ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 3, 2024

உடலுக்குள் நோய் உருவாகும் விதம்

உடலுக்குள் நோய் உருவாகும் விதம்


உதாரணமாக வேதனை என்ற உணர்வினை அதிகமாக நாம் எடுத்தால் கோழிகுஞ்சுகளைப் பொரிப்பது போன்று நம் உடலில் இரத்தத்தில் அணுக்கள் உருவாகி விடுகின்றது.
 
எந்த வேதனைப்பட்டமோ அது தான் அதற்கு உணவு…! நம் உயிரால் கருவாக்கப்பட்டு அந்த அணுத்தன்மை அடைந்தால் பசிக்காக ஏங்கும் பொழுது உயிருக்கே எட்டுகின்றது.
 
நாம் எந்தக் கண் வழி வேதனைப்படுவோரைப் பார்த்தோமோ அதன் உணர்வு உயிரின் நிலை கொண்டு அந்த உணர்வால் உணர்ச்சிகளாக நாம் அறிகின்றோம்.
 
இருந்தாலும் ரத்த நாளங்களில் அது கருவாக உருவாகி விடுகின்றது. கருவா உருவானதோ அணுவாகி விடுகின்றது அணுவான பின் உணவுக்காக அது அந்த உணர்ச்சிகளைத் தூண்டும் போது உயிருக்கு வருகின்றது.
1.உயிருக்கு வந்தபின் கண்களுக்கே மீண்டும் வருகின்றது.
2.கண் வழி இந்த பூமியில் படர்ந்துள்ள எந்த மனிதனின் உடலில் இருந்து அந்த வேதனையான உணர்வுகள் வெளிப்பட்டதோ
3.அதை நமது கண்ணான காந்தப்புலன் கவர்ந்து நமது ஆன்மாவாக மாற்றுகின்றது.
4.நமது ஆன்மாவாக மாற்றிய பின் நமது உயிரில் உள்ள காந்தம் ழுத்து அந்த உணர்வினை ரத்தங்களில் கலக்கச் செய்கின்றது.
 
ரத்தங்களில் கலந்த பின் எத்தகைய வேதனை உணர்வு அணுவானதோ அந்த ரத்தத்திலிருந்து வேதனையான உணர்வுகளை உணவாக உட்கொள்கின்றது.
 
காற்று மண்டலத்தில் எல்லாச் செடி கொடிகளின் சத்துகளும் கலந்துள்ளது ஆனால் அதனதன் வித்துகளை நிலத்தில் ஊன்றும் பொழுது எப்படி நிலத்தின் துணை கொண்டு அதனதன் செடியின் சத்தைக் கவர்ந்து செடிகள் விளைந்து னதன் வித்துக்களை உருவாக்குகின்றதோ இதைப் போன்று தான்
1.நம் உடலுக்குள் அந்த ரத்தங்களில் சுழன்று வருவதை எந்தெந்த குணங்கள் கொண்டோமோ அந்த அணுக்கள் அதை உணவாக உட்கொள்ளும்.
2.அதன் வழி அது தன் இனத்தைப் பெருக்கிக் கொண்டே இருக்கும் வேதனை என்ற உணர்வை வளர்த்துக் கொண்டே இருக்கும்.
 
நம் உடலில் நுரையீரல் இருக்கிறது என்றால் வேதனை என்ற உணர்வுகள் அங்கே அந்த முட்டை வெடித்து அணுவாக உருவானால் அந்த இடத்திலிருந்தே ரத்தத்திலிருந்து வருவதை அந்த அணு உறிஞ்சி தன் இனத்தைப் பெருக்குகின்றது.
 
தன் இனமான அணுக்களைப் பெருக்கப்படும் பொழுது நல்ல அணுக்களால் உருவாக்கப்பட்ட நுரையீரல் பழுதடையத் தொடங்கி விடுகிறது.
 
நல்ல அணுக்களால் உருவாக்கப்பட்ட அந்த நுரையீரல் சசுருங்கத் தொடங்கினால் அதனால் உடலில் உபாதைகளும் சரியாக சீராக இயங்காதபடி நாளடைவில் இந்த அணுக்கள் பெருகப் பெருப் உடலும் சுருங்கத் தொடங்கிவிடும்.
1.வேதனையான உணர்வுகள் அதிகரிக்க அதிகரிக்க
2.உடலுக்குள் இருக்கும் அணுக்கள் அனைத்திலும் விஷங்கள் புகுந்து விடுகின்றது. கடும் நோயாகின்றது.