த உணர்வுகள் தான் உடல்உடலில் விளைய வைத்த்து தான் உயிர். உயிரின் தன்மை கொண்டு இந்த ஆத்மா அதில் சேர்த்துக் கொண்ட பின்
1.நிலையான வேதனையாக என்றுமே வேதனைப்படும் நிலையாக அமைத்து விடுகின்றது.
2.மதுவைக் குடித்துக் கஷ்டங்களை மறக்கலாம் என்று செய்தாலும் இது எல்லாம் விடாது.
 
ஆகவே உடலை விட்டுச் சென்ற பிற்பாடு என்ன நடக்கும்…? என்று சற்று தெரிந்து கொள்ளுங்கள்.
 
உடலில் இருக்கும் பொழுதாவது சமாளித்துக் கொள்ளலாம்… உடலை விட்டுச் சென்றால் சமாளிக்கும் திறனே கிடையாது வேதனையை அனுபவித்தே தான் தீர வேண்டும்.
 
1.மீண்டும் எந்த மனிதனுடைய ஈர்ப்புக்குச் சென்றாலும் அங்கே மனிதனாகப் பிறக்க முடியாது
2.அங்கேயும் வேதனையை உருவாக்கி அவனையும் வீழ்த்தி விட்டு
3.எந்தத் தகாத செயலை இவன் செய்தானோ அதையே செய்யச் செய்யும்.
 
எந்த வேதனை அனுபவித்தானோ அதை அங்கே உருவாக்கி அதில் விளையும் உணர்வின் சத்தை து எடுத்துத் தனக்குள் வளர்த்துக் கொள்ளும்.
 
அந்த உடலை வீழ்த்திய பின் மனிதனுடைய சிந்தனைகள் முழுமையாக அழிந்து உயிர் பாம்பின் ஈர்ப்புக்குள் தான் கொண்டு போய்ச் சேர்க்கும்.
 
கீதையிலே சொல்வார்கள் நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்று.
1.எந்தெந்த வேதனையை உருவாக்கி அதை ரசித்தோமோ அந்த வேதனையின் செயலாக நாம் இருந்தோமோ
2.அதனின் அடிப்படையிலேயே உயிர் அடுத்த உடலுக்குள் கொண்டு சேர்க்கும்.
 
அதாவது விஷத்தைக் கொட்டி உணவாக உட்கொள்ளும் பாம்பின் ஈர்ப்புக்குள் அழைத்துச் சென்றுவிடும் ஏனென்றால் அந்த விஷத்தைத் தான் தன் உடலாக அது மாற்றி வைத்திருக்கின்றது.
 
மனிதனாகப் பிறந்த பின் கொடூர வேதனைகளை அனுபவித்து அதில் வளர்த்துக் கொண்ட விஷம் எதிலே சென்று ஒடுங்கும்…?
 
இந்த விஷத்தையே உணவாக உட்கொள்ளும் பாம்பின் ஈர்ப்புக்குள் இந்த உயிரான்மா சென்று விஷத்தைத் தாங்கிக் கொள்ளும் உடலாகப் பெற்று அதிலிருந்து தான் மீண்டும் தன்னைக் காத்துக் கொள்ளும் நிலைகள் மீண்டும் விளைகிறது.
 
1.மதுவை விரும்பிக் குடிப்பவர்களாக இருந்தாலும் சரி… அல்லது கவலையை மறக்க அதைக் குடித்தாலும் சரி
2.இறந்த பின் கடைசியில் அந்த நிலை தான்…!
 
இதைத் தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்.