ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 19, 2024

வட துருவம் - ஈஸ்வரன் – புருவ மத்தி

வட துருவம் - ஈஸ்வரன் – புருவ மத்தி


1.தெய்வ சக்தி பெறுவதும் மனிதன் தான்.
2.பேயாக புழுவாகச் செல்லுபவனும் மனிதன் தான்.
3.மனித எண்ணத்தில் இருந்து தான் மனிதக் கருவின் வளர்ச்சி வாழ்க்கை மண்டலங்களில் வேரூன்றுகின்றது.
 
நம் பூமியின் ஈர்ப்புக் குணமும் வளர்ச்சி நிலையும் மனித குணத்தின் எண்ணச் செயலுக்குகந்ததாக உள்ளதினால்தான் மனிதன் இங்கு வாழ்கின்றான்.
 
மனிதன் காணாத அறியாத பல உயிரினங்கள் இப்பூமியில் வாழ்கின்றதென்றாலும் மனிதனின் தொடரிலிருந்து சென்ற வகைகள்தான் அவைகளும்.
 
இயற்கையில் பல மாற்றங்கள் இருந்தாலும் ஒன்றை ஒட்டி ஒன்று வளர்ந்து பலவாகிச் செயல்படும் நம் பூமியிலே பூமியின் இயற்கைத் தன்மை பலவாக உள்ளதற்கு இப்பூமி ஈர்க்கும் நிலை கொண்டு மனிதனின் தாவரங்களின் எண்ண சுவாச ஈர்ப்பின் நிலை வளர்ச்சி எப்படி மனிதனுக்கு உட்பட்டு வெளிப்படுகின்றதோ அதைப் போன்றுதான் பூமியின் ஈர்ப்பின் நிலைக்கொப்ப அந்தந்த இடங்களில் ஏற்படும் குண சீதோஷ்ண-தட்ப வெட்ப-நிலை என்று பல தடவை முந்தைய நூல்களில் உணர்த்தியுள்ளேன்.
 
ஆவியாகி... நீராகி... பிம்பமாகி.. மீண்டும் ஆவியாகி... நீராகி.. பிம்பமாகி...! முடிவில்லா மூன்று நிலைகளின் வட்டம் தான் இன்றுள்ள நிலை.
 
அன்று சித்தர்களினால் பண்டைய இராமாயணக் காவியங்களிலும் இன்னும் பல புராணங்களிலும் உள்ள உள் கருத்தை ஊன்றி நாம் அறிந்தோமானால்
1.கதையாகப் படைக்கப்பட்ட்தன் உள் ஞானத்தின் சத்தை எடுத்து ஆய்ந்து பார்த்தோம் என்றால்
2.“அதன் வடிகாலிலிருந்து பல உண்மைகளை நாம் அறியலாம்...”
 
இந்த உலகில் வட துருவ தென் துருவ நீர் நிலையினால் தான் இந்த உலகமே சுழன்று ஓடிக் கொண்டுள்ளது... வளர்ந்து கொண்டுள்ளது.
 
இந்தப் பூமியில் உள்ள விஷ அமில குணங்களைத் தன்னுள் ஈர்த்து இன்றைய மனிதனுக்கும் மற்ற ஜீவராசிகளுக்கும் வாழ வைக்கக்கூடிய திசை தான் வட திசையும் தென் திசையும்.
1.ஆனால் வட திசையை எதற்கும் ஆகாததாகச் சகுணம் பார்க்கின்றான்
2.தீயவை தீயவையுமல்ல... நல்லவை எல்லாம் நல்லவையுமல்ல…!
 
சிவன் விஷத்தை உண்டு...” தன் கழுத்திற்குக் கீழ் அது செல்லாமல்... தன் கழுத்திலேயே பாம்பாக வைத்துள்ளார்...! என்ற தத்துவத்தின் உண்மை என்னப்பா…?
1.வட துருவம் விஷக் காற்றுக்களை ஈர்த்து வைத்துக் கொண்டு மற்ற பாகங்களில் அதைப் பரவாமல்
2.விஷ குண அமிலத்தையே நன்மையாகச் செயல் புரிகிறது வட துருவ தென் துருவ திசைகள்.
 
வட துருவத்தையே ஈஸ்வரனாக்கிப் பாற்கடலில் பள்ளி கொண்டு அவரின் செயல் சிலாக்கிய முறைகளை எல்லாம் தத்துவக் கதைகளில் பிம்பத்தை உணர்த்திப் பிம்ப நாம காவியம் படைத்தார்கள் நம் முன்னோர்கள்.
 
நம் பூமியில் இந்தக் கோடிக்கணக்கான ஆண்டு சுழற்சி வட்டத்தில் பூமியின் சத்துப் பலனை இதற்கு முன்னாடி நம் பூமி பெற்றது. னால் இப்பொழுது உள்ள காலகட்டத்தில் அறிவின் வளர்ச்சி கொண்ட மனிதனால் நம் பூமியின் நிலையே பட்டுப் போன மரத்தைப் போல் உள்ளது.
1.பல ஆண்டுகள் பலன் தந்து தன் சக்தி வலுவிழந்து நிற்கும்
2.பட்டுப் போன மரத்தைப் போன்ற நிலையில் தான் நம் பூமியின் உள் ஜீவ நிலை உள்ளது.
 
பலனை எல்லாம் தந்தது. அந்தப் பலனை நாம் பலவாகப் பிரித்து எடுத்து விட்டோம். பின் இன்றைய நிலை எப்படியப்பா இருக்கும்...?
 
நம் பூமியின் வட துருவ தென் துருவ திசைகளிலும் அதிகப்படியான விஷத் தன்மையின் நிலையினால் அதை வடிகட்டி இது நாள் வரை நம் பூமிக்குச் சுத்தமாக்கித் தந்த காற்றின் நிலையே இன்று மாறி விட்டது.
 
வட துருவமும் தென் துருவமும் எப்படிக் விஷக் காற்றைத் தன்னுள் எடுத்துச் சுத்தப்படுத்தித் தருகிறது என்பீர்…?
 
மாம்பழத்திலும் இன்னும் சில வகைப் பழங்களில் அதன் உள் கொட்டை எப்படிக் கசப்பாகவும் பழங்கள் இனிப்பாகவும் உள்ளன…?
 
அதைப் போல் நம் பூமியின் இயற்கையே இந்தக் கரியமில வாயுவான விஷ அமிலக் காற்றைச் சுத்தப்படுத்தி வெளிப்படுத்தும் மையக் கோளங்களாக இந்த வட துருவ தென் துருவ நிலையுள்ளது. அதன் அமிலப் படிவமே மீண்டும் உறைந்து பல மாற்றங்கள் ஏற்படுகின்றன.
 
1.மாற்றங்களின் வழித் தொடரிலும் நம் பூமியின் விஷ அமில குணத்திலும் அதிகப்படியான வளர்ச்சி நிலை ஏற்பட்டுள்ளதினால்
2.வட துருவ தென் துருவ செயல் நிலையிலும்இந்த விஷத் தன்மை அதிகப்பட்டு விட்டது...!”
 
எதுவுமே... அதனதன் வளர்ச்சி நிலைக்கொப்ப தன் இயற்கையுடன் தானாக வளர்ந்துஒரு நிலையான வழி முறையுடன் வழி நடந்தால் தான்...” அதன் நிலையில் ஒன்று போல் இருக்க முடியும்.
 
குழந்தைப் பருவத்தில் அந்தந்த வயதுக்குகந்த அறிவு ஞான வளர்ச்சியை எப்படி வளர்த்துக் கொண்டு எந்த அறிவு செயல் முறை மனிதனாக வழி பெற்று அவன் வாழ்கின்றானோ அதன் தொடர் வாழ்க்கை தான் அவனால் வாழ முடியும்.
 
1.எண்ணத்திற்கு மேல் செயலை ஏற்றினால் செயல் முறையில் நிறைவைக் காண முடியுமா…?
2.அதிகப்படியான எண்ணச் சுமையை ஏற்றப்படும் பொழுது பைத்தியம் தான் பிடிக்கும் அந்த மனிதனுக்கு…!
3.அதைப் போன்ற நிலை தான் நம் பூமியில் வட துருவ தென் துருவ திசைகளுக்கு ஏற்பட்டுள்ளது.
 
அதனின் விளைவுகள் தான் சீதோஷ்ண நிலை மாற்றம்... பருவ நிலை மாற்றம்... அதிக வெயில் அதிக மழை அதிகக் குளிர்... எல்லாமே.