நான் சொல்லும் நிலைகள் வேடிக்கையாக இருக்கலாம்…!
வலுவிழந்து வலு கூட்டிக்கொள்ளப் போகின்றது நம் பூமி என்று
உணர்த்தினேன். எதன் அடிப்படைத் தன்மையில்…?
முந்தைய பாடத்தில் நம் பூமியின் ஓட்டமுடன் பூமிக்குகந்த அமில
குணங்கள் கொண்ட நட்சத்திர மண்டலங்கள் பூமியின் ஈர்ப்பில் வந்து சிக்குகின்றன என்றும் உணர்த்தினேன்.
வலுவிழந்து வலுக்கூடும் நிலை என்பது
1.இன்றைய பூமியின் வலுவிழந்த இந்நிலை…
2.இப்பொழுது பூமியின் மாறு கொண்ட ஓட்டப் பாதையில்
சந்திக்கும் நட்சத்திர மண்டலங்களில் சிதறல்களும்…
3.மாறு கொண்ட அமில குணத்தின் சேர்க்கையில்
ஏற்படும் நிலையில் ஏற்படும் புதிய அமில வளர்ச்சிக் குணங்களின் அதிகரிப்பும்…
4.நம் பூமியின் ஈர்ப்பில் மோதுண்டு இன்றைய
இயற்கைத் தன்மையின் நிலையே
5.மாறு கொண்டு செயல்படும் இன வழிப்பாதை நிலை நம்
பூமிக்கு ஏற்பட்டுள்ளது.
வழக்கமான பாதை நிலையிலிருந்து மாறு கொண்டு சுழன்று ஓடும்
தன்மையினால் அந்த இடங்களுக்குகந்த அமில குணங்களும் ஏற்கனவே நம் பூமி வளர்த்துக்
கொண்ட நம் பூமியின் ஈர்ப்பலையின் காற்று மண்டல அமில குணத்துடன் புதிய அமில குணங்களின்
ஈர்ப்பின் நிலை மோதுண்டு இது வெளிப்படுத்தும் அமிலமும் மோதுண்டு ஒன்றுக்கொன்று
உராய்ந்து ஏற்கும் நிலை பெறுவதற்கு முன்… ஒளி அலையாகி
அதற்குப் பின் தான் பூமியின் ஈர்ப்பலைக்கு… இப்பொழுது ஓடும்
பாதையில் சந்திக்கும் “புதிய அமில குணம்” நம் பூமியின் ஈர்ப்பின் காற்று மண்டலத்துடன் கலக்கும் தன்மை பெறுகின்றது.
நம் பூமியின் காற்று மண்டலத்திற்குள் உள்ள அமில குணத்தின் மாற்ற குணங்கள் மோதிடும் நிலையிலேயே மழை வரும்
காலங்களில் இடியும் மின்னலும் ஏற்படுகின்றன.
சுழன்று ஓடும் இப்பெரிய நம் பூமியின் கோளத்தைக் காட்டிலும்…
1.நம் பூமி உறிஞ்சி வெளிப்படுத்தும் காற்று
மண்டலத்தின் விகித வட்டம் பெரிதாக உள்ள தன்மையில்
2.இவ் ஓட்ட கதியில் ஏற்படும் அமில மோதலில்
ஏற்படும் ஒளி வட்டம் தான் என்று பூமியைச் சுற்றியுள்ள ஒளி வட்டம்.
3.முந்தைய காலங்களைக் காட்டிலும் இன்றைய நிலையில்
அவ்வொளிப் பிரகாசம் கூடுதலாகத் தெரிகின்றது.
நம் பூமிக்கு என்று ஏற்பட்டுள்ள இந்நிலையினால் அபரிமிதமான அமில
சக்திகள் ஓடும் பாதையில் இருந்தும் நட்சத்திர மண்டலங்களின் வெடிப்பு நிலையில்
இருந்தும் கூடிக்கொண்டு அதிகமாக பூமியின் சுவாச நிலைக்கு வருகிறது.
அப்படி வருவதினால் வலுவிழந்து வலு கூடும் தன்மை
என்பது இக்கலி காலத்தில் மனிதனால் காற்று மண்டலத்தை நஞ்சாக்கி வலுவிழக்கச் செய்த
நிலையை…
1.இம்மாற்ற ஓட்டத்தின் நிலையினால் ஏற்பட்டுள்ள
மாறு கொண்ட அமில குணத்தை நம் பூமியின் அலையில் கலக்கச் செய்து
2.நம் பூமியின் பழக்கப்படுத்திக் கொண்ட
நிலையிலிருந்து அதிகச் சுமை கலக்கப் பெற்று
3.அதை ஏற்கும் பக்குவத்தன்மையை நம் பூமியின்
சுவாச நிலை ஏற்றுக் கொள்ளும் இயற்கை நிலை இல்லாததினால்
4.பூமியின் சுவாச நிலையை மனிதனுக்கு எப்படி
அதிகமான உணர்ச்சி நிலை ஏற்படும் பொழுது இரத்தக் கொதிப்பு ஏற்படுகிறதோ
5.அதைப் போன்ற நிலையில் நம் பூமி உள்ளது.
இன்றைய காலகட்டத்தில் சிறுகச் சிறுக உள்ள இந்நிலை அதிகப்படும்
தருணத்தில் பூமியின் சுவாச அலைகள் மாறு கொண்டவுடன்
1.இன்று மனிதனால் புதைத்து வைக்கப்பட்டுள்ள
வெடிகுண்டுகளின் நிலைக்குகந்த பாதுகாப்பும் குறைந்து
2.முந்தைய பாடத்தில் உணர்த்தியுள்ளதைப் போல்
இக்கலியின் மாற்ற நிலையை மனிதன் காணப் போகின்றான்.
சொல்லும் நிலைகள் வேடிக்கையாக இருக்கலாம்…!
காற்று மண்டலத்தின் ஈர்ப்புக்கு வந்துள்ள புதிய குண அமிலத்தின்
வளர்ச்சியின் புதிய சக்திகள் உருவாகலாம். இயற்கையில் விஞ்ஞானத்திற்கும்
செயற்கையின் வழி வாழ்க்கைக்கும் இன்றைய ஆராய்ச்சியில் இருந்தும்… பல உண்மைக் குண நிலைகளை எடுக்கலாம்.
ஆராய்ச்சிக்குப் புதிய வழித் தொடரில் சென்று பாருங்கள்… இதன் உண்மைக் குணம் புரியும்.