உங்களைக் காக்கும் ஆற்றல்மிக்க சக்தி
இந்த உபதேசத்தைக்
கேட்பவர்கள் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது
1.கூட்டுத் தியானத்தின்
மூலமாக மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறக்கூடிய தகுதியை உங்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கின்றோம்.
2.அதைப் பதிவு செய்வதற்குத்
தான் பௌர்ணமி தியானமும் மற்ற அனைத்துமே.
மனிதனின் உணர்வில் கலந்த நஞ்சினை மாற்றி உணர்வுகளை
ஒளியாக மாற்றி முதல் மனிதன் அகஸ்தியன் துருவத்தை அடைந்து
துருவத்தின் சக்தியைத் தனக்குள் பெற்று ஒளிச் சரீரம் பெற்று விண்ணுலகம் சென்றது. அகஸ்தியன் துருவனாகித் துருவ
மகரிஷி ஆகி துருவ நட்சத்திரம் ஆனது
அவர்கள் உடல்களில் இருந்து வெளிப்படுத்தப்பட்ட நஞ்சினை
வென்றிடும் உணர்வினைப்
பின்பற்றிச் சென்றவர்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின்
ஈர்ப்பு வட்டத்தில் இன்றும் சப்தரிஷி
மண்டலங்களாகத் திகழ்ந்து கொண்டு உள்ளார்கள்
அங்கிருந்து வெளிப்படும் அந்த உணர்வின்
ஆற்றல் மிக்க சக்திகள் நம் பூமியிலே படர்ந்து
கொண்டிருக்கின்றது. அதனை நாம் பருக வேண்டும் என்றால்
1.அந்த ஆற்றல்மிக்க சக்திகளை நம் உடலில் பதிவு செய்த பின்பு தான்
2.அந்தச் சக்தியைப் பெறும் தகுதியைப்
பெறுகின்றோம்.
இப்பொழுது ஒருவருக்கொருவர்
திட்டிக் கொண்டால் அதைப் பத்து வருடம் கழித்து எண்ணினால் கூட
நமக்குள் அந்த எண்ணங்கள் உடனே கோபமும் ஆத்திரமும் வெறுப்பும்
இந்த உணர்ச்சிகள் உணர்வுகள் தூண்டப்படுகின்றது.
இதைப்போன்று தான் மகரிஷிகளின் அருள் சக்திகள் ஆழமாகப் பதிவாக்கிக் கொண்ட பின் ஒவ்வொரு நிமிடமும் மனிதன்
வாழ்க்கையில் நம்மை அறியாது வரும் சலிப்பு
சஞ்சலம் வேதனை வெறுப்பு போன்ற உணர்வுகள் நமக்குள் அழுக்காகச் சேர்வதை
நாம் மாற்றி அமைக்க முடியும்.
கூட்டு தியானங்களின் மூலமாக அனைவரும் நலம் பெற வேண்டும்
என்று பதிவாக்கிய ஆற்றல்மிக்க சக்திகள் இங்கே
பரவி உள்ளது அந்த ஆற்றலைப் பெற வேண்டும் என்று எண்ணி “வேறு எண்ணங்கள் இல்லாதபடி”
1.மகரிஷிகளின் அருள் சக்தியை நான் பெறுவேன்
2.என் உடல் முழுவதும் அதைப் பரவச் செய்வேன்
3.என்னை அறியாத வந்த இருளை நீக்கச் செய்வேன்
4.மகரிஷிகளின் ஆற்றலால்
இந்த மனித வாழ்வில் நலமும் வளமும் பெறுவேன்
5.என் தொழிலில் மன மகிழ்ச்சி அடைவேன்
6.என் சொல் எல்லோரையும் நலம் பெறச் செய்யும்
7.என் பார்வை அனைத்தையும்
நலம் பெறச் செய்யும்
8.என்னைப் பார்ப்பவர்களை அது நல்லவராக்கும் என்ற உணர்வுடன் நீங்கள் ஏங்கித் தியானித்தால் போதுமானது.
9.இந்தக் காற்றிலே பரவி உள்ள அந்த அருள் உணர்வுகள் “உங்களைக் காக்கும் உணர்வாக விளையும்…”
ஏனென்றால் அனைவரும் நலம் பெறும் சக்தியாகத் திகழ வேண்டும் என்று சதா நான் (ஞானகுரு) தியானம்
இருக்கின்றேன்… தவம் இருக்கின்றேன்
இதை மனதில் வைத்து நீங்கள் அனைவருமே தியானத்தின் மூலம் அந்த மகரிஷிகளின்
அருள் சக்தியைப் பெற்று… அவ்வப்போது ஆத்ம சக்தி செய்து தீமையை நீக்கும்படி… உணர்வுகளை ஒளியாக மாற்றும்படி வேண்டிக் கொள்கின்றேன்.