உலகின் சத்திய நியதியை எடுத்துச் சொன்னால்… ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இன்று இல்லை
இப்படி இப்பூமியில் பல காலமாய் ஏற்பட்டதின் தொடர்ச்சியில்
பல பல நிலைகள் நடக்கின்றன. ஒன்றைப் போல் ஒன்றில்லாமல் தான்… ஒன்றை அழித்து ஒன்று சக்தி கொண்டு இவ்வண்டமும் பேரண்டமும்
சுழலுகின்றன.
ஆனால் நம் மனித ஆத்மாக்கள் மட்டும் ஒருவரைப் பார்த்து
ஒருவர்
1.அவரைப் போல் நாம் வாழ வேண்டும்
2.மற்றவர்களைப் பார்த்து ஆண்டவன் அவர்களுக்கு
அபரிமிதமான சக்தியை அளிக்கின்றார் என்ற குறைவான எண்ணம் வேறு.
3.ஒன்றைப் போல் ஒன்றில்லை… ஒன்றில்லாமல்
ஒன்றில்லை என்ற நிலை இப்பூமிக்கே உள்ள பொழுது (அனைத்திற்குமே)
4.நாம் ஏன் ஒன்றின் எதிரொலியாய்
எதிர்ப்பார்க்க வேண்டும்.
ஆதி காலம் தொட்டே ஞானங்கள் உணர்த்தி வந்த நிலையிலும்
ஒவ்வொருவரும் அவர்களின் உண்மை நிலையைத்தான் உணர்த்தினார்கள்.
இன்று நம் ஞானத்தின் சக்தி பொதுவானது தான்.
ஒவ்வொருவருக்கும் அந்த ஞானத்தைப் பெறும் ஆற்றல் உள்ளது என்று உணராமல் “செக்குமாடுகளாய்ப் போல்” சுழன்று கொண்டே
உள்ளோம்.
ஞானிகள் வெளிப்படுத்தியதை இப்பூமியில் (இந்தியா) உள்ள பல
பாகத்தில் இதன் நிலையை எடுத்து அதில் ஆராயும் நிலையைப் (ஞானோதய நிலை) பெற்று பல
விஞ்ஞானத்தைத் தன் ஞானத்துடன் சேர்த்துச்
செயலாக்குகின்றார்கள்.
ஆனால் ஞானத்தை வளர்த்த பூமியிலுள்ள ஆத்மாக்கள் இன்று மற்றைய
மேலை நாடுகளின் செயற்கையின் வளர்ச்சியில் மயங்கி இங்கிருந்து அங்கு சென்று வந்தால்
இவ்வுலக அனுபவம் பெறலாம் என்று அற்ப ஆசையில் ஓடுகின்றார்கள்.
ஞானிகளையே அள்ளி வழங்கிய ஞானச் சுரங்கத்தை எடுக்கும்
பக்குவம் இன்றைய காலத்தின் ஜாதியின் அடிப்படையில் சொந்தமாக்கி பக்திக்குப்
பொருளைக் கொண்டு ஸ்தானங்கள் அமைக்கப்படும் கோயில்களில் ஏற்படும் இம்மதிப்பு
விகிதத்தைக் கொண்டு மங்கச் செய்து விட்டார்கள்.
இராமாயணத்தையும் கீதையையும் இவர்கள் ஜாதியின் அடிப்படையில்
சொந்தமாக்கி அதில் உள்ள கருத்துக்களையும் மாற்றிவிட்டனர்.
ஆனால் விக்ரமாதித்த ராஜாவின் கதையில் உள்ள வேதாள முனிவர்
செப்புவதாக உணர்த்திய அதன் கருத்துக்களை மக்களினால் விளையாட்டாகவும் விரும்பத்
தகாத முறையில் பேய் என்ற ஒதுக்கப்பட்ட நிலையிலும் ஒதுக்கிவிட்டவர்கள்…
1.விக்ரமாதித்தன் கதையில் உள்ள கருத்துக்களை
ஊன்றி அறிந்தால்
2.இவ்வுலக நடப்பின் உண்மைகளை அன்றே
கதையுருவில் ஆவி பேய் என்ற ரூபத்தில் உணர்த்தியுள்ளார்.
3.விக்ரமாதித்த ராஜாவின் கதையில் உள்ள
நிலைகள் உண்மை நிலைகள்.
ஒவ்வொரு மனிதனின் எண்ணத்திலும் இன்று பல பேயான குணங்களுக்கு
இடமளித்துவிட்டு பேய் என்று உருவமில்லாத நம்பப்படாத நிலைக்கு மட்டும்தான் இன்றைய
மனிதன் பயப்படுகின்றான்.
உலக நிலை எப்படி இருக்கின்றது பார்த்தீர்களா…?
அனைத்துமே ஆவி தான். பக்தி என்று சக்தி மாதா என்று
மற்றவர்கள் எழுதி வைத்த மந்திரங்களைப் புரியாமல் உருப்போட்டுப் பல பொருட்களை அச்சக்தி மாதாவுக்குப் படைத்துப் பூஜித்து
வணங்கச் சொன்னால் இன்றைய நம் மனிதர்கள் நம்புவார்கள்.
1.“உலகின் சத்திய நியதியை எடுத்துச் சொன்னால்… ஆவி என்றும் பேய் என்றும் சொல்பவர்களை ஒதுக்கித் தள்ளுவார்கள்…”
2.இன்று இங்குள்ள ஆத்மாக்கள் ஒன்றையே
சுற்றிச் செக்கு மாடுகளைப் போல் உழன்று உள்ள நிலையில் மறு சொல் ஏற்படுவது
கடினம்தான்.
நம் பூமியின் நிலையே அந்தந்த இடத்திற்குத் தகுந்த அமிலத்தை
ஈர்க்கும் குணத்தைக் கொண்டு இப்பூமியின் பல பாகங்களில் அதனதன் இயற்கை வளத்தின்
செழிப்புத் தன்மையும் கால நிலைகளும் உருவாகின்றன.
இயற்கைத் தன்மைக்கு மட்டும்தான் அம்மாற்றமா…? இயற்கையின் வளர்ச்சி பெற்ற மனித ஆத்மாவுக்கும் அதுவேதான்.
அந்தந்தப் பூமியின் காந்த சக்தியைக் கொண்டுதான் மனிதனின் எண்ண ஓட்டம் உருவ
வளர்ச்சி உணவு நிலை உறங்கும் நிலை அனைத்துமே இருந்திடும்.
இங்குள்ள மனிதனின் சுறுசுறுப்பிற்கும் மற்ற நாட்டின்
சுறுசுறுப்பின் தன்மைக்கும் மாறுபடும். இங்கு காய்க்கும் காய்கறி கனி வளங்களைப்
போல் மற்ற நாடுகளில் இருப்பதில்லை.
1.இங்குள்ளவை அங்கு வளர்வதில்லை… அங்குள்ளவை
இங்கு வளர்வதில்லை.
2.இதே விதையை அங்கு போட்டாலும் அப்படி அது
வளர்ச்சி எய்தினாலும் சுவையில் மாறுபடுகின்றது.
அங்குள்ள மனிதன் மிகவும் சுறுசுறுப்பாக உள்ளான். பல நவீன
செயற்கையகங்களை உருவாக்கி உள்ளான் என்றால் அது அவன் செயல் மட்டுமல்ல… அவன் பிறந்த பூமியின் அமில குணத்தில் அவன் உருவாக்குகின்றான்.
அவன் செயல் திறனும் அதன் நிலைக்கொப்பத் தொடருகின்றது.
நம் பூமியில் கலந்துள்ள இந்த ஞான ஒளியை அன்று உணர்ந்த
சித்தர்களின் தொடர்பிருந்தும், இன்று நாம் தவற
விட்டு சாமான்யர்களாய்ப் பெற முடியாத ஒன்றாக அதனைக் கருத்தில் கொண்டு
வாழ்கின்றோம்.
1.இன்னும் சிலர் சித்தும் ஞானமும் எதற்காக…?
வாழ்க்கையை அனுபவிக்க வேண்டாமா…? என்ற
உணர்விலேயே ஞானத்தைத் தவற விட்டு
2.இன்று பக்தி என்ற மமதைப் பிடியிலும்
அரசியல் என்ற கோமாளி விளையாட்டிலும் நம் செயலையெல்லாம் விரயமாக்கி வாழ்ந்து
வருகின்றோம்.