
யாம் கொடுக்கும் ஞானமும் யுக்தியும்
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையில் எப்படி எல்லாம் பல நிலைகள் நடக்கின்றது என்பதைத் தெரிந்து
அதை நீங்கள் மாற்றிக் கொள்வதற்குச் சக்தி வேண்டும்.
1.அது
உங்களுக்குத் தெரியாது… தெரிய வைக்கின்றோம்.
2.அந்தச் சக்தி பெறுவதற்குண்டான ஊக்கத்தையும் கொடுக்கின்றோம்.
3.அதைத் தெளிவாக்கும் அளவுக்குப்
பதிவாக்குகின்றோம்.
திட்டியவனை
நினைத்தவுடன் நமக்கு ஆத்திரம் வருகின்றது… அன்றைய காரியங்கள் கெடுகின்றது. சங்கடம்
வரும் பொழுது நான் சொன்ன பதிவை
நினைவுக்குக் கொண்டு
வந்தால் “ஞானம்” வரும். சங்கடத்தை விலக்கக்கூடிய
“யுக்திகள்” வரும்.
உங்கள்
சொல் கேட்பவர்களுக்கு நிவர்த்தியாகும். அவர்கள் மனதிற்குள் இந்த உணர்வுகள் சென்று நம் மீது
உள்ள கசப்பையும் கடுப்பையும் குறைக்கும். உங்கள் அனுபவத்தில் பார்த்துக் கொள்ளலாம்.
என்னை
இப்படிப் பேசினார்களே… பேசுவார்களே…! என்ற எண்ணம் வரப்படும்
போது அந்த அச்ச உணர்வோடு நாம் பேசும் பொழுது
1.நாம்
சொல்லக்கூடிய பதில் அவர்கள் செவிகளிலே பட்டு
2.நம்முடைய
பயப்படும் உணர்வே அவர்கள் உடலுக்குள் சென்று நம்மை மிரட்டும் நிலைக்கு அது இயக்குகின்றது
அவரிடம் செய்த பணம்
பரிவர்த்தனையில் சொன்ன நேரத்தில் கொடுக்க
முடியவில்லை. ஆனால் எப்படியும் அதைத்
திரும்பச் செலுத்தும் அந்தச் சக்தி நாங்கள் பெற வேண்டும். நாம் சொல்வதை அவர்கள் கொஞ்சம் அமைதியாகக் கேட்டு எங்களுக்கு அந்த வழி கொடுக்க வேண்டும்.
அந்த நிலை
பெற வேண்டும் என்று நாம் எண்ணினால் அவ்வாறு வலுவாக எண்ணும் உணர்வுகள்.. அவர்கள் நம்மை எண்ணி
வரப்படும் பொழுது நம்முடைய மூச்சலைகளை… அவர்கள் சுவாசித்தால் அந்த உடலில் மாறி நம் மீது உள்ள வெறுப்பை நிச்சயம் குறைக்கும்.
வாழ்க்கையில்
எந்தக் கஷ்டம்
வந்தாலும் ஆத்ம சுத்தி செய்து விட்டு அனைவரும் நன்றாக இருக்க வேண்டும்.
அதற்குண்டான மன பலம் பெற வேண்டும். நம்மிடம் பழகும் நண்பர்களும் நம்மிடம் ஒத்துழைக்கும் அந்த நல்ல பண்புகள் வரவேண்டும் என்று எண்ண வேண்டும்.
ஏனென்றால்
சங்கடத்துடன் மற்றவரிடம் பேசினால் மற்றவர்களையும் அந்த தவறான நிலைகளுக்கு அது
இயக்கிவிடும்.
சங்கடத்துடன் செடிக்கு நீர் ஊற்றினாலும் அது பட்டுப் போகிறது. இதை எல்லாம் நாம் தெரிந்து கொள்ளலாம்.
1.இதையெல்லாம் அனுபவத்தில் நீங்கள்
சீர்படுத்த… சமப்படுத்த
ஒரு வலுவான சக்தி வேண்டும் என்பதற்குத்தான்
2.வழியறிந்து செயல்பட உபதேசிக்கின்றோம்.
உயர்
கல்விகளிலே மருத்துவத்திற்கும் இஞ்சினியர்களுக்கும் சொல்லிக் கொடுக்கிறார்கள். அதன் வழி
படிக்கின்றோம்.
இதைப் போலத் தான்
எனக்கு குருநாதர் கற்றுக் கொடுத்த உணர்வை உங்களுக்குள் நினைவாக்கிப் பதிவாக்குகிறோம், உங்கள் நினைவுக்கு வரும் பொழுது
1.வாழ்க்கையில்
வரும் சங்கடத்தைச் சமாளிக்கும் அந்த ஞானம் உங்களுக்குக் கிடைக்கும்.
2.அந்த
ஞானத்திற்கு உண்டான யுக்தியைத் தான் அடிக்கடி சொல்லி அதை ரெக்கார்ட் செய்து வைக்கிறேன்,
ஈஸ்வரா என்று உயிரை
எண்ணி துருவ நட்சத்திரத்தின் சக்தியை இணைக்க வேண்டும் அது
உங்களிடம் பதிவாகி இருக்கின்றது அதோடு கலந்து எலக்ட்ரானிக்… இந்த
உணர்ச்சிகளை ஊட்டுகின்றோம்.
பாலிலே சர்க்கரை போட்டால் இனிப்பாக
இருக்கின்றது. அதிலே காபித் தூளைப் போட்டால்
ருசியாகின்றது. பாலில் சர்க்கரை சேர்த்து அதனுடன் புளிப்பைப் போட்டால் அந்தப் புளிப்பு ஒரு ருசியாக இருக்கின்றது.
அந்த
புளிப்புடன் லேசாகக் காரத்தைச் சேர்த்தால் அது தனி ருசி தான். மிளகைப் போட்டுப் பாருங்கள்… மிளகாயைப் போட்டுப் பாருங்கள். அது ஒரு ருசியாக இருக்கும். பானக்கம்
கரைத்தது போன்று தனி ருசியாக இருக்கும்.
இதைப் போன்று
தான் உங்கள் உணர்வுக்குள் எதையுமே
சுவையாக மாற்றி அமைக்கக்கூடிய சக்தி உங்களிடம் உண்டு. அதற்குத் தான் வழி
சொல்கிறேன்.
ஏனென்றால் இன்றைய
விஷ உலகம் பயங்கரமான நிலையாக வருகிறது
1.அதிலிருந்து மாற்றி
அமைக்கக்கூடிய சக்தியாகத் துருவ நட்சத்திரத்தின்
ஆற்றலை
2.உங்களுக்குள் பூராம்
ரெக்கார்ட் செய்து வைக்கின்றோம்… இது உங்களுக்கு நல்ல பலனைத் தரும்.