மற்றவர்கள் நிலையை… உயர்வு கொண்டும் தாழ்வு கொண்டும் எண்ணிடலாகாது
ஞான ஒளி பெறும் பக்குவத்திலும் ஒருவரைப் போல் ஒருவர் நிலை
இருந்திடாது. ஒவ்வொரு உடல் அமில குண வளர்ச்சியைக் கொண்ட பக்குவ மேம்பாட்டில்
வித்திடும் ஞான வளர்ச்சி தான் அதன் வழித் தொடர் பெறும்.
ஒன்றை ஒத்த விதை நெல்லை இரண்டு தோட்டக்காரர்கள் அவரவர்கள் ஊரில்
பயிர் செய்தாலும் அம்மண் நீர் அங்குள்ள சீதோஷ்ண நிலை அதைப் பயிர் செய்யும் மனித
ஆத்மாக்களின் எண்ண வளர்ச்சியின் வளர்ப்பு முறை இவை கொண்டுதான் அப்பயிர் வளர்ந்து
பலன் தரும்.
ஒரு தோட்டத்தில் வளர்ந்த விதை நெல்லையே மாறு கொண்ட ஊரில் பயிர்
செய்யும் பொழுது அதன் மகசூலும் சுவையும் வேறு கொண்டுதான் அமைகின்றது. அதைப் போல்
1.ஞானத்தின் ஈர்ப்பும் அதை ஈர்த்துச் செயலாக்கும்
முறைப்படித் தான்
2.நம் ஞான ஒளியும் பிரகாசிக்கும்.
ஒருவர் நிலையை வைத்து மற்றவர்கள் நிலையை உயர்வு கொண்டும் தாழ்வு
கொண்டும் எண்ணிடலாகாது.
எல்லோரும் (ஞானத்தின் வழித்தொடர் பெற்றவர்கள்) தான் பெற்ற ஞான வளர்ச்சியின்
முக்தி நிலை கொண்ட பிறகு… தனித்தனி ஒளிகளாக
வளர்ச்சி கொண்ட ஞான ஒளி எல்லாம்… சப்தரிஷிகள் போன்றோரின்
நிலை பெற்ற பிறகும் அவரின் வளர்ச்சி நிலை பெற்ற அமில குணத்தின்
வட்டச் செயலில் தான் செயல்படுகின்றார்.
1.எல்லோரும் பக்தி கொண்டு வணங்குவதும்… ஒன்றை வைத்து ஒன்று இல்லை
2.ஞான வளர்ச்சி பெறும் நிலையிலும்… ஒன்றை ஒத்த நிலையில் ஒன்று இல்லை.
3.சப்தரிஷியாய் நிலைக்கப் பெற்ற நிலையிலும் ஒன்றை ஒத்து ஒன்று இல்லை
4.மண்டலங்களாய் உருளும் மண்டலங்களும் ஒன்றை ஒத்து
ஒன்று இல்லை.
ஆனால் ஒன்றின் சக்தி கொண்டு ஒன்றி வாழும் இவ்வெல்லாமில்
எல்லாமுமே ஒன்றே சக்தியாக ஆதி சக்தி ஒன்றி உள்ளாள் என்பதனை உணர்ந்து…
1.எவ் ஆத்மாவையும் குறை கண்டும் சலித்தும் வாழாமல்
2.நம் நிலையில் ஏற்பட்டுள்ள அமில குணத்தின்
சக்தியின் வீரிய நிலையை
3.எவ்வழியில் அதிகமாகப்
பெற்று வழி பெற்றோமோ அதன் வளர்ச்சியில் ஞானத்தை வழிப்படுத்துங்கள்.
நம் முன்னோரின் கூற்றுப்படி விதைத்த விதைத்தானே முளைக்கும்
என்பதனை உணர்ந்து ஞானத்தின் வழித்தொடர் பெறுங்கள்.
காட்சி;-
சில கனிகளைப் பறித்து அப்படியே உண்ணுகின்றோம். சில கனிகளைத் தோல் நீக்கப்பட்டு உண்ணுகின்றோம். பலாப்பழம் போன்ற கனிக்கு அதன் முள்ளை அகற்றி அதற்குள் இருக்கும் சதைப் பகுதிகளைப் பிரித்துச் சுவையான பலாச்சுளையை எடுத்து கொட்டை நீக்கித்தான் உண்ணுகின்றோம்.
நம் முன்னோர்களால் “முக்கனியின்
சுவையை எடுத்து” என்ற சொல் நாமத்தின் அமுதிசையைக் கேட்டு மகிழ்ந்துள்ளோம். முக்கனியை வைத்து வணங்குகின்றோம்.
மாங்கனியை அப்படியே கடித்துச் சுவைத்து
உண்டு அதன் கொட்டையை வீசிவிடுகின்றோம். வாழைப்பழத்தின் தோலை
நீக்கி அதை அப்படியே சுவைக்கின்றோம். பலாச்சுளையை எடுக்கப் பல வேலைகளைச் செய்துதான் உண்ண முடிகின்றது.
இதன் உருவ நிலை என்ன…?
விளக்கம்;-
முக்கனிக்கும் சுவை உண்டு. ஒவ்வொன்றும்
ஒவ்வொரு பக்குவ நிலை கொண்டு தான் அதனை நாம் உண்ண முடிகின்றது.
அதைப்போல் நம் ஆத்ம ஞானத்தை இவ்வழித்தொடர்
எல்லாம் பெறும் நிலைப்படுத்தி
1.மாங்கனியை ஒத்த பூஜை
வழிபாட்டைப் பக்தியில் சுவைத்து மற்றவற்றைக் கொட்டையைப் போல் அகற்றி
2.நம் எண்ணத்தைச்
சுற்றியுள்ள உலக நிலைகளை வாழைப்பழத்தின் தோலைப் போல் நீக்கி
ஞான வழி போல் பழத்தை உண்டு
3.நம்முள் கலந்துள்ள பல அணுக்களின் முட்களை
நீக்கிச் சதையான நிலையை எண்ணாமல் நம்முள்ள சுவையான சுளையைச் சுவைத்திட
4.கொட்டை என்ற எதிர்நிலையை
நீக்கி சுவைத்திடல் வேண்டும் என்ற பக்குவத்தை உணர்த்த முக்கனியைப் படைத்தார்கள் ஞானிகள்.