உலகத்திலுள்ள பொருள் பொக்கிஷத்தை நாடி உங்கள் நாட்டம் செல்கிறதா…?
குருநாதர்:-
உங்களின் தியான ஈர்ப்பின் அருளினால் உங்களின் ஈர்ப்புக்குகந்த
போதனையை உணர்த்தி வருகின்றேனம்மா. நீங்கள் இருவரும் செலுத்திய தியானத்தின்
ஈர்ப்பிற்கு உங்களுக்கு இப்பொக்கிஷப் பேழையை அளிக்கின்றேன்.
இதிலிருந்து அருளப்பெறும் உண்மைகளை உமதாகப் போற்றி
சிவனடியார்கள் என்று உணர்த்திய சித்தர்களும் நாயன்மார்களும் பல பாடல்கள் பக்தி வழி பெற்று எதை அடைய வேண்டும் என்று அதன் நிலை பெற்று இதனை உமதாகப்
பிறருக்கு வெளிப்படுத்தாத பொக்கிஷமாய் வைத்துப் பேரின்பப்
பெருநிலை என்று அந்நிலையை அடையலாம்.
இன்றைய தியானத்தில் குருநாதர் (சற்குரு மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர்) இந்நிலையில்
காட்டித் தந்து அருளியவுடன் பேரானந்தம் கொண்டு அவர் தந்த பேழையை நான் பெற்றவுடன்… என் எண்ணத்தில் சில வினாக்கள் தோன்றி அவரிடமே என்ன பயன்…? என்றெல்லாம் வினா எழுப்பினேன்.
பிறகு அவரிடம் அப்பேரின்பப் பெருநிலையை நீங்கள் தந்த அருள்
பொக்கிஷத்தை நான் பெற்றால் சுயநலம் என்ற நிலையில் நான் தனிமையாக்கப்படுவேன்.
அதனால் பெறக்கூடிய பயன் என்ன…? என்ற வினா எழுப்பினேன்.
குருநாதர்:- நம் பூமியில் அதுவும்
இவ் இந்திய கண்டத்தில் பல பொக்கிஷங்கள் அரசர்கள் ஆண்ட காலத்திலிருந்து வைக்கப்பட்டு
அப்பொருள் உபயோகமற்று நம் பூமியில் உள்ளது.
இன்று உங்களுக்கு என் அருளினால் உலகத்தில் உள்ள எப்பொருள்
எங்குள்ளது…? என்று உணர்த்தினால் அதன் பயனை நீங்கள் பெறவும்
அதைப் பிறர் எடுக்கவும் உங்களின் தியான அருள் வழி செய்யும்…!
என்று உணர்த்தி குருநாதர் பதிலுரைத்தார்.
இவர் எங்களை எங்களின் அருள் நிலையையும் அவர்பால் வைத்துள்ள
பக்திக்கும் “பொருளைக் காட்டிச்
சோதனைக்குள்ளாக்குகின்றார்” என்பதனை அறிந்து கொண்டோம்.
ஆரம்பத்தில் நீங்கள்தான் பாடத்தில் உணர்த்தியுள்ளீரே…! அரசர்களாலும், அன்றைய மக்களாலும் பூமிக்கடியில்
புதைத்து வைத்துள்ள பொக்கிஷங்களை அவர்களின் ஆவியே அங்குள்ள பொழுது அதனை அடைவது நம்
சாதனைக்குடையதா…? என்று சபல எண்ணமுடனும் முதலில் வினா
எழும்பியது.
அதற்கும் குருதேவர் ஆவி நிலையில் பூதங்களாய் உள்ளவற்றை
சப்தரிஷிகள் துணையுடன் எங்கள் துணை கொண்டு இப்பூமியில் எங்கெங்கு எப்படி எப்படி
பொருள்கள் புதைக்கப்பட்டுள்ளன எனச் சிலவற்றைக் காட்டி எங்களைச் சோதனைப்படுத்தினார்.
1.அவர் ஒவ்வொரு நாளும் எங்களுக்குச் சில
வினாக்களை எழுப்பி அதன் நிலையில்
2.எங்களை எண்ணத்தினால் பல சோதனைகள் வைத்துத்தான்
எங்களின் அருள் நெறி தியானத்திற்கு வழிகாட்டித் தருவார்.
எங்கள் குரு வேணுகோபால சுவாமிகள் அடிக்கடி ஈஸ்வரப்பட்டர்
அவர்கள் உடலுடன் உள்ள காலத்திலும் இன்றும் அவருக்கு ஏற்படும் சோதனையின்
நிலையெல்லாம் ஒரு சில உணர்த்தியுள்ளார்.
இன்று எங்களையும் அதே சோதனைப்படுத்தினார்.
அப்பொழுது
1."நான் தந்த அருள் பொக்கிஷத்தை நீ
ஏற்கவில்லையா…?
2.எங்களின் அருளால் எங்களால் தான் இந்நிலை
ஏற்பட்டது என்ற பெயர் நிலைக்கும்.
3.“நாங்களே அருள் தந்த பிறகு நீ எப்படி
மறுக்கலாம்…?" என்ற வினாவும் எழுப்பினார்.
உடனே குருதேவர் "உள் நிலையில் இருந்து மட்டும் பதிலளிக்க
வேண்டாம். உன் கணவரிடம் இவ்வினாவை எழுப்பு" என்றார்.
அவர் உடனே
1."இப்பொழுது குருநாதரின் அருளினால்
கிடைக்கப்பட்ட ஆத்மீக வழித்தொடரின்
2.ஞான பொக்கிஷத்தின் அருள் நிலையடையும்
பக்குவப்பேற்றைத் தந்தால் போதும். பொருளான பொக்கிஷத்தால் எப்பயன்…?" என்றார்.
உடனே குருநாதர் "இதே வட்டத்தில் இருந்தால் போதுமா…? ஜீவாதாரப் பொருள் இருந்தால்தான் உயர்ந்தவனாக உலகம் மதிக்கும்… வாழ்க்கை நடக்கும்" என்று உணர்த்தினார்.
இப்பொழுது நான் எழுப்பிய வினாவிற்கு குருநாதர் கைதட்டிச்
சிரித்துவிட்டுச் சில வழிமுறை பாடங்களைத் தந்தார்.
1.பல கோடி உயிரணுக்களைக் கொண்ட இவ்வுடலின்
பிம்பத்திற்கு
2.“இவ்வுயிர் என்ற பொக்கிஷத்தினைப் போன்ற”
3.பலவாக உள்ள உலகத்தில் ஒன்றாகிய தெய்வ சக்தியைப்
பெறும் பொக்கிஷத்தைப் பெறும் ஞான அருள் பெறுங்களம்மா…!
உலகத்திலுள்ள பொருள் பொக்கிஷத்தை நாடி உங்கள் நாட்டம் செல்கிறதா…? என்பதனைத்தான் இன்று உங்களுக்கு சோதனையாக்கிக் காட்டினேன் என்று கூறி
அவரால் இன்னும் சில உபதேசங்களும் எங்களுக்கு அளிக்கப்பட்டன.